அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு FLASHING RED LIGHT OF THE SIGN OF HIS COMING ஜுன் 23, 1963 பிரன்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா. 1. நாம் நின்ற வண்ணம் ஜெபத்திற்காக சற்று நேரம் தலை வணங்குவோம். எங்கள் பரலோகப்பிதாவே, எங்கள் கண்கள் கண்ட அனைத்திற்காகவும், எங்கள் காதுகள் கேட்ட அனைத்திற்காகவும் உமக்கு நாங்கள் துதியை ஏறெடுக்கிறோம். நீர் சதாகாலங்களிலும் மகத்தான யேகோவா தேவனாயிருந்து வந்திருக்கிறீர் என்றும், இனிவரும் காலத்திலும் நீர் அவ்வாறே இருப்பீரென்றும் நாங்கள் அறிந்துள்ளபடியால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.  2. இயேசு கிறிஸ்து தம் குற்றமற்ற இரத்தத்தை சிந்தினதால் நாங்கள் மீண்டும் உம்முடைய திவ்விய ஐக்கியத்திற்குள் வர சாத்தியமானது; அவருக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்து கிறோம். அந்த இரத்தத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற பாவ நிவர்த்தியினால் நாங்கள் இப்பொழுது தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக இருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போ மென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் இருக்கிற வண்ணமாகவே அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப் போமென்று அறிந்திருக்கிறோம். நாங்கள் அவருக்கு ஒப்பாக, அவருடைய சாயலில் நாங்கள் நிற்போம் என்னும் வரைக்கும், அது ஒன்றே எங்களுக்குப் போதுமானதா யுள்ளது.  3. இப்பொழுதும் ஆண்டவரே, நாங்கள் இப்பிரபஞ்சத்தின் வேஷத்தைத் தரித்துக் கொள்ள விரும்பிவில்லை. எங்கள் ஆவி பரிசுத்த ஆவியின் மூலம் புதிதாகி, நாங்கள் மறுரூபமடைய விரும்புகிறோம். அவர் வந்து எங்கள் ஜீவியத்தை அவருடைய பாதுகாப்புக்குள் கொண்டு வந்து, இப்பூமியில் நாங்கள் வாழப்போகும் எஞ்சியுள்ள நாட்களில் அவர் எங்களை வழிநடத்தி, நாங்களும் அவருடைய மகத்தான நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்த அருள்புரியும்.  4. இவை அனைத்திற்கும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்து கிறோம். நாங்கள் கூடியிருக்கும் இந்த இரவில் நீர் வருகை தருவீ ரென்றும், நீர் வாக்குத்தத்தம் செய்துள்ளபடி எங்களைச் சந்திப்பீ ரென்றும் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென் (அமருங்கள்).  5. “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்" என்று தாவீது கூறினான் என்று நம்புகிறேன். இன்றிரவு இங்கு வந்துள்ளதற் காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். உங்களுடன் இன்று பேசக்கிடைத்த இந்த மகத்தான தருணத்தை என் சிலாக்கியமென்று கருதுகிறேன்.  6. சில ஒலி நாடாக்களை நான் பதிவு செய்து கொண்டிருக் கிறேன். சகோதரர் அந்த அறையில் ஒலிப்பதிவு செய்து கொண்டிருக்கின்றனரா என்று உறுதிப்படுத்திக் கொள்ள நான் திரும்பிப்பார்த்தேன். ஒலிப்பதிவு இயந்திரம் இயங்கிக் கொண் டிருக்கிறது. ஒலிநாடாக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன். சரி. இவ்வாறு ஒலிப்பதிவு செய்யும் நோக்கம் என்னவெனில், செய்திகள் இக்கூடாரத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியே அனுப்பப்படும் என்பதாக நான் வாக்களித்திருக்கிறேன்.  7. இன்று காலை நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். காலை கூட்டம் முடியும் தருவாயில், பிற்பகலில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. உங்களில் சிலர் அப்பொழுது இங்கிராமல் போய், அதைக் குறித்து கேள்விப்படாமல் இருக்கலாம். கூட்டத்தை முடிப்பதற்கென இந்த மேடையிலிருந்து நான் பேசிக் கொண் டிருந்தேன். அப்பொழுது சகோ. வே (Brother Way) என்னும் சகோதரன் அங்கு நின்று கொண்டு சிலருடன் கைகுலுக்கிக் கொண்டிருப்பதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அவருடைய மனைவி பதிவு செய்யப்பட்ட ஒரு நர்ஸ்.  8.... சகோ. வே தேவனுடைய தாசர்களில் ஒருவர். அவர் வேறு பணியும் செய்கிறார். ஆனால் அநேக ஆண்டுகளாக மிஷனரி ஊழியத்திற்கென வெளிநாடு செல்லவேண்டுமென்று அவருடைய இருதயத்தில் ஒரு அழைப்பு இருந்து கொண்டே வந்துள்ளது. அதற்கென தேவனிடமிருந்து கட்டளை பெறும்வரை, அவரைத் தேவன் இங்கு கொண்டு வந்து, அவர் இங்கு காத்திருக்க வேண்டு மென்று எண்ணங்கொண்டார். சில நாட்களுக்கு முன்பு அவருடனும் அவருடைய மனைவி யுடனும் இவ்விஷயத்தைக் குறித்து நான் பேச்சு வார்த்தை நடத்தினேன். 9. இன்று காலையில் நான், எனக்கு ஒருவித தன்மை மனோபாவம் (complex) இருப்பதாக அறிவித்தபோது, சகோ. வேவுக்கும் தன்மை இருப்பதாக குறிப்பிட்டேன். தன்மை ஜனங்களில் இருப்பது சர்வ சாதாரணம், நான் இவ்வாறு அறிவித்த சற்று பின்பு, சகோ. வேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவர் மரித்துப் போய் தரையில் விழுந்தார். அவருடைய மனைவி அங்கிருந்ததை நான் கண்டேன். நான் கவனித்தேன் .... அநேகர் மரித்தபோது, நான் அவர்களுடன் இருந்திருக்கிறேன் ... இதை குறித்து நான் சொல்லவேண்டியதில்லை.  10. இயேசு கிறிஸ்துவையும் அவருடைய வல்லமையையும் குறித்து நான் பெருமை பாராட்ட விரும்புகிறேன். அவர் செய்யாத ஒன்றைக் குறித்து நான் பெருமையாகப் பேசக் கூடாது. ஆனால் அநேகமுறை இயேசுகிறிஸ்து மரித்தோரை உயிரோடெழுப்பினதை நான் கண்டிருக்கிறேன். மருத்துவர்களும் அதற்கு சாட்சி பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர். உதாரணமாக, அண்மையில் கனெக்டிகட் என்னுமிடத்தில், அந்த பிரபல அரங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில், டாக்டர் பார்டன் (Doctor Barten) என்னும் கிறிஸ்தவ மருத்துவர் என்னுடன் மேடையில் அமர்ந்திருந்தார். அந்த கூட்டத்திற்கு புகழ்பெற்ற ஒரு கிறிஸ்தவ ஸ்திரீ வந்திருந்தாள். அவள் பணம் படைத்தவளும் கூட. அவள் என் இடது பாகத்தில் அமர்ந்திருந்தாள், நான் ஜெப வரிசையை அழைத்தபோது, இவள் உடனடியாக... நான் கவனித்தேன். 11. யாருக்காகிலும் இருதய துடிப்பு மெள்ள நின்று போனால், அவர்களுடைய கண்களை மூடினால், அவை மூடிக் கொள்ளும். ஆனால் மாரடைப்பின் காரணமாக சடுதியாக இருதயத்துடிப்பு நிற்குமானால், கண் விழிகள் (eyeballs) பின் பக்கம் திரும்பி, அதன் வெள்ளை பாகம் முன்னால் தள்ளி வரும். அந்த ஸ்திரீ கீழே விழுந்த போது, அதை நான் கவனித்தேன். உடனே அவர்கள் மருத்துவரை அழைத்தனர். அவரும் ஓடிச்சென்று நாடித் துடிப்பைப் பரிசோதித் தார். நம்பிக்கை இல்லையென்று அவர் தலையசைத்தார். அவர் தன் கையை அவள் மீது வைத்து, அவருடைய செவியை அவள் இருதயத்தின் மேல் வைத்து பார்த்தார். அந்த ஸ்திரீ மரித்து விட்டாள். அவள் தரையில் விழுந்தாள், அந்த ஸ்திரீயின் மகள் கூச்சலிடத் தொடங்கினாள். அது கூட்டத்திற்கு தடங்கலா யிருந்தது. நான் கூட்டத்தை தொடர்ந்து நடத்தினேன். ஏனெனில் இந்த விஷயத்தில் தேவனிடமிருந்து எனக்கு எந்த வார்த்தையும் கிடைக்கவில்லை, எனவே நான் தொடர்ந்து கூட்டத்தை நடத்தினேன்.  12. சகோ. பிரன்ஹாமை அழைக்கலாம் என்று அவர்கள் பேசிக் கொண்டது என் காதுகளில் விழுந்தது. பிறகு அவர்கள், “அவரை ஜெப வரிசைக்கு அழைக்க வேண்டாம். ஏனெனில் பகுத்தறியும் வரம் அவரில் இப்பொழுது கிரியை செய்து கொண்டிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டனர், அவர்கள், "சின்ன பிரன்ஹாமை அழைப்போமா?" என்றனர். அதாவது பில்லியை. அவனோ அந்த ஸ்திரீயின் சவத்தினருகில் செல்ல பயந்தான்.  13. யாராகிலும் மரித்தால், சவத்தினருகில் செல்ல ஜனங்கள் பயப்படுகின்றனர். அதில் ஒன்றுமில்லை. ஒருவர் மரித்தால் அவர் அங்கு இருப்பதில்லை. அவர் கடந்து சென்று விடுகிறார். அந்த ஸ்திரீ மரித்துப் போனதால், அவளருகில் செல்ல பில்லி பயந்தான்.  14. உடனே பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பேசினார். நான் இறங்கி அவள் சவத்தினருகில் சென்றேன். நான் “மேரி' என்று அவள் பெயர் சொல்லி அழைத்தேன்.  15. அவள், “ஆம், சகோதரன் பிரன்ஹாம்” என்று பதிலுரைத் தாள். அவள் உயிரோடெழுந்து விட்டாள். அவள் எங்களை முன்பு கண்டதேயில்லை. முதன்முறையாக அவள் எங்களை அந்த கூட்டத்தில் கண்டாள்.  16. நான்கு அல்லது ஐந்து ஆண்டுகட்கு முன்பு ஷவானோ என்னு மிடத்தில் நடந்த கூட்டத்தில்... ஒரு இரவு நான் ஆயுதங்கள் வைக்கப்படும் ஸ்தலத்தில் (armory) பேசினேன். அப்பொழுது கூட்டம் திரளாயிருந்தது. எண்பது வயது நிரம்பிய ஒரு வயோதிபரும் அவருடைய அழகிய மனைவியும்... அவர்கள் லூத்தரன்கள். அங்கிருந்த புகழ்பெற்ற லூத்தரன் ஆலயத்திற்கு அவர்கள் செல்வது வழக்கம். அதன் பெயர் இப்பொழுது எனக்கு ஞாபகம் வரவில்லை. அமெரிக்காவிலேயே மிக அதிகமான லூத்தரன் அங்கத்தினர்களைக் கொண்டது அது. அந்த இடம் லூத்தரன்களுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. நான் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த வயோதிபரின் தலை பின்னால் சரிவதையும், அவருடைய கைகள் கீழே விழுவதையும் கவனித்தேன். நாற்காலியில் அவர் மரித்துப்போனார். அவருடைய மனைவி, “யாராகிலும் எனக்குதவி செய்யுங்கள்” என்று கூச்சலிடத் தொடங்கினாள்.  17. நான், "எல்லோரும் இருக்கைகளில் அமருங்கள். அமரிக்கை யாயிருங்கள்'' என்றேன். பாருங்கள்? தேவனுடைய வார்த்தைக் காக நான் காத்திருந்தேன். நான்... சாத்தான்... பீட அழைப்பை விடுக்கப்போகும் அந்நேரத்தில் தான் சாத்தான் தன்னை வெளிப் படுத்தினான்.  18. நான் பீட அழைப்பு கொடுக்கும் நேரத்தில் குழந்தைகளும் கூட சத்தமிட்டு அழுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அது சாத்தான். உங்களில் ஆவிக்குரியவர்கள் அதைப் புரிந்து கொள் வார்கள்.  19. தேவன் அந்த வயோதிபரின் பெயர் என்னவென்பதை எனக்கு வெளிப்படுத்தினார். அவருடைய பெயரைக் கூப்பிட்ட மாத்திரத்தில் அவருடைய உயிர் திரும்ப வந்தது.  20. இன்று காலை நான்... பாருங்கள்? மரித்தோரை கர்த்தராகிய இயேசு அநேக முறை உயிரோடெழுப்பினதை நான் கண்டிருக் கிறேன். மெக்ஸிகோவில் அந்த சிறு குழந்தை காலை 9 மணியளவில் மரித்து போனது. இரவு 10 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் அது உயிர் பெற்றது. மருத்துவர்கள் அது உண்மையென்று சாட்சி பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளனர். அந்த குழந்தை நிமோனியா வியாதியில் மரித்துப் போனது என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த வரையிலும், அந்த குழந்தை இன்னும் உயிரோடிருக்கின்றது. இது ஏறக்குறைய முப்பது அல்லது நாற்பதாயிரம் ஜனங்களின் முன்னால் நிகழ்ந்தது.  21. இன்று காலையில் சகோ. வே அமர்ந்திருந்தபோது... அவரைக் கவனித்தேன். அவர் இங்கு எங்கோ அமர்ந்திருந்தார், நாங்கள் 'மகிமை, மகிமை, அல்லேலூயா' என்னும் பாட்டைப் பாடி ஒருவரோடொருவர் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோது, அவர் நின்று கொண்டிருந்தார், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை நான் கண்டேன். அவருடைய தலை பின்னால் சரிந்தது .... சகோ. வேவுக்கு சாதாரணமாக மயக்கம் வருவதில்லை. அவர் பின்னால் விழுவதை நான் கவனித்தேன். அவருடைய மனைவி - பதிவு செய்யப்பட்ட நர்ஸ் - அவருடைய நாடித்துடிப்பைப் பரிசோதித் தாள். அவள் அலறத் தொடங்கினாள். அவர் உயிர் பிரிந்துவிட்டது.  22. அப்பொழுது நமது சபைக்கு வரும் கறுப்பு சகோதரியான சகோதரி நாஷ் என்பவளும் மற்றோரும் அங்கு செல்லத் தொடங்கினர், சகோதரி வே மேடைக்கு வரப் புறப்பட்டாள். நான், “எல்லோரும் அமரிக்கையாயிருங்கள், ஆசனத்தில் அமருங்கள்” என்றேன். இம்மாதிரி சமயங்களில் நீங்கள் உணர்ச்சி வசப்படக் கூடாது. நீங்கள் உணர்ச்சி வசப்பட வேண்டு மென்பதே சாத்தானின் நோக்கமாகும். நீங்கள் காத்திருந்து, அவர் என்ன சொல்லுகிறார் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். யாராகிலும் மகிமையில் பிரவேசித்தால், நல்லது, என்றாவது ஒரு நாளில் நாமும் அங்கு செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம், அப்படி மகிமையில் பிரவேசிப்பதற்கு சபையைக் காட்டிலும் சிறந்த ஸ்தலம் எதுவுமில்லை. தேவனுடைய வீட்டிலிருந்து மகிமையில் பிரவேசிப்பது நல்லது. இந்த மனிதனின் தலை பின்னால் சரிந்தது. அவர் மயங்கி விட்டார் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் நான் கவனித்தபோது, அவருடைய கண்களின் கீழ்பாகம் முன்னால் தள்ளியிருந்தது. அந்நிலையில் உங்களால் அவருடைய கண்களை மூட முடியாது. இருதயம் திடீரென்று நின்று போவதால் அப்படி ஏற்படுகிறது. நான் அவரருகில் சென்றேன். யாரோ தயவுள்ள ஒருவர் அவரைப் படுக்க வைக்க தலையின் கீழ் ஏதோ ஒன்றை வைத்துக் கொடுத்திருந்தார். அவருடைய இருதயத்துடிப்பு நின்று போயிருந்தது. அவருடைய முகம் என் கோட்டின் நிறத்தைப் போல் கருமையாயிருந்தது. அவருடைய கண்கள் பின்னால் சொருகியிருந்தன. மாரடைப்பைக் குறித்து எனக்குத் தெரியும். அதனால் என்ன நேரிடுமென்று நானறிவேன். நான் அவருடைய நாடித்துடிப்பைப் பரிசோதித்தேன்; நாடித் துடிப்பே இல்லை. அவருடைய மனைவியும் ... ஒரு பதிவான நர்ஸ் - நாடித் துடிப்பைப் பரிசோதித்துப் பார்த்தாள். அது நின்றுபோயிருந்தது.  23. அன்றொரு நாள் நான் சகோ. வேவுடன் இருந்தபோது, அவருடைய இருதயத் துடிப்பு சரியாக இல்லையென்பதை நான் பகுத்தறிந்தேன். “அதுதான் இது'' என்று நான் உணர்ந்து கொண்டேன். அவர் மேல் என் கைகளை வைத்து, “அன்புள்ள தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரனின் ஆத்துமா- அவருடைய உயிர் - திரும்ப வரும்படி அழைக்கிறேன்” என்று ஜெபித்தேன். நான் கூறுவது உண்மையென்று யேகோவா தேவன் அறிவார். வேதமும் எனக்கு முன்பாக சாட்சியாயுள்ளது. நான் எதையாகிலும் தவறாகக் கூறினால், நியாயத் தீர்ப்பின்போது அதற்கு நான் பதில் கூற நேரிடும். நான் நாடித்துடிப்பைப் பரிசோதித்த போது, அது ஐந்தாறு முறை, 'பம்ப், பம்ப், பம்ப, பம்ப், பம்ப்,' என்று வேகமாக அடித்து, பின்பு 'பம்ப்-பம்ப்-பம்ப்பம்ப்' என்று சாதாரணமாக அடிக்கத் தொடங்கினது. 24. அவர் வாயைத் திறந்து என்னிடம் பேச முயன்றார். அவருடைய நாவு குளறினது. “சகோ.பிரான்ஹாம்” என்று மாத்திரம் அவரால் கூற முடிந்தது. பிறகு அவர் உறங்கிவிட்டதாக எனக்குத் தோன்றினது. நான் மறுபடியும் நாடித் துடிப்பைப் பரிசோதித்துப் பார்த்தேன். அது சாதாரணமாக அடித்துக் கொண் டிருந்தது ... அவர் எங்கிருந்தார் என்று அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அவருடைய இருதயத் துடிப்போ சாதாரண நிலையி லிருந்தது. தேவன் அவரை உயிர் பெறச்செய்தார்.  25. எனவே, இதை நான் இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காகக் கூறுகிறேன். அவர் மாறாத தேவனாயிருக்கிறார்... இன்று காலை நான் நீண்ட நேரம் பிரசங்கம் செய்து, எனது சமயத்தைக் காட்டிலும் அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் களைத்துப் போனேன்... சகோ. வேவுக்கு இரண்டு காரியங்கள் சம்பவித்திருக்கலாம். அதாவது, நீண்ட பிரசங்கத்தைக் கேட்டு அவர் களைப்புற்றிருக் கலாம். அல்லது நான் 'தன்மை '(complex)யைக் குறித்து பேசினபோது - என் சகோதரனைக் குழப்பமுறச் செய்வதற்காக நான் அப்படி கூறவில்லை. எனக்கு ஒருவிதமான ‘தன்மை யுள்ளது என்றுதான் நான் அறிக்கையிட முயன்றேன். இன்றிரவு இங்கு குழுமியுள்ளவர்களிடம், “உங்களுக்குத் ‘தன்மை' இருப்பதாக உங்களில் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டால், ஏறக்குறைய எல்லா கைகளும் உயர்த்தப்படும். சகோ. வே, அது பகுத்தறியும் வரத்தால் நான் கண்டு கொண்டது என்பதை உங்களுக்குக் காண்பிக்கட்டும். 'தன்மை’ உங்களுக்கு இருப்பதாக அறிந்திருப்பவர்கள் கைகளையுயர்த்துங்கள் பார்க்கலாம். பாருங்கள்? நான் அவ்விதம் கூறினதால், அவரைக் கடிந்து கொண்டதாக சகோ. வே நினைத்து, அதன் காரணமாக அதிர்ச்சி யுற்றாரோ என்னமோ! அவர் மரித்துப் போனார். ஆனால் கர்த்தராகிய இயேசுவோ அவரை உயிரோடெழுப்பினார்.  26. பரி. பவுல் தன் காலத்தில் எந்த தேவனுக்குப் பிரதிநிதியா யிருந்தானோ, அதே தேவன்; ஒரு இரவு அவன் நீண்ட நேரம் பிரசங்கம் செய்தான் ... அப்பொழுது ஒரு மனிதன் கீழே விழுந்து மரித்துப் போனான். பவுல் அவனருகில் சென்று, தேவ கிருபை யினால், “அவனுடைய உயிர் அவனுக்குள் இருக்கிறது” என்று அங்கு குழுமியிருந்தோரிடம் கூறினான். அது நமக்கு இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது - நீங்கள் ஒருக்கால் அதை முன்பு கண்டிராமலிருந்தால்.  27. ஒருக்கால் இது காரணமாயிருக்கலாம் .... அதைக் குறித்து நான் பிற்பகல் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் இங்கு நின்று கொண்டு, என் இருதயப் பூர்வமாக உங்களுக்கு உண்மையையே கூறி வந்துள்ளேன். எனக்கு தன்மையுள்ளது என்பதை உங்களிடம் பகிரங்கமாக அறிக்கையிட்டு, என் ஜனங்களிடம் கொண்டுள்ள என் மனப்பான்மை மாறும்படி நீங்கள் ஜெபிக்க வேண்டுமென்று உங்களிடம் கேட்டுக் கொள்ளலாமென்று நினைத்தேன். அப்படி நேர்ந்தால், ஆண்டவர் அவர் காலத்தில் செய்ததை நானும் செய்ய வேண்டும். அவர் மிஷனரி ஊழியத்திற்காக என்னை இன்னமும் அனுப்பக்கூடும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, இந்த சம்பவம் நிகழ அவர் அனுமதித்து, அவர் இன்னமும் வியாதியஸ்தரை சுகப்படுத்தி, மரித்தோரை உயிரோடெழுப்புகிறார் என்பதைக் காண்பித்தார். நான் இதுவரை எதைப் பிரசங்கித்து தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து சாட்சியாக அறிவித்து வந்தேனோ, அதன் உறுதிப்படுதலாக இது அமைந்துள்ளதேயன்றி வேறல்ல. அவர் சகோ. ராபர்ஸனிடமும், மற்றுமொரு சகோதரனிடம் கூறியதற்கு இசைவாக இது அமைந்துள்ளது.  28. அதற்காக அவரை நாம் நேசிக்கிறோம். இன்றிரவு சகோ.வே நம்முடன் இருப்பதற்காக அவருக்கு நன்றியுள்ளவர்களாயிருக் கிறோம். சகோ. வே செய்ய வேண்டிய காரியங்கள் இன்னும் முடிவு பெறவில்லை. முடிந்து போயிருந்தால், அவர் இன்று காலை மகிமைக்குள் பிரவேசித்திருப்பார். சகோ. வே செய்ய வேண்டிய இன்னும் சில காரியங்கள் உண்டு. சகோ. வே அவர்களே, உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் மனைவியின் வாழ்க்கையிலும் தேவன் வைத்துள்ள திட்டத்தை உங்களுக்குக் காண்பிக்க வேண்டுமென்று சபையோர் அனைவரும், நானும் ஜெபித்துக் கொண்டிருப்போம். சமயம் வரும்போது அவர் உங்களை அந்தத் திட்டத்திற்குள் வைத்து விடுவார். சகோ. வே அவர்களே, அவர் நிச்சயம் அதை செய்வார் கிறிஸ்தவர்களாகிய நாமனைவரும் சகோ.வே வுக்காக நன்றியுள்ள வர்களாயிருப்போம். சபையே, அது சரிதானே? அவரும் சகோதரி வேவும் அவர்களுடைய ஊழியத்தில், அவர்களுடைய ஸ்தானத்தை கிறிஸ்துவுக்குள் கண்டு கொள்ள வேண்டுமென்று நான் ஜெபித்துக் கொண்டிருப்பேன்.  29. நான் சகோ. வேவுடன் பேச விரும்பினேன். அதற்கென நான் நேரத்துடன் வந்து, என்ன நடந்தது என்று கேட்டேன். அவருக்கு எதுவுமே தெரியவில்லை. அவர் மரித்து விழுந்து போனார்; அவ்வளவுதான். இங்குள்ளோர் யாராகிலும் ஆர்கன்ஸாஸில் செவ்வாய் முதல் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனரா என்று நான் கேட்கவேண்டுமென்று சகோ. வே விரும்பினார். அது ஒரு சிறிய கூட்டம். அங்கு ஒரு சில சகோதரர்கள் கூடுகின்றனர். அது எங்கோ ஒரு காட்டு பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது, அங்கு அநேகர் வரமாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில், உண்மையைக் கூறினால், நான் கூட்டத்தில் பங்கு கொள்ளப் போகிறேன் என்று அவர்களுக்குத் தெரியாது. எனவே, அங்குள்ள என் நண்பர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு தான் இதைக்குறித்து அறிவார்கள். யாராகிலும் இக்கூட்டத்திற்கு செல்ல வேண்டுமென்று தீர்மானித்து, உங்கள் காரில் ஒருவருக்கு இடம் இருக்குமானால், சகோ. வே உங்களுடன் செல்ல விரும்புகிறார். அவர் யாருக்கும் பாரமாயிருக்கமாட்டாரென்றும், அவருடைய செலவை அவரே அங்கு பார்த்துக் கொள்வாரென்றும் அறிக்கை விடும்படி என்னிடம் கூறினார். யாராகிலும் செல்வார்களானால், அவர் கூட்டத்தில் கலந்து கொள்வது தேவனுடைய சித்தமென் பதற்கு அது அடையாளமாயிருக்கும். அந்த மூலையில் அமர்ந் திருக்கும் சகோ. வேயை உங்களனைவருக்கும் தெரியும், யாராகிலும் கூட்டத்திற்குச் சென்று காரில் ஒருவருக்கு இடமிருந்தால், அவர் உங்களுடன் செல்ல விரும்புகிறார்.  30. கர்த்தருக்குச் சித்தமானால் அடுத்த ஞாயிறு இரவு - இல்லை, அடுத்த ஞாயிறு காலை - நான் திரும்ப வருவேன், அன்று ஞாயிறு பள்ளியை சகோ.நெவில் முடித்த பின்பு, கூடுமானால் மற்றுமொரு செய்தியை ஒலிப்பதிவு செய்யலாமென்று எத்தனித்துள்ளேன். அப்பொழுது, "உங்கள் வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியா யுள்ளதா?'' என்னும் பொருளின் பேரில் பேசவிருக்கிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், அச்செய்தியை அன்று ஒலிப்பதிவு செய்யலாம். 31. இன்றிரவு ஒலிப்பதிவு செய்யப்போவதாக நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன். இங்குள்ள போதகர் பிரசங்கமே செய்யாமல், நான் பேசுவதற்காக என்னை மேடைக்கு அழைத்து விட்டார். அவர்கள் ஒலிப்பதிவு செய்து கொண்டிருக்கும் போது, நீங்கள் களைப்படைந்து வெளியே செல்ல விரும்பினால், அமைதியாக வெளியே செல்லுங்கள். ஏனெனில் இங்குள்ள ஒலி பெருக்கிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. சிறு சப்தத்தையும் கூட அவை கிரகித்து விடும், நாம் சர்வதேச ஊழியத்திற்காக இந்த ஒலிநாடாக்களைப் பதிவு செய்கிறோம்.  32. இன்றிரவு பரி. மத்தேயு எழுதின சுவிசேஷம் 24 அதிகாரத்தி லிருந்து படிக்க விரும்புகிறேன். நாம் 32ம் வசனத்திலிருந்து தொடங்குவோம். அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள்; அதில் இளங்கிளைகள் தோன்றி துளிர்விடும் போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும் போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.  இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.  அந்த நாளையும் நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.  நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். மத். 24: 32-37  33. இப்பொழுது நாம் படித்த இவ்வேதபாகத்தில்- இந்த அதிகாரத்தின் முதலாம் பாகத்தில், சீஷர்கள் அவரை ஒலிவமலையில் சந்தித்து, "உலகத்தின் முடிவின் அடையாளம் என்ன? உம்முடைய வருகையின் அடையாளம் என்ன? ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு தேவாலயம் எப்பொழுது இடிக்கப்படும்?'' என்னும் கேள்விகளைக் கேட்டனர். இயேசு அவர்களுக்குப் பதிலளிக்கிறார்... பாருங்கள், இந்த முதலாம் வசனம்.... இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்படுகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்கு காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.  இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப் போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.  பின்பு அவர் ஒலிவமலையில்மேல் உட்கார்ந்திருக்கையில் சீஷர்கள் அவரிடத்தில் தனித்து வந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்கு சொல்லவேண்டும் என்றார்கள். மத். 24: 1-3 34. பாருங்கள்? அவர்கள் மூன்று கேள்விகளைக் கேட்டனர். அவர் அந்த மூன்று கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார், “ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதடிப்படிக்கு இடிக்கப்படும் காலம் எப்போழுது வரும்? உம்முடைய வருகையின் அடையாளம் என்ன? உலகத்தின் முடிவை குறித்தென்ன?” அநேக சகோதரர் இவை அனைத்தையும் அவருடைய வருகையுடன் இணைக்கும் தவறைச் செய்கின்றனர். அவர் மூன்று வித்தியாசமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்: ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு இடிக்கப்படும் காலம் எப்பொழுது வரும்? இவை எப்பொழுது வரும்? இவை எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகையின் அடையாளம் என்ன? உலகத்தின் முடிவில் என்ன சம்பவிக்கும்? பாருங்கள், மூன்று வித்தியாசமான கேள்விகள். முதலில் அவர் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராத படிக்கு இடிக்கப்படும். கேள்விக்கு பதிலளிக்கிறார். அதற்கு பதிலளித்து முடித்தவுடனே, அவருடைய வருகையின் அடையாளத்தைக் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கிறார். அதன் பின்பு, அவர் உலகத்தின் முடிவைப் பற்றிய கேள்விக்கு வருகிறார்.  35. இன்றிரவு நான் பேச விரும்புவது, அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு” என்பதாம். நாம் நோவாவின் காலத்தைக்குறித்து ஆராயப் போகிறோம். “அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.” இது என் சிந்தையைக் கவர்ந்தது. எனவே இதைக் குறித்து பேசலாமென்று நினைத்தேன். பேசும்போது குறிப்பிடுவதற்காக இங்கு அநேக வேதவாக்கியங்களை எழுதி வைத்திருக்கிறேன்.  36. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் இக்கேள்வி கேட்ட போது, அவருடைய வருகையின் அடையாளத்தை அவர்களுக்குத் தெரிவித்தார். உடனே அவர், "வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” என்றார். அவர், "அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதிலே இளங்கிளை தோன்றும் போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளெல்லாம் சம்பவிப்பதை நீங்கள் காணும் போது, காலம் சமீபமாகி விட்டது என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்த சந்ததி ஒழிந்து போகாது” என்றார். எந்த சந்ததி? இன்றிரவு நாம் பேசப்போகும், சத்தியத்தை விட்டு விலகிப்போன நிலையை (apostasy) காணும் அந்த சந்ததி.  37. "அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு” என்னும் என் பொருளை நினைத்துப் பார்க்கும் போது, ரயில் நிலையத்தில் ரயில் வண்டிக்காக காத்து நிற்பது என் நினைவுக்கு வருகிறது. நாம் ரயில் வண்டியில் ஏறுவதற்காக அங்கு நின்று கொண்டிருப்போம். நாம் ரயில் வண்டியின் சப்தத்தைக் கேட்பதில்லை, அல்லது அதைக் காண்பதில்லை. ஆயினும் அது வர சமயமாகிவிட்டது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஒருக்கால் ரயில் அதிகாரி ஒருவர், “அது வந்துசேரவேண்டிய நேரத்தில் வராது, அது சற்று தாமதமாக வந்து கொண்டிருக்கிறது, அது எப்பொழுது வந்து சேரும் என்று குறிப்பாக சொல்லமுடியாது, ஆனால் அது விரைவில் வந்து சேரும்” என்று சொல்லக்கூடும். அப்பொழுது நாம் கைகளை கால்சட்டையின் ஜேபிகளில் போட்டுக்கொண்டு, ரயில் நிலையத்தில் இங்குமங்கும் நடந்து, அல்லது சூட்கேஸின் மேல் உட்கார்ந்து கொண்டு, வேர்க்கடலை வாங்கி தின்றுக்கொண்டு, அங்குள்ளவர்களிடம் உரையாடிக் கொண்டிருப்போம். ஆனால் திடீரென்று ஏதோ ஒன்று நிகழ்கிறதை நாம் காண்கிறோம். ரயில் பாதையிலிருந்து ஒரு சப்தம் நமது திசையை நோக்கி வருகிறது. உடனே கை காட்டி மரம் கீழே விழுந்து, சிகப்பு விளக்கு எரியத் தொடங்குகிறது. அது என்ன? ரயில் வண்டி வெளிப்புறத்தை அடைந்துவிட்டது என்பதை அது காண்பிக்கிறது. நீங்கள் அந்த வண்டியில் ஏற வேண்டுமானால், வேர்க்கடலை பையை எறிந்து விட்டு, பேசுவதை நிறுத்திக்கொண்டு, சூட்கேஸை கையிலெடுத் துக் கொண்டு, அதில் ஏற ஆயத்தமாக வேண்டும். இல்லையென்றால் நீங்கள் விடப்படுவீர்கள், ஏனெனில் ரயில் வண்டி சில நிமிடங்கள் மாத்திரமே ரயில் நிலையத்தில் நிற்கும். அதன்பின்பு அது போய்விடும். அங்கு நின்று கொண்டு பேசிக் கொண்டேயிருப்பீர் களேயானால் நீங்கள் விடப்படுவீர்கள். 38. அப்படியிருக்க, சுவிசேஷ ரயில் வண்டி வெளிப்புறத்திற்கு வந்துவிட்டது என்றும் அது விரைவில் ரயில் நிலையத்தை அடையும் என்பதற்கு அறிகுறியாக பிரகாசிக்கும் சிக்னலை நாம் பார்க்கும் போது, நாம் எவ்வளவு அதிகமாக கவனமுள்ளவர்களாயிருக்க வேண்டும்! இன்றிரவு நாம் பிரகாசிக்கும் சிக்னல் விளக்கை குறித்து ஆராயும் போது... நமது ஆண்டவர் ஒலிவ மலையின் மேல் அமர்ந்து, என்ன வெல்லாம் நிகழும் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷ குமாரன் வரும் காலத்திலும் நடக்கும்" என்று குறிப்பிட்டார்.  39. நாம் சற்று பின்சென்று, இந்நாட்களில், நோவாவின் காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு ஒத்த சம்பவங்கள் நிகழ்ந் துள்ளதா என்று ஆராய்வோம். அப்படியிருக்குமானால், அண்டவர் கூறின அந்த நாட்களில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நாம் திட்டவட்டமாகக் கூறமுடியும். ஆதியாகமத்தில் காணப்படும் நோவாவின் நாட்களுக்கு நாம் செல்வோம். நீங்கள் என்னுடன் ஆதியாகமம் 6ம் அதிகாரத்திற்கு வேதாகமத்தைத் திருப்புங்கள். அந்த அதிகாரத்தில், வெள்ளத்தின் நாட்களைக் குறித்தும், அந்நாட்களிலிருந்த ஒழுக்கத்தின் நிலையைக் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பொழுது அதைப்படித்து, இந்நாட் களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். மனுஷர் பூமியின் மேல் பெருகத் துவங்கி...  40. முதலாம் வசனமே, அந்த நாள் அருகாமையிள்ளது என்பதை அறிவிக்கும் பிரகாசிக்கும் சிகப்பு விளக்காய் அமைந்துள்ளது. ஏனெனில் ஜனத்தொகை அதிவேகமாகப் பெருகி, தங்குவதற்கு இடம் கிடைக்காமலிருக்கும் காலம் வேறெதுவும் சரித்திரத்தில் இல்லை எனலாம். ஜனத்தொகை அதிகவேகமாய் பூமியில் இப் பொழுது பெருகிக் கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் ஜனத் தொகை பெருகிக் கொண்டே சென்றால், இன்னும் இருபது ஆண்டுகளில் ஜனங்களுக்கு ஆகாரமே கிடைக்காதென்று விஞ்ஞானம் கூறுகிறது. 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' என்னும் பத்திரிகையில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். ஜனங்களுக்கு ஆகாரமே கிடைக்க முடியாத அளவுக்கு அவர்கள் பலுகிப் பெருகுகின்றனர். 41. நாம் சுற்று முற்றும் பார்ப்போமானால், ஒரு காலத்தில் வனாந்தரமாய் கிடந்த இடங்களெல்லாம் இப்பொழுது பட்டினங் களாக மாறிவிட்டன. கருத்தடையை இவ்வளவு மும்முரமாக அமூலாக்கின பின்பும் இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிக்காகோவில் மாத்திரம் அறுபது நாட்களில் முப்பதாயிரம் கருச்சிதைவு நடத்தியதாக கூறப்படுகிறது. இவை பதிவு செய்யப்பட்ட கேஸ்கள் மாத்திரம். அப்படியானால் பதிவு செய்யப்படாதவை களின் எண்ணிக்கை எவ்வளவாயிருக்கும்? நாற்பது லட்சம் ஜனத் தொகை கொண்ட ஒரு பட்டினத்திலேயே கருச்சிதைவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை இத்தனை இருக்குமானால், முழு உலகிலும் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்? அப்படியிருந் தும்கூட, ஜனத்தொகை கட்டுக்கு மிஞ்சி பெருகிக் கொண்டு வருகிறது.  42. இந்தியாவில் ஜனத்தொகை அதிகரித்துக்கொண்டே வரு வதால், அங்கு ஆண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து, அவர்கள் மூலம் பெண்கள் கருத்தரிக்க முடியாமல் செய்து விடுகின்றனர். இப்பொழுது இந்தியாவின் ஜனத்தொகை நாற்பத்தேழு கோடி.  43. சீனா தேசத்தில் ஜனத்தொகை இன்னும் அதிகமாக பெருகி யுள்ளது - ருஷியாவில் உலகின் இதர பாகங்களிலும் கூட மனிதர் பூமியின் மேல் பெருகத் தொடங்கின போது... பாருங்கள்? இப் பொழுது நாம் வெள்ளத்திற்கு முன்பிருந்த காலத்திற்குச் செல் வோம். ... அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்த போது,  தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரிய முள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்து கொண்டார்கள்.  அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனு ஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.  அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவ குமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால் இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.  44. என்னே ஒரு பொருளை இங்கு நாம் பெற்றிருக்கிறோம்! பாருங்கள்? நீங்கள் முதலாவதாக கவனிக்க வேண்டியது என்ன வெனில், தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரிய முள்ளவர்களென்று கண்டனர். நான் முழு உலகையும் குறிப்பிடுகிறேன். இந்நாட்களில் பெண்கள் அனைவரும் அழகாயிருப்பது போன்று வேறெந்த காலத்திலும் இல்லையென்பதே என் அபிப்பிராயம். 45. அநேக ஆண்டுகட்கு முன்பு, ஒரு அழகான பெண்ணைப் பார்ப்பதே ஆபூர்வம் என்று, உங்களில் வயோதிபரான ஆண்களும் பெண்களும் அறிவீர்கள். ஆனால் இன்றைக்கோ அழகாயிராத பெண்களைக் காண்பதே அரிது. ஏனெனில் அவர்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, அழகுப்படுத்தும் சாதனங்களை உபயோகித்து, பாலுணர்ச்சியை தூண்டும் ஆடைகளை அணிகின்றனர். அவர்கள் தங்களை அவ்விதம் பகட்டாகக் காண்பிக்கின்றனர். வேறொரு காரியம்; காலச்சக்கரம் அவர்களை இந்நாட்களுக்குக் கொண்டு வந்து, வேதம் கூறியுள்ளது போல், சௌந்தரியமுள்ள பெண்கள் நாளடைவில் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.  46. நான் சிறுவனாக பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, சிறு பெண்களை நான் கண்டதுண்டு. நான் வாலிபனாயிருந்த போது, அக்காலத்தில் வாழ்ந்த வாலிபப் பெண்களை நான் நினைவு கூருகிறேன். இருபத்தைந்து ஆண்டுகட்கு முன்னர், ஒரு கூட்டம் வாலிபப் பெண்களில் ஒரு பெண் மாத்திரமே அழகில் சிறந்தவளாய் இருப்பாள். அவளுடன் வெளியில் செல்ல எல்லா வாலிபர்களும் போட்டியிடுவார்கள். ஏனெனில் அவள்தான் அந்த கூட்டத்தில் அழகில் சிறந்த ராணி. பட்டினம் முழுவதிலும் அப்படிப்பட்ட இரண்டு அல்லது மூன்று அழகிய பெண்கள் இருப்பார்கள். ஆனால் இப்பொழுதோ, எல்லாப் பெண்களுமே அழகாயுள்ளனர். அது வேதவாக்கியத்தின் நிறைவேறுதலாய் அமைந்திருந்து, காலம் சமீபமாயுள்ளது என்பதை அறிவிக்கும் பிரகாசிக்கும் சிகப்பு விளக்காயுள்ளது. 47. அவர்கள் உதடு சாயம், (lipstick) அழகுப்படுத்தும் சாதனங்கள் (make-up) போன்றவைகளைக் கண்டுபிடித்துள்ளனர். எனவே இயற்கையாக அழகு குறைந்த பெண்களும் கூட இவைகளை உபயோகித்து அழகாக காட்சியளிக்கின்றனர்.  48. அழகுபடுத்தும் சாதனங்களை உற்பத்தி செய்யும் மாக்ஸ் ஃபாக்டர் (Max Factor) தொழிற்சாலை இரவும் பகலும் ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இன்று மளிகை சாமான்களுக்குச் செலவு செய்வதைக் காட்டிலும் அழகுபடுத்தும் சாதனங் களுக்கு அதிகம் செலவழிக்கப்படுகிறது. அது உண்மை . நமது பெண்களை அழகுபடுத்த ஒவ்வொரு ஆண்டும் எத்தனை கோடி டாலர்கள் செலவாகிறது என்று சரியாக எனக்கு ஞாபகமில்லை.  49. அதற்கு விரோதமாக நான் ஒன்றும் சொல்லவில்லை. காலம் சமீபமாயுள்ளது என்பதை அறிவிக்கும் பிரகாசிக்கும் சிகப்பு விளக்காய் அது அமைந்துள்ளது என்பதை மாத்திரமே வலியுறுத்த விரும்புகிறேன். ஏனெனில் இயேசு, “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ , அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்" என்று கூறியுள்ளார். பாருங்கள், அதே காரியம்.  50. பாருங்கள், ஜனங்கள் பெருகத் தொடங்கினபோது, மனுஷ குமாரத்திகள் சௌந்தரியமுள்ளவர்களாயிருந்தனர். தேவகுமாரர் அவர்களுடைய அழகைக் கண்டு, அவர்களுக்குள்ளே பெண்களைக் கொண்டனர். இதை நான் என் சுயமாய் கூறவில்லை. நான் வேதத் திலிருந்துதான் படிக்கிறேன். ஏனெனில் நாம் அதியாகமத்திற்கு சென்று, அந்நாட்களை இந்நாட்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்று இயேசு கூறியுள்ளார்: ஜனத்தொகை பெருக்கம், பெண்களின் சௌந்தரியம் போன்றவைகளை.  51. அது ஒரு பெரிய அடையாளம். அது ஒரு எச்சரிக்கை. யேகோவாவின் எச்சரிக்கை.  52. இது நிகழ்ந்தவுடனே.... வேதாகமத்தை பரிசுத்த ஆவி யானவர் எழுதினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இயேசுவும் பரிசுத்த ஆவியின் பரிபூரணத்தைக் கொண்டவராய் வல்லமை பெற்றிருந்தார். அவர் பரிசுத்த ஆவியின் மூலமாகவே பேசினார். வேதவாக்கியங்களும் பரிசுத்த ஆவியினால் எழுதப்பட்டவை ஆதியாகமம் 6ம் அதிகாரத்தை எழுதின அவரே, காலம் சமீபமா யுள்ளதா என்பதை அறிந்து கொள்ள, நாம் ஆதியாகமம் 6க்கு சென்று அதை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டுமென்று மத்தேயு 24ல் கூறியுள்ளார். 53. பூமியின் மேல் மனிதர் பெருகுகின்றனர். கருத்தடை போன்ற எதுவும் அதை தடுத்து நிறுத்தமுடியவில்லை. அது பெருகிக் கொண்டே இருக்கின்றது. ஏனெனில் நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். 54. கவனியுங்கள், பெண்கள் சௌந்தரியமுள்ளவர்களாயிருந் தனர் என்று உடனே கூறப்படுகிறது. அதை நாம் ஒப்பிட்டுப் பார்த்து, அதே போன்று இன்றுள்ளது என்பதை நாம் நிரூபிக்க முடியும். 55. நமது முற்பிதாக்கள் சமவெளியைக் கடந்து வந்த போது எடுக்கப்பட்ட அவர்களுடைய புகைப்படங்களை நான் கண்டிருக் கிறேன். அந்த பெண்ணின் பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை. அவள் போஸ்டனிலிருந்து சான்பிரான்ஸிஸ்கோ வரை, நாட்டிலேயே அழகிற் சிறந்த பெண் என்ற பெயர் பெற்றிருந்தாள். அவளுடைய பெயர் பெர்ல் வைட் (Pearl White) என்று நினைக் கிறேன். அவள் அநேக ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்து வந்தாள், அவள் தன் காதலனான ஸ்காட் ஜான்ஸன் என்பவனால் கொல்லப் பட்டாள். நாட்டிலேயே அழகிற் சிறந்தவள் என்னும் பெயர் பெற்ற அவளுடைய புகைப்படத்தை நீங்கள் காண நேரிட்டால், அதைப் பார்க்கவே விரும்ப மாட்டீர்கள். இன்று தெருக்களில் செல்லும் பெண்களுக்கு முன்பாக அவள் புராதன பொருளை (antique) போல் காட்சியளிப்பாள். இன்று தெருவில் செல்லும் எந்தப் பெண்ணும் அவளைக்காட்டிலும் மூன்று மடங்கு அழகுள்ள வளாயிருக்கிறாள். பாருங்கள், பெண்களின் சௌந்தரியம் அதிகரித்துவிட்டது.  56. நமது பெண்கள் இதை உணருகிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை... அதனால் தான் இந்த ஒலிநாடா வெளியே செல்ல வேண்டுமென்று விரும்புகிறேன்.... நீங்கள் போடக் கூடாது... நீங்கள் அழகாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன், ஆனால் நீங்கள் இயற்கையாக அழகாயிருக்க வேண்டும். நீங்கள் அழகு படுத்தும் சாதனங்களை உபயோகித்து, வெளித்தோற்ற அழகைப் பெற்றிருக்கக் கூடாது. இந்த சில அழகான பெண்கள் முகத்தைக் கழுவ நேரிட்டால், அவர்களுடைய அழகெல்லாம் கலைந்து போய், அவர்கள் வித்தியாசமாகக் காணப்படுவார்கள் - அவ்வாறே அவர்கள் உடுத்த வேண்டிய விதத்தில் நாணயமாக உடுத்தினாலும். ஆனால் அவர்கள் அவ்விதம் செய்வதில்லை, அதற்கு நாம் சற்று பின்பு வருவோம். ஆனால் இது பிரகாசிக்கும் சிகப்பு விளக்காயுள்ளது.  57. கவனியுங்கள், மனிதர் பூமியில் பெருகி, பெண்கள் சௌந் தரியமுள்ளவர்களாக ஆன சமயத்தில் தான் கர்த்தர், "என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை” என்றார், உங்களால் தேவனுடைய கரத்தைக் காண முடிகிறதா? “என் ஆவி ...'' மனுஷகுமாரத்திகள் சௌந்தரியமுள்ளவர்களாயிருந் தனர். தேவகுமாரர் அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண் கொண்டனர். அவர், "என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவனுடைய நாட்களை நான் சுருக்குவேன்" என்றார். இப்பொழுது 4ம் வசனம்  அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால் இவர்கள் அவர்களுக்கு பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான் களானார்கள். 58. கவனித்தீர்களா? அவர்கள் விவாகம் செய்து கொண்டதாக இங்கு கூறப்படவில்லை. கவனியுங்கள் ! தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளோடே கூடினர் - விவாகம் எதுவுமில்லை. நீங்கள் மூல கிரேக்க மொழியில் இதைப் பார்த்தால்... அதை இங்கு எங்கோ எழுதி வைத்திருக்கிறேன். இரண்டாம் வசனத்தில், அவர்களுக் குள்ளே தங்களுக்கு மனைவிகளைத் தெரிந்து கொண்டார்கள்'' "they took unto them wives'' அதாவது "தங்களுக்கு மனைவிகளைத் தெரிந்து கொண்டார்கள்'' என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது. (ஆனால் தமிழ் வேதாகமத்தில் "தங்களுக்கு பெண்களைத் தெரிந்து கொண்டார்கள்" என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). இன்று பிற்பகல் நான் கிரேக்க வேதாகமத்தில் தேடிப் பார்த்தேன், அவர்கள் "தங்களுக்குப் பெண்களைத் தெரிந்து கொண்டார்கள்" என்று அதில் எழுதப்பட்டுள்ளது - 'மனைவிகளை' அல்ல, நீங்கள் வேண்டுமானால் கிரேக்க வேதாகமத்தைப் படித்து, நான் கூறுவது உண்மையா இல்லையா என்று தெரிந்து கொள்ளுங்கள். 59. "அவர்களுக்குள்ளே தங்களுக்கு பெண்களைத் தெரிந்து கொண்டார்கள்'' - மனைவிகளையல்ல. இன்றுபோல் அன்று அவர்களை சுயாதீன காதலர்களாக (free lovers) தெரிந்து கொண் டார்கள், அதாவது, இன்று போல் அன்றும் அவர்கள் காதலர் களாகவே இருந்து வந்தனர். அவர்களுடைய விருப்பப்படி சென்று, எந்த பெண்ணையும் உடலுறவுக்காக தெரிந்து கொண்டனர். 60. தேவகுமாரர்கள்... இவர்கள் விழுந்து போன தேவ தூதர்கள் என்பது அநேகரின் கருத்து, ஆணும் பெண்ணும் இருவரும். அது முற்றிலும் தவறு என்று காண்பிக்க விரும்புகிறேன். தேவ தூதர்கள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்ததாக வேதம் கூறவில்லை. உங்களுக்கு வேத ஆதாரம் தேவையானால், மத்தேயு 22:20 போன்றவையுள்ளன.  61. பெண் தேவதூதர் என்பது கிடையாது. ஆகவே தான் பெண் பிரசங்கியும்.... 'தூதன்' (angel) என்றால் தூதைக் கொண்டு வருபவன்' என்று அர்த்தம். ஆனால் இன்றைக்கோ நாட்கள் அன்றிருந்தது போல் மாறிவிட்டன. நான் சில சரித்திரப்பிரகார மான குறிப்புகளை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். இன்னும் சில நிமிடங்களில் அதற்கு நாம் வரலாம்.  62. கவனியுங்கள், நோவாவின் காலத்திலிருந்த பெண்கள் - அவர்களைக் குறித்து அந்நாளில் அதிகம் பேசப்பட்டிருக்கும் பாருங்கள், தேவகுமாரர் (சேத்தின் குமாரர்) காயீனின் குமாரத் திகளை மிகவும் சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டனர். ஏன்? ஏனெனில் காயீனின் குமாரத்திகள் பொல்லாதவர்களாயிருந்தனர். தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர் களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்து கொண்டார்கள். அப்பொழுது தேவகுமாரர் தேவனிட மிருந்த தங்கள் மேன்மையிலிருந்து கீழே விழுந்து, பெண்களின் பின்னால் திரிகின்றவர்களானார்கள். இன்றைய நிலை அதுவல்ல வென்றால், வேறென்னவென்று எனக்குத் தெரியவில்லை. அது உண்மை .  63. மனிதன்... நமது சபைகளையும் கூட இன்று பாருங்கள். நீங்கள் விரும்பினால், எல்லாவற்றையும் பாருங்கள். அந்நாளில் எங்கு பார்த்தாலும் அழகான பெண்கள் இருந்திருப்பார்கள். ஆண்கள் அவர்களுக்கு அடிமைகளாயினர் என்று வரலாறு கூறுகின்றது. பெண்களுடைய அழகுக்கு ஆண் அடிமையானான். அவர்கள் பெண்களுக்கு கோயில்களைக் கட்டி, அவர்கள் அவர்களைக் கும்பிட்டனர். சற்று யோசித்துப்பாருங்கள்! அவர்கள் அக்காலத்தில் பெண்களுடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் வழிபட்டனர். அதுதான் சரித்திரம். 64. அதை இந்நாட்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். என் சகோதரனே, அதுதான் இன்றும் சம்பவிக்கின்றது. மனிதன் பெண்களை கும்பிடுகிறான். நமது நாட்டிலும் கூட, ஜனாதிபதியைக் காட்டிலும் திருமதி கென்னடி இரு மடங்கு அதிகமாக மதிக்கப் படுகிறாள். அது உண்மை . ஒரு மனிதனுக்கு கவர்ச்சியான மனைவி அமைந்துவிட்டால், அவ்வளவுதான்.  65. இப்பொழுது கார் ஓட்டுதலைக்குறித்துப் பேசிக் கொள் கின்றனர். பெண்கள் மிகவும் கவனமான காரோட்டிகள் என்று கூறப்படுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது தவறு. அதன் காரணத்தைக்கூறுகிறேன். நானும் பில்லியும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வழியாய் செல்லும்போது, ஒரு சிறு வரைபடத்தை எங்கள் முன்னால் வைத்து, ஒரு பாகத்தில் ஆண்' என்றும், மற்றொரு பாகத்தில் 'பெண்' என்றும் எழுதி வைத்தோம். ஒவ்வொரு முறையும் பெண் கார் ஓட்டும்போது தவறு செய்தபோது, 'பெண்' என்று எழுதப்பட்ட வரிசையில் ஒரு குறியிடுவோம். அப்படியே ஆண் தவறு செய்தபோதெல்லாம், 'ஆண்' என்றும் வரிசையில் குறியிட்டோம். உங்களுக்கு இது அதிசயமாகக் காணப்படலாம். ஏறக்குறைய முன்னூறு பேர்களில், தவறு செய்த பெண்களின் எண்ணிக்கை இருநூற்றெண்பது. தவறு செய்த ஆண்களின் எண்ணிக்கை பத்தொன்பது. பெண்கள் பாதுகாப்பான காரோட்டிகள் என்று ஏன் கூறுகின்றனர் தெரியுமா? அவர்களைப் போலீசார் நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்வதில்லை. ஆயிரத்தில் ஒருத்தியையே கைது செய்கின்றனர். அவர்கள் அவளுடைய தொலைபேசி எண்ணை மாத்திரம் குறித்துக் கொள்கின்றனர்; அவளைக் கைது செய்வதில்லை. அதனால்தான் தஸ்தாவேஜுகள் அதைக் காண்பிப்பதில்லை. ஏனெனில் இன்றைய மனிதன் நோவாவின் நாட்களிலிருந்த மனிதனைப் போன்று அழகான பெண்களுக்கு ஆலயம் அமைத்து வழிபடுகிறான். உண்மை .  66. ஓ, என்னே ! அந்நாளில் அவர்களை வழிபட்டது எவ்வளவு பயங்கரமான செயல்! பெண்கள் கவர்ச்சியான விதத்தில் தங்களைக் காண்பிப்பது. இன்றைய பெண்களை அக்காலத்து பெண்கள் கவர்ச்சியில் மிஞ்சியிருப்பார்களென்றால், அக்காலத்தில் நான் இல்லாமலிருந்ததைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இக்காலத்து பெண்களைப் போன்றே அக்காலத்து பெண்களும் நடந்து கொண்டார்கள் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.  67. கவனியுங்கள், அவர்கள் புசித்தார்கள், குடித்தார்கள் என்று வேதம் கூறுகிறது. இவை நியாயமான செயல்களே. உண்மை ! விவாகமும் கனமுள்ள ஒன்றாகும். ஒரு ஆண் ஒரு பெண்ணை விவாகம் செய்வதென்பது கனமுள்ள ஒரு செயலாகும். ஆனால் ஒருவன் வேறொருவனுடைய மனைவியைத் தெரிந்து கொள்ளுதலும், அல்லது வேறொரு பெண்ணுடன் சென்று, தனது விவாகப் பொருத்தனையை முறித்துப் போட்டு தவறு செய்வதும், தேவனுடைய பார்வையில் பாவமான செயலாகும். வேதாகமம் அதற்கு விரோதமாய் உரைக்கின்றது.  68. இப்பொழுது கவனியுங்கள்... விவாகம் என்பதை தேவன் ஏதேன் தோட்டத்தில் நிறுவினார். அவர் விபச்சாரத்தைக் கண்டித்தார். ஆனால் அந்நாட்களிலிருந்த ஆண்களும் பெண்களும் தேவனுடைய பிரமாணத்தை மீறி, தங்கள் விருப்பப்படி செய்தனர். அதை இந்நாட்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்! அதை பாருங்கள்! ரயில் வண்டி வெளிப்புறத்தில் வந்திருப்பதைக் காண விரும்புகிறீர்களா? என்றும் தவறாத இயேசுகிறிஸ்து சொன்ன இந்த வார்த்தைகளை ஆழ்ந்து சிந்தியுங்கள். 69. கவனியுங்கள்! அவர்கள் தங்கள் அழகான பெண்களுடன் புசித்தார்கள், குடித்தார்கள் என்று வேதம் கூறுகிறது. புசித்தல், குடித்தல் என்பவை வாழ்க்கையின் இயற்கை விதிகளில் ஒன்றாகும். அப்படி செய்வது தவறல்ல. நாம் அவைகளைச் செய்ய வேண்டும்... ஆனால் இன்றைய மக்கள் பெருந்திண்டிகாரர்களாகவும், குடிவெறியராயும் இருப்பதையும், பெண்கள் உணவு விடுதிகளில் குடிப்பதையும் நாம் காணும்போது - நீங்கள் மது வழங்கும் ஸ்தலங்களுக்குச் செல்ல நேர்ந்தால், ஆண்களைக் காட்டிலும் அதிகமான பெண்கள் மது அருந்துவதைக் காணலாம். 70. "நோவாவின் நாட்களில்ஜனங்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டுமிருந்தார்கள்” என்று இயேசு கூறினார். வேறு விதமாகக் கூறினால், அவர்கள் விவாகம் செய்து கொள்ளாமலே பெண்களுடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். இன்றைக்கு அவர்களுக்கு ‘ரீனோ' என்னுமிடமுள்ளது. அங்கே நீங்கள் ஒரே நாளில் விவாகம் செய்து, விவாகரத்து செய்து, மீண்டும் வேறொருவரை விவாகம் செய்து கொள்ளலாம். ஆனால் அவையாவும் கூட இப்பொழுது பழமையாகி விட்டது. ஆண்களும் பெண்களும் இந்த பெரிய பட்டணங்களிலுள்ள அறைகளுக்கு வெவ்வேறு சாவிகளுடன் செல்கின்றனர். நான் அதிகமாக பயணம் செய்வதால் இது உண்மையென்று தெரியும். (சாவி விளையாட்டு என்னும் ஒருவகை விளையாட்டு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உருவாகியுள்ளது. அங்கு ஆண்கள் ஓரிடத்தில் தங்கள் தங்கள் சாவிகளைப் புதைக்கப்பட்டுள்ள சாவிகளை நோக்கி வீசவேண்டும். யாருடைய சாவியை யாருடைய தொப்பி மூடிக் கொள்கின்றதோ, அந்த சாவிக்குரியவருடன் அந்த தொப்பிக்குரியவள் அன்றைய இரவை கழிக்கவேண்டும். இதைதான் சகோ. பிரன்ஹாம் இங்கு குறிப் பிடுகிறார் - தமிழாக்கியோன்). கணவன் வேறொருவனுடைய மனைவியைக் கூட்டிக் கொண்டு சென்று விடுகிறான். அவ்வாறே மனைவியும் வேறொருத்தியின் கணவனுடன் சென்று விடுகிறாள். இப்படியாக அவர்கள் கணவனையும் மனைவியையும் மாற்றிக் கொள்கின்றனர். அது அழுகிப்போன நிலையின் உச்சக்கட்டமாகும். இத்தகைய செயல், மிருதுவான, சோம்பேறித்தனமான ஒன்றுக்கும் உதவாத, நரகத்துக்குப் போகும் சந்ததியை பிறப்பித்துள்ளது.  71. சில ஆண்டுகட்கு முன்பு... பாருங்கள், மனிதன் தன் செயலின் மூலம் தன் சரீரத்தை எந்நிலைக்கு கொண்டு வந்திருக் கிறான் என்று. விஞ்ஞானம் சிறந்த ஆகாரத்தைத் தரவேண்டு மென்று முயன்று, கலப்பு தானியத்தையும், கலப்பு தக்காளியையும், கலப்பு மாட்டிறைச்சியையும் அளித்துள்ளது. ஆனால் இவைகளால் ஒரு நன்மையுமில்லை. அவை மக்களைக் கொன்று போடுகின்றன என்பதை அவர்கள் உணருகிறதில்லை. இன்னும் சில ஆண்டுகளில் அவர்கள் 'ஜெல்லி மீனை'ப் போல் (Jelly fish) மிருதுவாகி விடுவார்கள்.  72. ஐந்து ஆண்டுகட்கு முன்பு இன்று போலவே 'பேஸ் பால்' (Base Ball) விளையாட்டை விளையாடினர். ஆனால் அப்பொழுது யாருக்கும் அடிபட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை. ஆனால் இன்றோ அந்த விளையாட்டில் ஆண்டொன்று குறைந்த பட்சம் பன்னிரண்டு முதல் இருபத்து நான்கு பேர் கொல்லப் படுகின்றனர். வீசின பந்து ஒருவன் மேல் பட்டால், அவனுடைய உயிரைப் பிடித்து வைப்பதற்கு அங்கொன்றுமில்லை. அவன் 'கினி கோழி'யைப்போன்று (Guinea) மிருதுவாயிருப்பதால், பந்து அவன் மேல் பட்டவுடன் அவன் மரிக்கிறான்.  73. பாப்ஃ பிரிட்ஸிம்மன்ஸ் (Bob Fritzsimmons) கார்பட்டுக்கு (Corbett) எதிராக குத்துச்சண்டையிட்டபோது, வெறும் கையினால் அவர்கள் ஒருநாள் 125 ரவுண்டுகள் சண்டையிட்டனர். அவ்வளவு பலமுள்ள கரம் கொண்டவர்கள். அவ்விதம் குத்துச்சண்டை யிட்டனர். தங்கள் கைமுட்டியை (fist) கடினமாக்க, தங்கள் கைகளைக் காடியில் தோய்த்த வண்ணம் உறங்குவார்களாம். அக்காலத்தில் ஒரு ரவுண்டு என்பது மூன்று நிமிட நேரம் கொண்டதல்ல. எதிரியைக் குத்தி கீழே வீழ்த்தும் போதுதான் ஒரு ரவுண்டு முடிவடையும். ஆனால் யாருமே குத்துச் சண்டையில் கொல்லப்படவில்லை. அவர்கள் கையில் சிறகுகளைக் கட்டிக் கொண்டு குத்துச்சண்டையிடவில்லை. அவர்கள் 125 முறை எதிரியைக் கீழே வீழ்த்தி சண்டையிட்டனர். அவர்கள் உண்மை யிலேயே திடகாத்திரமுள்ள மனிதராயிருந்தனர். ஆனால் இப்பொழுதோ சிறகுகளைக் கையிலும் கைமுட்டியிலும் கட்டிக் கொண்டு இரண்டு மூன்று ரவுண்டுகள் மாத்திரமே குத்துச் சண்டையிட்டு, அப்படியிருந்தும் கூட யாராகிலும் கொல்லப் படுகின்றனர் என்னும் நிலைக்கு வந்துள்ளதால், குத்துச்சண்டை போடுவதை அவர்கள் நிறுத்தி விடவேண்டும். என்ன நேர்ந்தது? இன்று மனிதன் களிமண்ணைப் போல் மிருதுவாயும், கலப்புமாகி, முழு சந்ததியே மரித்துக்கொண்டிருக்கிறது. 74. அவர்கள் நாளுக்கு நாள் பெலவீனமடைவார்கள் என்று வேதம் கூறவில்லையா? இனி வரும் சந்ததி ஒரே ஒரு மாத்திரையை சாப்பிட்டு உயிர் வாழ்வார்கள். பகல் ஆகாரத்திற்காக ஒரு மாத்திரையை சாப்பிட்டு விடுவார்கள். இவர்கள் புகைபிடிக்கும், மது அருந்தும், மயக்கமாத்திரையை உட்கொள்ளும் ஒரு கூட்டமே யன்றி வேறல்ல. சிறு பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் குற்றம் புரி கின்றனர். தாயார் தெருவில் அவ்விதம் நடந்துகொண்டால், அவள் பிள்ளையும் அவ்வாறே நடந்து கொள்கிறான். 75. அழகிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமுதாய வாழ்க்கை முறிவடைந்துள்ளது. ஓ, என்னே! நாம் வாழும் இந்நாட்களில் எவ்வளவு பெரிய சம்பவங்களெல்லாம் நிகழ் கின்றன! எப்படித்தான் இவைகளைச் செய்கிறார்களோ.... அவர்கள் தப்பித்துக் கொள்ளமுடியாது. அவர்கள் என்ன செய்கிறார்கள்? அன்று செய்தது போலவே இன்றும் செய்கின்றனர். தேவனுடைய கற்பனைகளை அவர்கள் அவமாக்குகிறார்கள். “விபச்சாரஞ் செய்யா திருப்பாயாக” என்று கர்த்தர் கூறியிருக்க, அவர்களால் விபச்சாரம் செய்யமுடியும் என்று துணிகரமாகக் காண்பித்து, அதினின்று தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் தப்பித்துக் கொள்ளவே முடியாது. ஒருக்கால் என் பிரசங்கத்தைக் கேட்க நீங்கள் இங்கு வந்திருக்கக் கூடாது. ஆனால் இந்த நேரத்தில்தான் சிகப்பு விளக்கு எரியும் என்று இயேசு கூறியுள்ளார்.  76. அவர்கள் எப்டிப்பட்ட பாவத்தைச் செய்து பாவத்தை நோக்கி நகைத்துக் கொண்டிருக்கின்றனர்! வேதம் ஒழுக்கங் கெட்டவை என்று கூறுபவைகளை இன்றைய உலகம் நற்பண்பு என்றழைக்கிறது. ஒரு வாலிப பெண்ணின் ஆடைகளை நீங்கள் களைந்து விட்டு, அவளுடைய உள் கால்சட்டையோடும் ரவிக்கை யோடும் அவளைத் தெருவில் அனுப்பினால், இப்படியாக பெண் ணின் மாமிசத்தை வெளியில் காட்டுவது நற்பண்பு என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் வேதமோ அது பாவ மென்று உரைக்கிறது. பயங்கரம்! ஆனால் உலகமோ அதை நற் பண்பு என்றழைக்கிறது. பாருங்கள், அவர்கள் தேவனுடைய கற்பனைகளை அவமாக்குகின்றனர். ஸ்தாபனங்களும் அதை கண்டிப்பதில்லை. யாராகிலும் ஒருவர் நீதியின் நாமத்திலும், இயேசு கிறிஸ்துவின் நாமத்திலும் எழும்பி, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சமயம் வந்து விட்டது. ஏனெனில் நியாயத்தீர்ப்பின் நாளிலே இதற்கு நாம் பதில் கூறவேண்டியவர்களாயிருக்கிறோம்.  77. இங்குள்ள யாருக்காகிலும் இது பைத்தியக்காரத்தனமாக தென்பட்டால், ஒரு சில ஆண்டுகளாக என்ன நடந்து கொண் டிருக்கிறது என்பதை பின்நோக்கிப் பார்த்து, எதிர்காலத்தில் எவ்விதமாயிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள், நம்மைப் பொறுத்தவரை, கர்த்தரின் வருகையைத் தவிர வேறு எதிர்காலம் நமக்கில்லை. 78. கவனியுங்கள்! ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த பெண்களை இக்காலத்து பெண்களின் போக்குடன் ஒப்பிட்டுப்பாருங்கள். அவர்கள் எப்படியிருந்தனர் என்றும், தேவகுமாரர் அக்காலத்தில் என்ன செய்தனர் என்றும் பாருங்கள். இன்று அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதுடன் அதனை ஒப்பிட்டுப் பாருங்கள். 79. அண்மையில் ஒரு கூட்டத்தில் நான் பங்கு கொள்ள நேர்ந்தது. அது என் இருதயத்தை நொறுக்கினது... அங்கிருந்தோர் அனைவரும் ஒரு போதகரின் பிரசங்கத்தை மிகவும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் ஒரு மூலையில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது ஒரு வாலிபப் பெண் உள்ளே நுழைந்தாள். அவள் மிகவும் ஆபாசமாக உடையுடுத்தியிருந்தாள். அவள் சபையின் வழியாக கடந்து, உடலை ஆட்டிக் கொண்டு நடந்து சென்றாள். அப்பொழுது மேடையிலிருந்த போதகர் அத்தனை பேரும், சபையோரும் தங்கள் தலைகளைத் திருப்பி அவளையே உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். "தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளைக் கண்டு" என்னும் வேதவாக்கியம் அப்பொழுது என் நினைவுக்கு வந்தது - பாவிகள், தேவனற்ற அழகிய பெண்கள், ஓ, அது அநேக சபைகளை சின்னாபின்னமாக்கியுள்ளது. அது தேவனுடைய ஆவியை எடுத்துப்போட்டுவிட்டது. கவனியுங்கள்! மனுஷ குமாரத்திகளைக் கண்டனர்.  80. இப்பொழுது கவனியுங்கள், என்றும் தவறாத இயேசு, இக் காலத்தில் இவ்விதமாய் இருக்கும் என்று கூறியுள்ளார். இவை களெல்லாம் சம்பவிப்பதை நீங்கள் காணும்போது, அவர் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறிந்து கொள்ளுங்கள் என்று அவர் உரைத்திருக்கிறார். அநேகர் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அநேக போதகரும் அதை வெளிப்படையாக கண்டிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அப்படி செய்தால், அவர்களுடைய சபையோர் அவர்களை வெளியே துரத்திவிடு வார்கள். அது முற்றிலும் உண்மை .  81. ஆனால் ஒன்றை மாத்திரம் கூற விரும்புகிறேன். ஒருவன் தேவனால் அழைக்கப்பட்டிருந்தால், அவன் வேதம் கூறியவைகளில் நிலைநிற்பான். அவன் வேறு என்ன செய்தாலும் எனக்கு கவலை யில்லை. அது சத்தியம் என்பதை நீங்கள் உணர வேண்டும். சத்தியம் கட்டிப் போடும் அல்லது விடுதலையாக்கும். இதைதான் இயேசு கிறிஸ்துவும் கூறியுள்ளார். 82. மனுஷகுமாரத்திகளின் கவர்ச்சியான உடலமைப்பையும், முகங்களையும் கண்டு தேவகுமாரர் அதில் மயங்கினர். இன்றைக்கும் அதுவே சம்பவிக்கிறது. 83. அந்த நாளை ஒப்பிட்டுப் பாருங்கள். ஜனத்தொகை பெருக்கம், பெண்களின் அழகு அதிகரித்தல், தேவகுமாரர் அதில் மயங்குதல், பெண் கொள்ளல், பெண் கொடுத்தல், விவாகரத்து வழக்குகள், விபச்சாரத்தில் வாழ்தல் போன்றவை. 84. "சகோ. பிரன்ஹாமே, சற்று பொறுங்கள், அதைக் குறித்து எனக்குத் தெரியாது” என்று நீங்கள் கூறலாம். கவனி, சகோதரனே! நீ எதையும் கூறுவதற்கு முன்னால் இதை உற்று கேள். "ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிறவன் எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று” என்று இயேசு கூறி யுள்ளார். ஒரு மனிதன் தன் அலுவலகத்தையோ, வீட்டையோ, சபையையோ விட்டு வெளிவரும்போது, அவன் எதைக் காண்கிறான்? வெளியரங்கமாய் காண்பிக்கப்படும் பெண்களின் மாமிசம், உடலமைப்பு நன்றாய் காணப்படும் வண்ணம் இறுக உடை உடுத்தியிருத்தல், அழகிய முகங்கள் போன்றவை ..... அதைக் காணும் போது உங்கள் உணர்ச்சி தூண்டப் படுகிறது. அப்படித்தான் நடக்குமென்று தேவன் உரைத்திருக் கிறார். இவைகள் சம்பவிப்பதைக் காணும்போது, காலம் வாசலருகே வந்துவிட்டது. நோவாவின் காலத்தில் நடந்தது போல, இன்று தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளைக் கண்டு, அவர்களுக் குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்து கொள்கின்றனர். பாருங்கள்? அந்நிலைக்கு தான் நாம் வந்திருக்கிறோம்.  85. இப்பொழுது கவனியுங்கள்! இன்றும் அதுவே சம்ப விக்கிறது. பெண்களுக்கு பாலுணர்ச்சியைத் தூண்டும் கவர்ச்சி (Sex appeal) இருந்ததன் காரணமாக தேவகுமாரர் மனுஷ குமாரத் திகளுக்கு கோவில்களைக் கட்டினர் என்று நாம் சரித்திரத்தில் காண்கிறோம் - வீனஸ் தேவதைக்கு கோவில் கட்டுதல் போன் றவை. பாருங்கள்? அவர்கள் கோவில்களைக் கட்டி கும்பிட்டனர். "சகோ. பிரன்ஹாமே, அப்படிப்பட்ட காரியங்கள் நமது மத்தியில் இல்லையே; எனவே அதை இந்நாட்களுடன் நீங்கள் ஒப்பிடக் கூடாது" என்று நீங்கள் கூறலாம். என்னை மன்னியுங்கள். அன்றி ருந்ததைக் காட்டிலும் இன்று மோசமாயுள்ளது. 86. நாம் தொலைக்காட்சியில் எதைக் காண்கிறோம்? ஒரு பத்திரிகையை கையிலெடுத்தால், அதில் பெண்களின் படங்கள். ஒவ்வொரு மதுபானப் பெட்டியின் மேலும் பெண்களின் படங்கள். ஆபாசமாக உடையுடுத்தி, பாலுணர்ச்சியைத் தூண்டும் பெண்களின் படங்கள் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. தொலைகாட்சியிலும் அதே போன்று தான். சிகரெட்டு விளம்பரங் களிலும் - எங்கு பார்த்தாலும் - கவர்ச்சி மிக்க பெண்களின் படங்களே காணப்படுகின்றன. காலுறை (Sex appeal) விளம்பரங் களிலும் கூட, அழகிய மெலிந்த தோற்றம் கொண்ட பெண்களின் கால்களுக்கு காலுறைகள் போடப்பட்டது போல் விளம்பரம் செய்யப்படுகின்றன. அது என்ன? ஏன் அவ்விதமாய் உள்ளது?  87. இந்த மூலையில் கிரிஸ் மெய்ஸ்ன ர் என்பவர் வசிக்கிறார். அவரிடம் நான் முன்பு வேலையில் அமர்ந்திருந்தேன். உங்களில் அநேகருக்கு கிரிஸ் மெய்ஸ்ன ரைத் தெரியும். அவருடைய மனைவியின் பெயர் லிலியன், அவளை லில்லி என்று அழைப்பார்கள். அவள் தகப்பனாரின் பெயர் எல்லிங்கர். அவள் மிகவும் அழகுள்ளவள். அவளுக்கு விவாகமாவதற்கு முன்பு ஒரு மனிதன் அவள் தகப்பனாரை அணுகி, அவள் படத்தை மிட்டாய் பெட்டியின் மேல் விளம்பரம் செய்ய அனுமதி கேட்டானாம். இந்த ஜெர்மானிய தகப்பனுக்கு கோபம் வந்துவிட்டது. அவர் எழுந்து நின்று, "என் மகள் படத்தை மிட்டாய் பெட்டியின் மேல்நாடு முழுவதும் விளம்பரம் செய்வது எனக்குப் பெருத்த அவமரியாதை யாகும்” என்று கூறி விட்டாராம். ஆனால் இன்று என்ன சம்பவிக் கிறது? எல்லா விளம்பரங்களிலும், தொலைகாட்சியிலும், ஒழுக்கங் கெட்ட, துன்மார்க்கமான, ஆபாசமான, பாலுணர்ச்சியைத் தூண்டும் தேவனற்ற பெண்களின் படங்களையே நாம் காண் கிறோம். அது உண்மை . அது என்ன? ரயில் வண்டி வெளிப் புறத்திற்கு வந்துவிட்டது என்பதை அது காண்பிக்கிறது. பெண்கள் அழகு மிக்கவர்களாய் இருப்பார்கள் என்று வேதம் உரைக்கிறது. நாம் ரயில் வண்டியின் சப்தத்தைக் கேட்கிறோம். 88. அவருடைய வருகையை அறிவிக்கும் மற்ற காரியங்களைக் குறித்து நாம் பேசுவோம். இன்று நமக்கு முன்னால் எரிந்து கொண் டிருக்கும் சிகப்பு விளக்குகளில் இது ஒன்று. நாம் தேசிய நிலையைக் காண்கிறோம். நாம் அரசியலில் அமைதியின்மையைக் காண் கிறோம். இவைகளைக் குறித்து நாம் ஏற்கனவே பிரசங்கித்திருக் கிறோம். ஆனால் இப்பொழுது பேசினது புதிதான ஒன்று. இதைக் குறித்து பேசுதல் அவ்வளவு உசிதமல்ல. ஆயினும் அதை நாம் எடுத்துக் கூற வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில் அதற்கு எதிராக ஒரு சத்தம் எழும்ப வேண்டும். இன்றிரவு நான் கூறும் வார்த்தைகள் நியாயத்தீர்ப்பின் போது உங்களைச் சந்திக்கும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்.  89. அண்மையில், இந்த பெண் மரிப்பதை கர்த்தர் எனக்கு தரிசனத்தில் காண்பித்தார்.... அவளுடைய பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை.... அவர் பெயர் மர்லின் மன்றோ . அவள் ஒரு நடிகை அவளை நான் கண்டதேயில்லை. நான் சினிமாவுக்குப் போவது கிடையாது. அவளை நான் தரிசனத்தில் கண்டேன், அவள் மிகவும் கவர்ச்சியுள்ளவளாக இருந்தாள். அவள் எதையோ எடுக்க முயன்று கொண்டிருந்தாள். அவள் மாரடைப்பினால் மரித்துக்கொண்டிருந் தாள். கர்த்தர் என்னிடம். "அவள் 4.00 மணிக்கு மரித்துப் போனாள் என்று சொல், ஏனெனில் 4.00 மணியாவதற்கு சில விநாடிகளுக்கு முன்புதான் அவள் மரித்துப் போனாள். அவள் தற்கொலை செய்து கொள்ளவில்லை'' என்றார். அவள் உடலை அவர்கள் கண்ட இடத்தை நான் ஏற்கனவே தரிசனத்தில் கண்டேன். அதை நான் பில்லிக்கும் என்னைச் சுற்றிலுமிருந்த என் குடும்பத்தின் அங்கத்தினர் களுக்கும் அறிவித்தேன். சில நாட்களுக்குப் பின்பு மர்லின் மன்றோ மரித்துப்போனாள் என்னும் செய்தி வெளியானது.  90. அன்றொரு நாள் நான் கனடாவிற்கு சென்றிருந்த சமயம், தொலைகாட்சி பெட்டியுள்ள வீட்டில் நாங்கள் தங்குவதற்கு ஒரு அம்மாள் எங்களை அனுமதித்திருந்தார்கள். என் பிள்ளைகள், “மறுபடியும் திரும்ப முடியாத நதி” (River of no Return) என்னும் படம் தொலைகாட்சியில் போடப் போவதாக எனக்கு அறிவித்தார்கள். அந்த நதியில் தான் நான் எப்பொழுதும் மீன் பிடிப்பது வழக்கம். என் நண்பர் ஜான் ஸ்மித் படம் பிடிப்பவர்களை அங்கு கொண்டு சென்றார். என் பிள்ளைகள், "அப்பா, ஒருவேளை ஜான் ஸ்மித் படத்தில் இருப்பார், அதைக் காண விரும்புகின் றீர்களா?" என்று கேட்டார்கள். 91. "நான் கனடாவிலிருந்து குறித்த நேரத்திற்குள் திரும்பி வந்தால் அந்த படத்தை பார்க்கிறேன்" என்றேன். அந்த படம் காண்பிக்கப்பட்ட போது, யார் அதில் நடிப்பது? மர்லின் மன்றோ. அவள் மரித்து ஒரு ஆண்டு ஆகியும் பாலுணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் அவள் உடையுடுத்தியுள்ளதைக் காணமுடிந்தது. அவளுடைய சத்தத்தைக் கேட்க முடிந்தது. அது காந்த ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அநேக ஆண்டுகளுக்கு அதை மறுபடியும் போடுவார்கள். அவள் நடிப்பு அனைத்தும் அந்த ஒலி நாடாவில் பதிவாகியுள்ளது. இன்றிரவு அவள் எங்கிருக்கிறாளோ, அங்கிருந்து அவள் காண முடிந்தால் (அவள் இரட்சிக்கப்பட்டாள் என்று நம்புகிறேன், எனக்குத் தெரியாது. அது கர்த்தருக்குத் தான் தெரியும்). அவள் மாத்திரம் காண முடிந்தால், அவள் அதை மறுக்க முடியாது. ஏனெனில் அது பதிவாகி நம்மிடையேயுள்ளது. அப்படியிருக்க, நமது ஒவ்வொரு செயலையும் அசைவையும் தேவன் எவ்வளவு அதிகமாக தமது மகத்தான ஒலிநாடாவில் பதிவு செய்து வைத்திருப்பார்.... அதினின்று நாம் தப்பமுடியாது. அது அங்கே யுள்ளது. இங்கு ஒரு ஒலிபெருக்கி இருந்து, நான் உலகத்திற்கு ஒலி பரப்பிக் கொண்டிருந்தால், என் சத்தம் உங்களை அடையு முன்பே, உலகிலுள்ள ஜனங்கள் என் சத்தத்தை வானொலியின் மூலம் கேட்பார்கள். அவ்வளவு தூரத்திற்கு 'எலக்ட்ரானிக்ஸ்' உலகில் முன்னேறியுள்ளது.  92. சப்தம் ஒருபோதும் அழிந்துபோவதில்லையென்று உங்களுக் குத் தெரியுமா? அது அழியவே அழியாது. இப்பொழுது நாம் அடைந்து கொண்டிருக்கும் முன்னேற்றத்தில், இன்னும் இருபது ஆண்டுகளில், இவ்வுலகில் இயேசுகிறிஸ்து வாழ்ந்த போது பேசின அதே சப்தத்தை பதிவு செய்து ஒலி பரப்ப இயலும் என்று விஞ்ஞானம் கூறுகிறது - இன்னும் இருப்பதே ஆண்டுகளில். அது குளத்தில் ஒரு கல்லைப்போடுவது போன்றது. அப்பொழுது உண்டாகும் சிறு அலைகள் உங்கள் கண்களுக்கு மறைந்து போனாலும், அது ஒரு கரையிலிருந்து மறுகரைக்கும், சமுத்திரத் தையும் கடந்து செல்கிறது என்று விஞ்ஞானம் கூறுகிறது. அது அழிவதில்லை. அது போன்று, நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நியாயத்தீர்ப்பின் போது உங்களைச் சந்தித்து, உங்களை ஆக்கினைத் தீர்ப்புக் குட்படுத்தும்; அல்லது உங்களை இரட்சிக்கும்.  93. இந்த அறையிலேயே ஜனங்களின் படங்கள் வந்து கொண் டிருக்கின்றன. நீங்கள் நம்பாவிட்டால், தொலைகாட்சி பெட்டி யைப் போடுங்கள், அதில் ஜனங்களின் சத்தத்தைக் கேட்கலாம்; அவர்களின் படங்களையும் காணலாம். ஆயினும் நமது புலன்களால் அவைகளை கிரகித்துக்கொள்ள இயலவில்லை. 94. அவைகளை அனுப்புவதற்கு அவர்கள் தொலைகாட்சி நிலையங் களை வைத்திருக்கின்றனர். அங்கு ஒரு காந்தக் குழாய் உள்ளது. ஒரு படிகம் (Crystal) சத்தங்களை கிரகித்து அதை வெளியே அனுப்புகிறது. அவ்வாறே வேதாகமம் தேவனுடைய வார்த்தை களைக் கொண்டதாயுள்ளது. எப்படி மற்றவர்கள் பேசின வார்த்தைகளை இன்றும் நாம் கேட்க முடிகிறதோ, அது போன்று இயேசு கிறிஸ்து பேசின ஒவ்வொரு வார்த்தையும் இன்றைக்கு உயிருள்ளதாய் இருக்கிறது.  95. உங்கள் இருதயம் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, அனுப்பப்படும் ஒலி அலைகளை ஒலிபரப்பும் கருவியாக அது அமையுமானால், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும், அவர் முன்பு செய்த கிரியைகளையே இப்பொழுதும் செய்கிறார் என்றும் அது கூறும். ஏனெனில் அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் மரிப்பதில்லை, அவை எப்பொழுதுமே ஜீவிக்கின்றன. இன்னும் இருபதாண்டுகள் கழித்து இயேசுவின் சப்தத்தை பதிவு செய்ய வேண்டுமென்ற அவசியமேயில்லை. இப்பொழுதே நாம் அந்த சப்தத்தை கேட்கிறோம். 96. மனுஷகுமாரனின் வருகை அருகாமையிலுள்ள மகத்தான காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விளக்குகள் எங்கும் பிரகாசித்து அவருடைய வருகையை அறிவிக்கின்றன... அதை நாம் அரசியலில் காண்கிறோம், எல்லாவிடங்களிலும் காண்கிறோம். சூரியன் முன்பு போலில்லையென்று நாம் காண்கிறோம். வட துருவத்திலுள்ள அந்த கடல் முன்பை விட அதிக ஆழமாகி விட்டதாகக் கூறுகின்றனர். எவ்வளவு ஆழமாகி விட்டதென்று எனக்கு நினைவில்லை, முன்பெல்லாம் பேரிங் ஜலசந்தியை (Bering Strait) நாம் நடந்தே கடக்க முடியும். ஆனால் இப்பொழுதோ அது அநேக அடிகள் ஆழமாகி விட்டது. ஏன்? பூமி நடுவில் வீக்க மடைந்துள்ளது. முன்பு ஆழமாயிருந்த இடங்கள் இப்பொழுது ஆழங்குறைந்தவைகளாகவும், முன்பு ஆழங்குறைந்த இடங்கள் இப்பொழுது அதிக ஆழமானவைகளாகவும் ஆகிவிட்டன. உலகம் அதன் ஒழுங்குத் தன்மையை இழந்து வருகிறது. அது அசைகிறது. இயற்கை அனைத்தும் மாறுகிறது. நாம் காணக்கூடிய அனைத்தும்...  97. அந்த இயற்கை மானிடவர்க்கத்திலும் அவருடைய வருகையின் அடையாளத்தைத் தோன்றச் செய்கிறதென்று இன்றிரவு நாம் காண்கிறோம். ஏனெனில் மனுஷகுமாரத்திகள் சௌந்தரியமுள்ளவர்களாகிவிட்டனர். தேவகுமாரர் அவர்களுக் குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்து கொள்கின்றனர். நாம் எப்படிப்பட்ட காலத்தில் வாழ்ந்து வருகிறோம்! ஓ! என்னே! அந்த காலத்தில் எப்படியிருந்தது? 98. மனிதர் பெண்களை பணிந்து கொள்ளும் அதிர்ச்சிகரமான செயலை நாம் சரித்திரத்தில் காண்கிறோம். இன்றும் அது பெண் ணின் உலகமாக இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.  99. அண்மையில் நான் சுவிட்சர்லாந்துக்கு சென்றிருந்தேன்.... இதை நான் கிறிஸ்தவ பெண்மணிகளுக்கு விரோதமாய் கூறவில்லை. இல்லை, ஐயா! அவர்கள் விலையுயர்ந்த ஆபரணங்கள். நான் உலகத்தின் போக்கைத் தான் கூறுகிறேன். ஒரு பெண் என்னுடன் காரில் பிரயாணம் செய்தாள் - சகோதரன் குகன் புல்லும் அவருடைய பெண் சிநேகிதியும்.... அவருக்கு சுமார் என் வயதிருக்கும். அவருக்கு விவாகமாகவில்லை. அவர் இந்த வாலிப் பெண்ணுடன் சென்று கொண்டிருந்தார். பிறகு அங்கிருந்த பெண்களில் ஒருத்தி, "சகோ. பிரன்ஹாமே, அமெரிக்காவைக் குறித்து எங்களுக்குச் சொல்லும், அது பெண்ணின் உலகம் என்று கேள்விப்படுகிறோம். அது உண்மையா?” என்று கேட்டாள். "அது உண்மையென்று நான் பதிலளித்தேன்." அவள், "அங்கு போகவேண்டுமென்று நினைத்துக்கொண் டிருக்கிறேன்” என்றாள். அங்குள்ள நிலையை நான் விவரித்தேன். அவள் “அப்படியா?” என்று வியப்புடன் கேட்டாள். நான், "ஆம்'' என்றேன். அவள் அமெரிக்காவைக் கொண்டிருந்த கருத்து உடனே மாறினது. “அப்படியானால் அப்படிப்பட்ட இடத்தில் எப்படி கிறிஸ்தவ வாழ்க்கை நடத்த முடியும்?” என்று அவள் கேட்டாள். சற்று யோசித்துப் பாருங்கள்!!  100. நான் ரோமாபுரிக்குச் சென்றிருந்த போது, சான் ஆஞ்சலோவிலுள்ள சவ அறைகளைக் கண்டேன். பின்பு "நீரூற்றில் மூன்று நாணயங்கள்'' என்னுமிடத்தை அடைந்தேன். அங்கு தெருவில் கண்ட பெண்கள் எவ்வளவு ஒழுக்கங் கெட்டவர்களாய் இருக்கின்றனர் தெரியுமா? அங்கு பெண்கள் நம்மை அணுகி அவர்களை வெளியே அழைத்துச் செல்லும்படி கேட்கின்றனர்எல்லா தரத்தினரும், வித்தியாசமான பருமனுள்ளவர்களும், உயரமுள்ளவர்களும், நாங்கள் குளத்தில் இறங்குவதற்கு முன்பே என்னிடமும், பில்லியிடமும், சகோ. பாக்ஸ்டரிடமும், எங்களுக்கு இடத்தைக் காண்பிக்க வந்த ஆகாய விமான நிறுவனத்தைச் சேர்ந்த அந்த மனிதனிடமும் எத்தனை பெண்கள் அவ்விதம் கேட்டனர் என்று எனக்கு ஞாபகமில்லை. ஆகாய விமான நிறுவனத்தின் மனிதனிடம், "இப்பெண்கள் இப்படித்தான் வாழ்க்கை நடத்த வேண்டுமா?” என்று கேட்டேன்.  101. அவர், “இல்லை. இராணுவத்தினர் இங்கிருந்த போது, இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை அவர்களுக்கு வழக்கமாகி விட்டது. அவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை இருந்தும்கூட, இதை தொடர்ந்து நடத்துகின்றனர்” என்றார். ஆனால் அந்த இடத்திலும் கூட சான் ஆஞ்சலோவில் ஒரு அறிக்கை இவ்விதம் எழுதி வைக்கப்பட்டிருந்தது: "அமெரிக்கப் பெண்களின் கவனத்திற்கு : தயவு செய்து உள்ளே வரும் முன்பு, ஆடையுடுத்தி வந்து, மரித்தோரைக் கௌரவியுங்கள்''  102. அமெரிக்கப் பெண் ஒருத்தி பாரிஸில் இறங்குவதைக் கண்டேன்... நமது நாகரீகம் பாரிஸிலிருந்து தான் வருவது வழக்கம். ஆனால் இந்த அமெரிக்கப் பெண்ணோ ஆபாசமாக உடையுடுத்தி, தன் பெற்றோருடன் அங்கு நடந்து சென்ற போது, வேலையில் ஈடுபட்டிருந்த சிப்பாய்கள், தங்கள் மண்வெட்டிகளை கீழே போட்டு விட்டு, அவளைக் காண ஓடோடி வந்தனர்.  103. இப்பொழுது நாம் புது புதுநாகரீகங்களை உருவாக்குகிறவர் களாயிருக்கிறோம். பாரீஸ் தான் முன்பு அப்படி செய்து வந்தது. ஆனால் இப்பொழுதோ நமது அசுத்தமான, இழிவான நாகரீகத்தைப் பெற அவர்கள் இங்கு வருகின்றனர். இந்நாட்டில் இப்பொழுதுதான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் ஒரு எழுப்புதல் உண்டாகி, அருமை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது கிருபையினால் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து வருகிறார் என்று எண்ணிப் பார்க்கும் போது! நோவாவின் காலத்தில் எப்படி இருந்ததோ, அப்படியே இக்காலத்திலும் உள்ளது என்று அறிவிக்க விளக்கு எல்லா பாகங்களிலும் எரிந்து கொண்டிருக் கிறது..... மரித்தோரை உயிரோடெழுப்பக் கூடிய தேவன், பிணியாளிகளை சொஸ்தப்படுத்தக் கூடிய தேவன், காரியங்கள் நிகழும் முன்பே அவைகளை முன்னறிவிக்கக் கூடிய தேவன்; அவை எவ்வித பிழையுமின்றி தவறாமல் ஒவ்வொரு முறையும் நிகழ்கின்றன.... அப்படியிருந்தும், அமெரிக்காவிலுள்ள பெண்களிடம் நாம் பிரசங்கித்த போதிலும், அவர்கள் ஆண்டுதோறும் மோசமாகிக் கொண்டே வருகின்றனர்.  104. தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பனில் ஒரு கூட்டத்தில் 200,000 பழங்குடியினர் கூடியிருந்தனர். அப்பொழுது தேவன் அந்த மகத்தான அற்புதத்தைச் செய்தார்... அப்பொழுது கம்பளம் போர்த்தும் அந்த பழங்குடியினர்.... அந்த பெண்கள் ஒன்றுமே உடுப்பதில்லை. முன் பாகத்தை மறைக்க அவர்கள் நாலு அங்குலம் அகலமுள்ள மணிகளையே தொங்கவிட்டிருப்பார்கள். ஆண்களும் ஆடை எதுவும் அணியாமல் நாலு அங்குல.... நிர்வாணிகளா யிருந்தனர். அவர்கள் ஆட்டுத்தோல் கம்பளத்தின் மேல் படுத்துக் கொள்வார்கள்.... அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதையடையும் போது, அந்த கம்பளம் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அவர்கள் அதிலே வாழ்ந்து, அதிலே உறங்கி, அதை போர்த்துக் கொண்டு, அவர்கள் மரிக்கும் போது அதில் சுற்றப்பட்டு அடக்கம் பண்ணப்படுவார்கள். 105. அந்த பெண்கள் மிகவும் பழங்காலத்தவர், பிரசவத்தின் போது, நான் நிற்குமிடத்திலிருந்து இருபது அடி தள்ளி பிரசவிப்பார்கள். அதற்கென அவர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதில்லை. பிரசவத்தின் போது, ஒரு பெண் அவளுக்கு உதவி செய்வாள். ஐந்தே நிமிடங்களில் பிரசவம் முடிந்துவிடும், உடனே அவள் குழந்தையைக் கையிலெடுத்து பால் கொடுப்பாள், சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமை ஒரு பையன் மேல் இறங்கு வதை அந்த பழங்குடியினர் கண்டனர். அவனுக்கு மூளை கோளாறு இருந்தது. ஆனால் வல்லமை அவன் மேல் விழுந்தவுடனே அவன் குணமாகி தேவனை துதிக்கத் தொடங்கினான். அன்று 30,000 கம்பளப் பழங்குடியினர் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். பெந்தெகொஸ்தே நாளன்று இரட்சிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரம், அதைக் காட்டிலும் இது பத்துமடங்கு அதிகம். இந்த பெண்கள் செய்ததை என் கண்ணால் கண்டேன். அவர்கள் தரையில் விழுந்து, தங்கள் விக்கிரகங்களை உடைத்துப் போட்டு, இயேசுகிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித் தனர்... அவர்கள் இயேசுவை அறிந்திருக்கவில்லை. அவர்களில் அநேகர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தைக்கூட கேள்விப்பட்டதில்லை. ஆனால் அவர்கள் முழங்காலில் நிற்கத் தொடங்கினர். அவர்கள் உண்மையாகவே மனந்திரும்பி விக்கிரகங்களை உடைத்துப் போட்டார்களா என்று அவர்களிடம் கேட்டேன். அவர்கள் முழங்காற்படியிட்டு இயேசுவுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். நான் அவர்களுக்காக ஜெபம் செய்தேன். சாதாரணமாக அவர்கள் கைகளைக் கீழே தொங்கவிட்டு நிற்பது வழக்கம். அவர்கள் நிர்வாணிகளென்று அறியாமலிருந்தனர். ஆனால் இயேசு கிறிஸ்து அவர்களைத் தொட்ட மாத்திரத்தில், அவர்கள் கைகளை மடக்கி தங்கள் நிர்வாணத்தை மறைத்துக் கொண்டு, ஆண்களின் சமுகத்திலிருந்து ஓடிப் போவதை என் கண்ணால் கண்டேன். இயேசு கிறிஸ்துவின் தொடுதல் கம்பளப் பழங்குடி யினருக்கு அதை செய்யுமானால், நூறு ஆண்டுகளாக சுவிசேஷத்தைக் கேட்டு வரும் தேசத்திற்கு அது என்ன செய்ய வேண்டும்? பழங்குடியினர் அவ்விதம் செய்ததை நானே பார்த்தேன்; அது மற்றவர் என்னிடம் கூறினதல்ல, நானே என் கண்களால் கண்டேன். அப்படியிருக்க, நம்மை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் ஆடைகளைக் கழற்றெறிவது என்பது விசித்திரமாயிருக்கிறதல்லவா? ஸ்தாபனங்கள் அதைக் குறித்து எவ்வித கவலையும் கொள்வதில்லை.  106. தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஓ, பெண்களின் மாமிசத்தை வெளிப்படையாய் காண்பிக்கின்றன... அவர்கள் தேவதைகளல்ல. வேதவாக்கியம் நிறைவேறுவதற்கெனவே அமெரிக்கா இந்நிலையில் உள்ளது. அமெரிக்காவின் எண் பதிமூன்றாகும். அமெரிக்காவின் ஆலயம் ஒரு பெண் - எப்பொழுதுமே. அது நமது நாணயங்களிலும் அச்சடிக்கப்பட்டுள்ளது. அது எல்லாவற்றிலும் உள்ளது. வெகு விரைவில் நாம் அமெரிக்க தேவதையைப் பெற்றுக் கொள்ளும் காலம் ஒன்று வரப்போகிறது. நீங்கள் கையெழுத்தை சுவற்றின் மேல் காணலாம். 107. ஓ, நாம் என்ன செய்யப் போகிறோம்? நாம் தெருவில் நடந்து செல்ல முடிவதில்லை... தெருவில் நடந்து சென்று பாருங்கள். பட்டினத்தில் நீங்கள் நடந்து சென்று, பெண்கள் தங்கள் மாமிசத்தை வெளியே காட்டுவதை பாருங்கள். அவர்கள் சொற்ப ஆடைகளை அணிந்து வெளியே செல்கின்றனர். உண்மையைக் கூறினால், ஆடை மாற்றும் அறையில் (Dressing Room) ஒரு பெண் அவ்விதம் இருப்பதற்கு கூட கூச்சப்படவேண்டும். ஆனால் சொற்ப ஆடைகளை அணிந்து அவர்கள் தெருக்களில் நடந்து வரும்போது... நீச்சல் குளங்களில் அவர்கள் ‘பிக்கினி' என்னும் ஒருவித நீச்சல் உடைகளை உடுத்தி வருவது - அவர்களுக்குள் அசுத்த ஆவி உள்ளதென்று அவர்கள் அறியாமலிருக்கின்றனர். அப்படி செல்லும் அநேகர் சபை பாடல் குழுவில் பாடுகின்றனர். அப்படித்தான் நடக்குமென்று இயேசு கூறியுள்ளார்.  108. பெண்களின் மாமிசம். அவர்கள் மானிடரே. அவர்கள் தேவதைகளல்ல, என் கருத்து என்னவெனில் - நான் தவறாயிருந் தால், தேவன் என்னை மன்னிப்பாராக - அது அரங்கங்களில் ஆடைகளை ஒன்றன் பின் ஒன்றாக களைவது போன்றுள்ளது (Striptease). கிறிஸ்தவனல்லாத ஒருவன் இந்த சோதனையில் விழுந்தால், அவனை நாம் குறை கூற முடியாது. அவன் இப்படிப்பட்ட சோதனையில் விழுந்து அதை மேற்கொள்ள முடியாமல், தவறு செய்துவிடுகிறான். அதிகமாக கற்பழிப்பு நிகழாதது வியக்கத் தக்கதே. பெண்கள் அதற்கு காரணமாயுள்ளனர். அப்படியிருக்க, நாம் எங்ஙனம் ஆண்களைக் குறை கூற முடியும்? யாரை குறைகூற வேண்டுமோ அவர்களைக் குறை கூறுங்கள். 109. பெண்கள், “சகோ. பிரன்ஹாமே, நான் ஒழுக்கமுள்ளவளாய் தான் இருக்கிறேன்'' என்று கூறலாம். அதைக் குறித்து சந்தேகமில்லை. என் சகோதரியே, ஒரு மனிதன் உன்னைப் பார்த்து இச்சிக்கும்படி நீ நடந்து கொண்டு அவன் விபச்சாரம் செய்ய நீ காரணமாயிருந்தாய் என்பதற்காக நியாயத்தீர்ப்பின் நாளில் நீ பதில் கூற வேண்டியதாயிருக்கும் என்று உனக்குத் தெரியுமா? “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று. அதற்கு அவன் பதில் கூற வேண்டும்" என்று இயேசு கூறியுள்ளார். ஒருக்கால் நீ விபச்சார செயலில் ஈடுபடாமலிருக்கலாம். ஆனால் அந்த ஆவியை சாத்தான் உன் மேல் போட நீ அனுமதிப்பாயானால்... இயற்கையே அது தவறென்று உனக்குப் போதிக்க வேண்டுமே... பரிசுத்த ஆவியை நீ பெறாமலிருந்தால், இயற்கையாவது அது தவறென்று உனக்குப் போதிக்க வேண்டும். 110. மறுபடியும் அவர்கள் அத்தி இலைகளினால் மறைத்துக் கொண்டு வருவார்கள் என்று முன்னறிவிக்கிறேன். இதை நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு முன்னறிவித்தேன். (பாருங்கள்?) வேதத்திற்கு ஒரு இழுக்கு. அவர்கள் செய்வார்கள். அது பகிரங்க நிர்வாணமாயிருக்கும்.  111. இன்று தேவகுமாரர்களிடம் பிசாசு அதையே செய்கிறான். அது உண்மை . நமது வியாபாரங்களைக் கவனியுங்கள். நமது வியாபாரங்கள் பெரும்பாலும் பெண்களின் ஆதிக்கத்திலுள்ளது. அது உண்மை , நமது சபைகளைப் பாருங்கள், நமது தேசத்தைப் பாருங்கள், தேவகுமாரர்கள் எப்படி பெண்களின் ஆலயத்தை தாழ விழுந்து பணிந்து கொள்கின்றனர் என்று. என்னைப் பொறுத்த வரையில், அவர்கள் பகிரங்க வேசிகளேயன்றி வேறல்ல. அப்படி கூறுவது பயங்கரமானது தான். ஆனால் அது முற்றிலும் உண்மை . இந்த ஒலிநாடாவை கேட்பவர்கள் அப்படி கூறியதற்காக என்மேல் குற்றம் கண்டுபிடிப்பார்கள். நீங்கள் எப்படி அவ்வாறு செய்ய முடியும்? மனிதன் உங்களைக் கண்டு இச்சிக்கத்தக்கதாக, உங்கள் மாமிசத்தை நீங்கள் காண்பித்தால் - நீங்கள் அவனுடன் விபச் சாரஞ் செய்தாயிற்று என்று இயேசு கூறினாரல்லவா? அந்த மனிதன் விபச்சாரம் செய்த குற்றத்திற்காக பதில் கூற வேண்டியவனா யிருக்கிறான். ஆனால் யார் விபச்சாரம் செய்தது? உண்மையில் யார் அதற்குக் காரணம்? அது யாருடைய குற்றம்? ஆடைகளைக் களைந்துவிட்டு அந்த பாவியிடம் தன்னைக் காண்பித்த பெண் அல்லவா? அது உண்மை . அது எதற்கு அடையாளம்? கடைசி காலத்திற்கு - சிகப்பு விளக்கு.  112. தாய்மைத்துவம் முறிந்துவிட்டது. நாடுகள் உடைகின்றன. இயேசு அதை எங்கே கூறியுள்ளார் என்று அறிய விரும்பினால், மத். 5:28ஐப் படியுங்கள். அங்குதான் அது உள்ளது. பெண்களின் வாழ்க்கை அநேகர் விழுந்து போக காரணமாயிருந்து வந்துள்ளது... பாலுணர்ச்சி கவர்ச்சி, அழிவுக்கு காரணமாயிருந்து வந்துள்ளது. நீங்கள் பின்சென்று அறிய விரும்பினால், எகிப்து, அசீரியா, ரோமாபுரி போன்ற நாடுகள் பெண்களின் கவர்ச்சி சக்தியால் விழுந்து போயின. 113. இரட்சிப்புக்கு அடுத்தபடியாக ஒரு மனிதனுக்கு தேவன் தரக்கூடியது ஒரு அருமையான மனைவியாகும். ஒரு மனிதன்களைப்புற்றிருக்கும்போது, அவனுக்கு ஆறுதல் கூற மனைவியைத் தவிர வேறு யாருமேயில்லை. ஒருவன் ஒரு இரகசியத்தைக் கூற வேண்டுமானால், மனைவியிடம் மாத்திரமே அதை கூற விரும் புவான். ஒரு நேர்மையான, ஒழுக்கமுள்ள மனைவியை நீங்கள் பெற்றிருந்தால், உங்கள் உடன் பிறந்த சகோதரர் எவ்வளவு பாக்கியசாலிகள் தெரியுமா? அவர்கள் களைத்து வரும் சமயத்தில் அவள் அவர்களை உட்கார வைத்துப் பேசுவாள். மற்றவளைக் காட்டிலும் அவள் உங்களுக்கு அதிகம் செய்ய முடியும், அது உண்மை . அவள் விலையேறப் பெற்ற ஆபரணமாயிருக்கிறாள். அவள் ராணி.  114. பெண் ஆணுக்காக சிருஷ்டிக்கப்பட்டாளேயன்றி, ஆண் பெண்ணுக்காக அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவன் கடைசியாக சிருஷ்டித்தது மனிதனையே. ஸ்திரீ மனிதனிலிருந்து சிருஷ்டிக்கப்பட்ட உபபொருள் (by product). அவள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டாள்; மனிதன் ஸ்திரீக்காக அல்ல. ஆனால் மனிதனோ பெண்ணுக்கு கோயில் கட்டி அவளைக் கும்பிடுகிறான். அதுதான் தொடக்கத்தில் உண்டானது. தேவனுடைய குமாரனாகிய ஆதாம் பாவம் செய்ய தூண்டப்பட முடியாது என்று சாத்தான் கண்டபோது, அவன் மனிதனைப் போல் உருவம் கொண்ட சர்ப்பத்திற்குள் வந்தான். அங்குதான் அது தொடங்கினது. ஏவாளும் தேவனுடைய வார்த்தை என்னும் கோட்டை யைவிட்டு வெளியே வந்தாள். அதன் விளைவாக எல்லா துயரங்களும், கல்லறைகளும் தோன்றின. செய்யப்பட்ட பாவம் அனைத்திற்கும் அதுவே தொடக்கமாயிருந்தது. மறுபடியும் அது இப்பொழுது தோன்றியுள்ளது.  115. முதலாம் வீழ்ச்சிக்குக் காரணம் பெண்ணே . அது போன்று காலத்தை முடிப்பதும் பெண்தான். அவள் தொடங்கினாள்; அவள் முடிக்கிறாள். சீயோனுக்குத் தப்பினவர்கள் கர்த்தருடைய பார்வையில் மகிமையுள்ளவர்களாயிருப்பார்கள் என்று வேதம் கூறினதில் வியப்பொன்றுமில்லை.  116. ஏசாயா 5ல் அவர், பெண்கள் கடைசி நாட்களில் எப்படி ஒழுக்கங்கெட்டவர்களாகி விடுவார்களென்றும், அவர்களுடைய உடைகள் எவ்வளவு சொற்பமாயிருக்குமென்றும், அவர்களுடைய தலைமயிர் எவ்விதம் பின்னப்பட்டிருக்குமென்றும் கூறியுள்ளார். வேதம் அவ்வாறு கூறுகிறது - ஏசாயா 5. அவள் எப்படி உயரமுள்ள காலணிகளைப் போட்டுக் கொண்டு நடப்பாளென்றும், அவள் நடக்கும் போதே காலணிகளைத் தட்டி ஓசையெழுப்பி நடப்பாளென்றும், அவள் காலுறைகளை கீழே சுருட்டி விடு வாளென்றும் அது விவரிக்கிறது. ஆனால் அவையனைத்தும் அவளை விட்டு எடுபடுமென்றும், அவள் வேசித்தனத்தினால் நாற்றமெடுப் பாள் என்றும் கூறுகிறது. ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து, “எங்கள் சொந்த வேலையை நாங்கள் செய்து கொள்கிறோம். எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பேர் மாத்திரம் எங்கள் மேல் விளங்கட்டும்” என்பார்கள். 117. ஆனால் இவைகளுக்குத் தப்பினவர்களுக்கு அந்த சிறு கிளை எவ்வளவு மகிமையாயிருக்கும் என்று அவர் கூறுகிறார். அந்த நாளில் அது கர்த்தருக்கு பரிசுத்தமுள்ளதாயிருக்கும். அந்நாளில் உண்மையான, மறுபடியும் பிறந்த பெண்கள் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தை அறிந்து கொள்வார்கள். அவர்கள் மூடரென்றும், பழைய நாகரீகமுள்ளவர்களென்றும் ஏளனம் செய்யப்பட்டாலும், அவர்கள் உண்மையாகவே நல்ல பெண்மணிகளைப் போல் மதிப்பிற்குரிய பெண்களைப் போல் நடந்து கொள்கின்றனர். நல்ல பெண்மணிகளைப் போல் நில்லுங்கள்; மதிப்பிற்குரிய பெண்களைப் போல் ஆடையணியுங்கள்; உங்கள் பேச்சும் அவ்வாறே இருக் கட்டும். மதிப்புள்ள பெண்ணைப் போல் வாழுங்கள். ஆமென். ஆமென்' என்றால் 'அப்படியே ஆகக்கடவது' என்று அர்த்தம். பயப்பட வேண்டாம். அவர்களுடைய பரிகாசம் உங்களைப் பாதிக்காது. சரி. 118. மேலும் அவர், லோத்தின் நாட்களில் .... அந்த வேத வாக்கியத்தைக் குறித்துக் கொள்ள விரும்பினால், லூக்கா 17:28. அவர்கள் புசித்தார்கள், குடித்தார்கள் என்றார் அவர். அவர்கள் வாங்கினார்கள், விற்றார்கள்..... இவையாவும் நியாயமான செயல்களே. ஆனால் கவனியுங்கள்! அவர்களுடைய சிந்தை முழுவதும் அதிலே இருந்தது. 119. லோத்தின் காலத்தில் பெண்களின் ஒழுக்கம் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. ஏனெனில் பெண்கள் உபயோகிக்கப் படவேண்டிய முறையில் உபயோகிக்கப்படவில்லை. அவர்கள் மிகவும் நெறிதவறினவர்களாயிருந்தனர். ஆகையால் ஆண்கள் ஆண்களுடன் வாழத் தலைப்பட்டனர். அவர்களுடைய பாலணுக்கள் (Sex cells) இடம் மாறின. ஏனெனில் பெண்கள் மிகவும் மோசமான நிலையையடைந்திருந்தனர். 120. சில நாட்களுக்கு முன்பு நான் டூசானில் இருந்தேன். ரொட்டி வாங்க நான் கடைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு பையன் உட்கார்ந்து கொண்டிருந்தான். இரண்டு சிறு பையன்கள் காரில் இருந்தனர். அதில் ஒருவன் ஒரு பாக்கெட்டு சிகரெட்டு வாங்க கடைக்கு வந்தான். தலைநரைத்த அந்த வயோதிப கடைக்காரர், "யாருக்காக சிகரெட் வாங்குகிறாய்? உன் தாயாருக்கா?” என்று வினவினார். அவன், “இல்லை, அந்த பையனுக்கு” என்றான். அவர், “அவனுக்கு சிகரெட் பிடிக்கும் வயதாகி விட்டதா?” என்று கேட்டார். அவன், "ஆம், ஐயா" என்றான்.  121. அவர் திரும்பிப் பார்த்தார். நான் ரொட்டியையும் பாலையும் கையில் வைத்துக் கொண்டிருந்தேன். அவர், "சரி'' யென்று சொல்லிவிட்டு அவனுக்கு சிகரெட்டைக் கொடுத்தார். அவன் போன பின்பு அவர் என்னைப் பார்த்து, "புகை பிடிப்பதற்கு அவனுக்கு வயதாகி விட்டதா என்று எனக்கு சந்தேகம்" என்றார்.  122. நான், “புகை பிடிப்பதற்கு அவன் எந்த வயதிலும் வயது நிரம்பினவனாக இருக்கக் கூடாது” என்றேன். அவர், “நீர் கூறுவதை ஆமோதிக்கிறேன்” என்று சொல்லி விட்டு, “புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவதற்கு உமக்கு கடினமாயிருந்ததா?” என்று என்னைக் கேட்டார். 123. “அந்த பழக்கத்தை நான் தொடங்கவேயில்லை. என் பெற்றோர் புகை பிடித்தனர், புகையிலை உபயோகித்தனர். ஆனால் தேவனாகிய கர்த்தர் என்னைக் காத்துக் கொண்டார்” என்றேன். 124. அவர் திரும்பி என்னை ஒருவிதமாகப் பார்த்தார். அவர், “பெண்கள் இன்று புகைபிடிப்பதை பார்க்கும்போது மிகவும் அவமானமாயுள்ளது. நாம் பெண்களை எவ்வளவாக உயர்த்தி அவர்களை கௌரவித்து வந்தோம்! அவர்களைக் காணும்போது, நமது தொப்பியைக் கழற்றி அவர்களுக்கு மரியாதை செலுத்தினோம். தெருவில் சென்ற பெண்களை யாராகிலும் கேலி செய்தால், மதிப்புள்ள ஆண்கள் அவனைக் கன்னத்தில் அறைந்து விடுவார்கள். இப்படியாக அவர்களை நாம் கௌரவித்தோம். ஆனால் இன்றைக்கோ பெண்கள் தங்கள் அவலட்சணமான நடத்தையினால், அவமானத்தை தாங்களாகவே தங்கள் மேல் வரவழைத்துக் கொண்டுள்ளனர். முன்பெல்லாம் பேருந்தில் பிரயாணம் செய்யும் போது, ஒரு பெண் பேருந்தில் ஏறினால், ஆண்கள் தங்கள் ஆசனங்களை விட்டு எழுந்து நின்று, தொப்பியைக் கழற்றி அவர்களுக்கு மரியாதை செய்து, அவர்களை உட்கார வைப்பது வழக்கம். ஆனால் இப்பொழுதோ கூட்டத்தில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்கின்றனர். தங்கள் நடத்தையின் காரணமாக இவையனைத்தையும் அவர்கள் தாங்களாகவே தங்கள் மேல் வரவழைத்து கொண்டனர்'' என்றார். அது உண்மை . ஹாலிவுட்டின் பிசாசு பிடி அவளை இறுகப் பற்றிக்கொண்டு அந்த காட்சிகளை தொலைகாட்சிகளில் காண்பித்து, பத்திரிக்கைகளில் பிரசுரித்து இப்பொழுது அது அசுத்தம் நிறைந்ததாயுள்ளது. அது உண்மை . 125. நான் கூறுவது அநேகருக்குப் பிடிக்காது. ஆனால் அது உண்மை. அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. மாத்திரமல்ல, கிறிஸ்து இச்சந்ததியில் வரப்போகிறார் என்பதற்கு அது எச்சரிப்பின் அடையாளமாயுள்ளது. "இவை சம்பவிக்கக் காண்பவர்கள், இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே ஒழிந்து போக மாட்டார்கள்'' என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர், “வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை" என்று சொல்லியிருக்கிறார், அது ஒரு எச்சரிக்கை, சிகப்பு விளக்கு எரிகிறது, திரை கீழே விழுகிறது. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம்  126. இயேசு கிறிஸ்து பிணியாளிகளைச் சுகப்படுத்துவதையும், மரித்தோரை உயிரோடெழுப்புவதையும், பிசாசுகளைத் துரத்து வதையும் போன்ற அடையாளங்களை இன்று நாம் காண்கிறோம். பரிசுத்த ஆவியால் ஜனங்கள் பரிசுத்தமாக்கப்பட்டு பரிசுத்த ராவதை நாம் காண்கிறோம். அதன் விளைவாக அநேகருடைய வாழ்க்கை மாறினதை நாம் காண்கிறோம். 'பறக்கும் தட்டுகள்' (flying Saucers) போன்ற மகத்தான அடையாளங்களை நாம் வானத்தில் காண்கிறோம். 'பென்டகனில்' உள்ளவர்கள் அது என்ன வென்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். அவை தொலைகாட்சி யில் காண்பிக்கப்படுகின்றன. அநேகர் அதை குறித்து எழுது கின்றனர். அது என்னவென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. எல்லாவிதமான அதிசய அடையாளங்கள் - கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அக்கினி ஸ்தம்ப வடிவில் இறங்கி வந்து, அவருடைய புகைப்படத்தை எடுக்க அனுமதித்து நமது மத்தியில் ஜீவிக்கிறவராய் இருந்து கொண்டு, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நிரூபிக்கிறார்.  127. இவையெல்லாம் நிகழ்வதை நாம் காண்கிறோம். சபைகள் குளிரடைந்துள்ளதை நாம் காண்கிறோம். அதே சமயத்தில் அவை எண்ணிக்கையில் பெருகுவதையும் நாம் காண்கிறோம். அத்திமரமும் மற்றெல்லா மரங்களும் துளிர்க்கிறதை நீங்கள் காணும் போது - அதாவது, அத்திமரம் அடையாளமாகத் திகழும் யூதர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பி ஒரு தேசமாக ஆகும் போது... பிரஸ்பிடேரியன்கள், மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தெகொஸ்தேயினர் போன்ற எல்லா சபைகளும் துளிர் விடுகின்றன - எழுப்புதல். அப்பொழுது, “நீ ஆயத்தப்படு. அது தான் சமயம்'' என்கிறார் அவர். இவையாவும் சம்பவிப்பதைக் காணும்போது, தேவன் தாம் முன் குறித்தவர்களை அழைத்துக் கொள்ள ஆயத்தமாகிவிட்டார் என்பதை அது காண்பிக்கிறது. இன்னும் அநேக அடையாளங்கள் : "பெண்கள் மிகவும் சௌந்தரியமுள்ளவர்களாகி, தேவகுமாரர் அவர்களுக்குள்ளே தங்களுக்கு பெண்களைத் தெரிந்து கொண்டு, இதை, அதை, மற்றதை செய்யும் போது, அதுதான் சமயம் என்று அறிந்து கொள்" என்று அவர் கூறியுள்ளார். அங்குதான் நாம் வந்திருக்கிறோம்.  128. வேறொன்றை இங்கு நான் எழுதி வைத்திருக்கிறேன். லோத்தின் இரு குமாரத்திகளை நினைவு கூருங்கள் (ஆம், அது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது) - சோதோம் பட்டினத்தில். "சோதோமின் நாட்களில் நடந்தது போல...” என்று இயேசு லூக்கா 17ல் சொல்லியிருக்கிறார். ஆண்கள் பெண்களை தவறான விதத்தில் உபயோகித்து வந்ததன் விளைவாக, அந்த இயற்கை செயலின் மேலுள்ள விருப்பம் இப்பொழுது அறவே போய்விட்டது. ஓ, இந்த மேடையின் மேலிருந்து கொண்டு அதை பற்றி கூறுவது அவ்வளவு நல்லதல்ல.... ஆனால், அது உண்மையாயிருக்குமானால், அது இங்கிருந்துதான் செல்லவேண்டும். அது நாளடைவில் அதிகரித்துக் கொண்டே வந்து, இன்று நிலைமை மிகவும் மோசமாகி, கோடிக்கணக்கான 'சோதோமியர்' (ஆண் புணர்ச்சிக்காரர் - தமிழாக்கியோன்) எல்லாவிடங்களிலும் உள்ள னர். 129. லோத்தின் நாட்களில் நடந்தது போல இன்றும் நடந்து வருகிறது. மனிதன் தன்னையே உற்பத்தி செய்து கொள்ள கையாண்டு வந்த இயற்கை செயல் மாறிப்போய், அதன் மேலிருந்த விருப்பம் வேகமாக குறைந்து கொண்டு வருகிறது, அது அதிகரிக்கும் விதத்தை காணும்போது, இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில், அது மிகவும் குறைந்துவிடும், எட்கர் ஹுவர் அதைக் குறித்து கூறியதை இங்கு குறிப்பிட விரும்பு கிறேன். (அதை வைத்திருந்ததாக நினைத்தேன், இப்பொழுது அது என்னிடமில்லை).  130. இவைகளை நாம் காண்கிறோம். யூதா தன் சிறிய பெரிய புத்தகத்தில் (அப்படித்தான் அதை நான் அழைக்கிறேன்.) 7ம் வசனத்தில் - அதை நாம் சற்று படிப்போம். அது வெளிப்படுத்தின விசேஷத்திற்கு முந்தியுள்ள புத்தகம், அதை நான் இங்கு கோடிட்டு வைத்திருக்கிறேன். யூதா 7ம் வசனம், ஆண்களும் பெண்களும் விவாகப் பொருத்தனையை செய்துவிட்டு, அதை முறித்துப் போட்டு, அந்நிய மாமிசத்தின் பின்னால் செல்வது... கவனியுங்கள். அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபச்சாரம் பண்ணி அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து (பாருங்கள்? ஓ!) நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து (அதாவது முழுவதுமாக எரிந்து மறைந்து போதல்), திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக் கிறார்கள்.  131. சில நாட்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சலிஸில் நான் கேம்ப் மைதானத்துக்குச் சென்றிருந்தேன், நான் காரில் கேம்ப் மைதானத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, மிகவும் அழகான ஒரு பெண் செல்வதைக் கண்டேன். "அவள் ஒரு காட்சியில் (Show) பங்கு கொள்வதற்காக செல்லவேண்டும்'' என்று நினைத்தேன், அவளுடைய முன்பாகத்தில் ஆறு அல்லது எட்டு அங்குலம் அகலமுள்ள ஒரு துணி மாத்திரம் தொங்கிக் கொண்டிருந்தது. அதனுடன் மூன்று அல்லது நாலு அங்குலம் அகலமுள்ள உடையின் ஓரஜாலர் (fringe) சேர்க்கப்பட்டிருந்தது. அவள் மேல் பாகத்தில் சிறு புள்ளிகள். அங்கிருந்த துணியை உங்கள் கைக்குள் அடக்கி விடலாம். அவள் மாடுமேய்ப்பவனின் (Cow boy) தொப்பி ஒன்றையும், காலணிகளையும் அணிந்திருந்தாள், மிகவும் கவர்ச்சி யுள்ளவள்... எந்த ஒரு வாலிபனும் அவள் இடுப்பை ஆட்டி நடந்து செல்லும் விதத்தை கண்டு, காரை சடுதியாக பிரேக்' போட்டு நிறுத்தி, அவளைக் காணாமல் செல்லவே முடியாது. 132. நான் கேம்ப் மைதானத்தை அடைந்தேன். நான் திரும்பிச் சென்று அவளை நிறுத்தி, “வாலிபப் பெண்ணே , கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உன்னிடம் பேச விரும்புகிறேன். நீ அழகில் சிறந்தவள் என்பதில் சந்தேகமில்லை. உன் உடலமைப்பு மிகவும் கவர்ச்சியாயிருந்தாலும்... வாலிபர் காரை சடுதியாக 'பிரேக்' போட்டு நிறுத்தும் சத்தத்தை நீ கேட்க விரும்புகிறாய். ஆனால் உன்னை அவ்விதம் செய்யத் தூண்டும் ஆவி உன்னைப் பிசாசின் நரகத்திற்கு கொண்டு சென்று, அங்கு நீண்ட காலம் நீ வேதனைப்பட வேண்டும் என்பதை நீ உணருகிறாயா? உன் அழகான உடல் கட்டும், கன்னங்களும், சிகப்பு இதழ்களும் இன்னும் ஆறே மாத காலத்தில் பூமிக்கடியில் புழுக்களால் நிறைந்து, அதனுள் இருக்கும் உன் ஆத்துமா பிசாசினால் மிகுந்த வேதனைக்குள்ளாக்கும் என்று உனக்குத் தெரியுமா?” என்று கூறலா மென்று நினைத்தேன்.  133. ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுத்து நிறுத்தினது. “அப்படி செய்தால், உன்னை சிறையில் தள்ளி விடுவார்கள்” என்று தேவன் கூறுவது போலிருந்தது. பார்த்தீர்களா? அப்பொழுது பில்லி எனக்கு சைகை காட்டி, 'நம்பிடுவாய்' என்னும் பாடலை அவர்கள் பாடுவதைக் கேட்க என்னை அழைத்தான். 134. ஓ, என்னே! ஜனங்கள் அப்படிப்பட்டவைகளில் எவ்வாறு மயங்கி விட முடியும்? அவர்கள் தேவனுடைய வார்த்தையை அவமதிப்பதால் தான். 135. வேறொரு காரியம். இந்த ஸ்தாபனங்களிலுள்ள போதகர்கள், பிரசங்க பீடத்தின் பின்னாலிருந்து அதைக் குறித்து ஒன்றும் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் அப்படி செய்தால், அது சபையோரை விரட்டி விடும் என்னும் பயம் அவர்களுக்குள்ளது. அவர்கள் அங்கத்தினர்களுக் காக நோக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தேவனோ நட்சத்திரங்களைப் போல் பிரகாசிக்கும் மறுபடியும் பிறந்த, ஜீவனுள்ள தேவனுடைய பரிசுத்தவான்களை எதிர்நோக்கி யிருக்கிறார். நாம் உத்தமமாக இருந்து, இயேசுகிறிஸ்து உரைத்துள்ள சத்தியத்தை எடுத்துரைக்க தேவன் உதவி புரிவாராக! இயேசு சொன்ன அடையாளங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கும் நாட்களில்தான் நாமிருக்கிறோம். அவை நிறைவேறுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். 136. யூதா 7ம் வசனத்தை மறுபடியும் கவனியுங்கள் - சோதோ மும் கொமோராவும், ஓ, என்னே! எவ்வளவு பயங்கரமான காரியம்! பெண்களை மணம் புரிந்த பின்பு, அந்நிய மாமிசத்தைத் தொடர்ந்து செல்லுதல். ஒருவன் ஒரு பெண்ணை விவாகம் செய்தால், அவர்கள் இருவரல்ல, ஒருவரே, வேறொரு பெண்ணின் பின்னால் செல்லும் ஒருவன், தானாகவே தன் மனைவியிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறான். அது போன்று வேறொரு மனிதனின் பின்னால் செல்லும் ஒரு பெண்ணும் தன் கணவனுக்கு செத்தவளாகி விடுகிறாள். அவனை விட்டுப் பிரியும் போது, அவள் தன் சொந்த மாமிசத்தையே புறக்கணிக்கிறாள். அது உண்மை , நியாயத் தீர்ப்பின்நாளிலே அவள் அதற்கு பதில் கூற வேண்டும்.  137. இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு பிரசங்கத்தைக் கேட்க யாரும் விரும்புவதில்லை. ஜனங்கள் அதைக் கேட்க விரும்புவதே யில்லை. அவர்கள் செவித்தினவுள்ளவர்களாய் இருக்கின்றனர். அன்று நான் மூலைக்கல்லை நாட்டின போது பரிசுத்த ஆவியானவர் என்னிடம் என்ன கூறினார் தெரியுமா? "சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு. ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ள வர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி கட்டுக் கதைகளுக்குச் சாய்ந்து போகுங் காலம் வரும்.” அவர் என்னிடம், "தரிசனம் உன்னை விட்டு நீங்கின பின்பு, 2 தீமோத்தேயு 4ம் அதிகாரத்தைப் படிக்க மறக்காதே” என்றார். நான் பத்தொன்பது வயதுள்ளவனாய் 7ம் தெருவில் ஒரு அறையில் நின்று கொண்டிருந்தபோது, தேவனுடைய சத்தம் என்னிடம், "2 தீமோத்தேயு 4” என்றது. அவர் சொன்னபடியே நிறைவேறி விட்டது. 138. அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மன தில்லாதிருக்கும் காலம் வரும். ஜனங்களுக்கு ஒன்று அவசியமா யுள்ளது... தங்கள் முதுகில் தட்டிக் கொடுத்து தங்கள் விருப்பப் படியே வாழ்க்கை நடத்தலாம் என்று கூறுவது பெந்தெகொஸ்தே யினருக்குத் தேவையாயுள்ளது. அவர்கள் அதிவேகமாக பியானோவை வாசித்து, மேலும் கீழும் குதித்து நடனமாட விரும்பு கின்றனர். ஸ்திரீகளும், தங்கள் விருப்பப்படியே நடக்க விரும்பு கின்றனர். பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு, லூத்தரன், பெந்தெகொஸ்தே போன்ற ஸ்தாபனங்கள் அனைத்திலும் உத்தம மானவர்கள் இருக்கின்றனர். ஆனால் அந்த ஸ்தாபன முறைமைகள் அவர்களை இறுகக் கட்டியுள்ளதால், சபை புத்தகங்களில் தங்கள் பெயர்கள் எழுதப்பட்டிருந்தால் அவர்கள் பரலோகம் சென்று விடுவார்களென்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். பூமியிலுள்ள புத்தகத்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருந்தால், அதனால் தேவனுக்கு ஒன்றுமில்லை (சகோ. பிரன்ஹாம் விரல்களை சொடுக்கு கிறார் - ஆசி). உங்கள் பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டனவென்று இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் எழுதப்பட்டிருக்க வேண்டும். அது உண்மை .  139. ஆனால் அவர்களோ அப்படித்தான் விரும்புகின்றனர். அப்படிப்பட்ட போதகர்கள் தான் அவர்களுக்குத் தேவை. அவர்களுக்கு வேறொன்றும் அவசியமில்லை. இந்த கடைசி நாட்களில் தேவன் அசைத்திருக்கும் போது... வேதத்தில் கூறப் பட்டுள்ள தேவனுடைய ஒவ்வொரு வரமும், இயேசு கிறிஸ்து வாக்களித்துள்ள ஒவ்வொரு வரமும், ஒவ்வொரு அடையாளமும், ஒவ்வொரு முடிவுகால அடையாளமும், எனக்குத் தெரிந்த வரைக்கும், இந்த தேசத்திற்கு முன்பாக வெளிப்பட்டு, இந்த தேசம் அசைக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த தேசம் விரைவாக நரகத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. நாம் எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும், அவர்கள் அங்குதான் சென்று கொண்டிருக் கின்ற னர். நாம் முடிப்பதற்கு முன், இன்னும் சில வேதவாக்கியங்களைப் பார்ப்போம். சரி, ஓ, நித்திய ஆக்கினைக்குத் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் வேதம் கூறுகிறது.  140. இந்த தேசம் சோதோம் கொமோராவின் அதே சமுதாய சீர்கேட்டை அடைந்துள்ளது. அது உங்களுக்குத் தெரியும். அது தமாஷ் அல்ல. அது கேள்விப்பட்ட ஒன்றல்ல. அது உண்மை, ஆதியாகமம் 6:12. அன்று மாம்சமான யாவரும் சீர்கெட்ட நிலை யிலிருந்தனர். மனிதன் தன் சொந்த வழியிலே நடந்து, தன் சொந்த ஆலோசனையின்படி நடந்து, தேவனுடைய பிரமாணங்களை அசட்டை செய்தான். இன்றைய நாட்களிலும் மனிதன் அவ்விதமே நடந்து கொள்கிறான். தேவனுடைய வார்த்தையைக் கேட்க அவனுக்கு பிரியமில்லை. அவர்கள் தங்கள் சொந்த வழியிலே நடக்க விரும்புகின்றனர். 141. தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுக்க யேசபேல் மறுத்தாள். குற்றம் கண்டுபிடிக்கும் அந்த வயோதிபனான எலியாவைத் தன் போதகர் என்று சொல்லிக்கொள்ள அவள் விரும்பவில்லை. எப்படியாயினும் அவன் அவளுடைய போதகர் தான். அது உண்மை ! ஏனெனில் தேவன் அவனை அனுப்பினார். அவன் தன் செய்தியை முழங்கினான். அவன் படிப்பறியாதவனா யிருந்தான். அவன் எங்கிருந்து வந்தானென்றும் எங்கு சென்றானென்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. அவன் தேவனு டைய வார்த்தையைக் கொண்டவனாய் காட்சியில் தோன்றினான். அவன் செய்தியைப் பிரசங்கித்து, பாவம் என்று அழைக்கப்படும் அனைத்தையும் கண்டித்தான். அந்த நவீன யேசபேல் தன் மந்திரசக்தியினால் (witchcraft) ஜனங்களை மயக்கினாள், தேசம் முழுவதுமே சீர்கெட்ட நிலையிலிருந்தது. ஆனால் எலியாவோ தன்னந்தனிமையாய் மலையின் மேல்நின்று கொண்டிருந்தான். கர்த்தர், “எலியாவே, நீ தனிமையாய் இருப்பதாக எண்ணாதே. உத்தம இருதயத்தோடுள்ள ஏழாயிரம் பேரை நான் வைத்திருக் கிறேன்” என்றார். அது அவருடைய இண்டாம் இழுப்பு, மூன்றாம் இழுப்பு அவர்களிடம் சென்றது. 142. ஆனால் கர்த்தர் இரக்கமுள்ளவராயிருந்தார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அந்த அவிசுவாசமுள்ள சந்ததியை எலியாவின் செய்தி ஆக்கினைத்தீர்ப்புக்குட்படுத்தியது. அவ்வாறே நோவாவின் செய்தியும் அவன் காலத்திலிருந்த சந்ததியை ஆக்கினைத்தீர்ப்புக்குட்படுத்தி, அதை கேட்க மறுத்தவர்கள் நியாயந்தீர்ப்புக்குள் கொண்டு வந்து, அதை விசுவாசித்தவர்களுக்கு இரட்சிப்பையளித்தது. நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். ஆதியாகமம் 6, தேவனுடைய பிரமாணங்களை அவர்கள் அசட்டை செய்தனர். 143. தேவனுடைய வார்த்தை கூறுகிறது... கவனியுங்கள். நான் தனிப்பட்ட நபரைக் குறிப்பிடுவதாக எண்ண வேண்டாம். உங்கள் சகோதரன் என்னும் முறையில் நான் உத்திரவாதமுள்ளவனாயிருக் கிறேன். முழு சத்தியத்தையும் உங்களுக்கு எடுத்துரைக்க நான் கடமைப்பட்டவனாயிருக்கிறேன். பரி. பவுல் கூறினது போல, "தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல் எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.”  144 ஸ்திரீகள் தலைமயிரை கத்தரிக்கக் கூடாது என்று வேதம் கூறுகிறது. அப்படி செய்தால் பரவாயில்லையென்று எத்தனை போதகர்கள் கூறினாலும் எனக்குக் கவலையில்லை. அப்படி செய்வது தவறாகும். எத்தனை சபை அதை ஆதரித்தாலும் எனக்குக் கவலை யில்லை. அப்படி செய்வது தவறென்று வேதம் கூறுகிறது. அப்படி ஒரு பெண் செய்வது அவமானமான செயலாகும். ஆயினும் அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றனர். அப்படி செய்தவனால் அது அவர்களுக்கு அழகையளிக்கிறது என்று அவர்கள் எண்ணுகின்றனர்.  145. அவள் அப்படி செய்யலாகாது என்று தேவனுடைய வார்த்தை அவளை எச்சரிக்கிறது. அவள் புருஷரின் உடைகளைத் தரிக்கலாகாது. ஆயினும் அவள் தொடர்ந்து செய்து கொண்டிருக் கிறாள். அவளைத் தடுத்து நிறுத்த முயன்று பாருங்கள் ! "சகோ. பிரன்ஹாமே, இதைக் குறித்து ஏன் கூச்சலிட்டுக் கொண் டிருக்கிறீர்கள்? நீங்கள் வேறு விதமாக பிரசங்கித்தால் ஜனங்கள் உங்களை விரும்புவார்கள்' என்கின்றனர். எனக்குக் கவலையில்லை. ஜனங்கள் என்ன நினைக்கின்றனர் என்பதைக் குறித்து எனக்கு கவலையுண்டு. என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். ஆனால் என் சிரத்தை அனைத்தும் தேவன் என்ன நினைக்கிறார் என்பதன் பேரிலேயே உள்ளது. ஏனெனில் இது அவருடைய வார்த்தை . அவள் செய்வது தவறென்று அவளிடம் கூறினால், அவள் எப்படியும் தொடர்ந்து அதையே செய்கிறாள். பார்த்தீர்களா? ஏன்? கிறிஸ்தவ மார்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் இவ்விதம் செய்து வருகின்றனர். ஆயினும் சபைகள் இதைக் குறித்து எவ்வித கவலையும் கொள்வதில்லை. ஏன் அப்படி? தேவகுமாரர் மாமிச இச்சைக்கு அடிமைகளாகி, தங்களை இரத்தம் என்னும் கிரயத்தினால் வாங்கி அசுத்தத்தினின்று பிரித்தெடுத்த அதே தேவனை மறுதலிக் கின்றனர். அதுதான் உண்மை . தேவனே, எனக்கு உதவி புரியும். இது உண்மை ! 146. அவளைத் தடுத்து நிறுத்த முயன்று பாருங்கள்! நோவாவின் செய்தி அக்காலத்திலிருந்தவர்களை தடுத்து நிறுத்தியது என்றா நினைக் கிறீர்கள்? இல்லை, ஐயா! அப்படியானால் அது என்ன? அது ஒரு சத்தம். நாமெல்லாரும் நியாயத் தீர்ப்புக்கு அழைக்கப்படும் போது, இன்றிரவு நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் அதே செய்தி வார்த்தைக்கு வார்த்தை என்னை சந்திக்கும். அப்பொழுது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அது பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு.  147. ஒரு காலத்தில் பெண்களிடையே பிடிவாதம் பிடித்தவர்கள் இருந்தனர்... இப்பொழுது பெண்களைக் குறித்து பேசிக் கொண்டி ருக்கிறபடியால் இதையும் கூற வேண்டியதாயுள்ளது.... இதைக் குறித்து நான் ஏன் எப்பொழுதும் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம். பிரசங்கத்தை முடிப்பதற்கு முன்பு, அநேக வேதவாக்கியங்களைக் குறிப்பிட்டு, நான் ஏன் அவ்விதம் செய்கிறேன் என்று காண்பிக்க விரும்புகிறேன். தேவனுடைய உண்மையான ஊழியன் ஒவ்வொருவனும் தேவனுடைய வார்த் தைக்கு உண்மையாயிருக்கவே விரும்புவான். நீங்கள் அவ்வாறே அதற்கு உண்மையாயிருக்க வேண்டும். நீங்கள் உண்மையா யிராவிடில், அதற்கு எதிராக ஒரு சத்தம் எங்கோ கூச்சலிட்டுக் கொண்டிருக்கும். மற்றவர்கள் என்ன செய்கிறார்களென்று எனக்குக் கவலையில்லை. அவர்களுடைய செய்கைகளுக்கு நீங்கள் உத்திரவாதிகளல்ல. தனிப்பட்ட நபர் என்னும் விதத்தில் நீங்கள் உத்தரவு சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் மெதோடிஸ்டு அல்லது பாப்டிஸ்டு, அல்லது பெந்தெகொஸ்தே யினராக உத்தரவு சொல்லப் போவதில்லை. நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு, தனிப்பட்ட விதத்தில் தேவனுக்கு உத்தரவு சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறீர்கள்.  148. இந்த அடையாளங்களைக் கண்ட பின்பும், அவர்கள் அதைச் செய்து கொண்டே போகின்றனர். அது தவறென்று அவளிடம் எடுத்துக் கூறி, அவள் என்ன பதில் கூறுகிறாள் என்று பாருங்கள், பிடிவாதம் பிடித்தவள்! ஏவாளும் அதையே செய்தாள். அதைச் செய்யக்கூடாதென்று ஏவாள் அறிந்திருந்தாள். ஏனெனில் தேவனு டைய வார்த்தை , “நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று அவளிடம் கூறியிருந்தது. சரி, அப்படியானால் அவள் ஏன் அதைச் செய்தாள்? அவள் தனக்கு விருப்பமான வழியைப் பின்பற்ற எண்ணினாள். இன்றைக்குப் பெண்கள் ஏன் தலைமயிரைக் கத்தரித் துக் கொள்கின்றனர்? அவர்கள் ஏன் இத்தகைய ஆடைகளை அணி கின்றனர்? ஏனெனில் அவர்கள் இப்படியெல்லாம் நடந்து கொள் வார்களென்று வேதம் முன்னறிவித்துள்ளது. அவர்கள் புரியும் செயல்கள் அவர்களைக் குற்றப்படுத்துகின்றன. அது உண்மை ! ஆனால் அவள் ஏன் அதை செய்கிறாள்? அவள் தனக்கு இஷ்டமான வழியில் செல்ல எண்ணுகிறாள். சபையும் அதைக் கண்டிப்பதில்லை. இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கவேண்டிய சபை அதைக் குறித்து ஒன்றுமே கூறுவதில்லை.  149. அது தவறென்று அவர்களிடம் கூறிப் பாருங்கள்! அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? "என் சந்தோஷத்தைக் கெடுக்க வேதம் என் குறுக்கே வர விரும்பமாட்டேன்." அது வேதத்தில் எழுதியிருக்கிறதே என்று சொல்லிப் பாருங்கள்.... அவர்கள் மேற்சொன்ன அதே வார்த்தைகளை ஒருக்கால் உபயோகிக்கமாட் டார்கள்; ஆனால் அந்த அர்த்தத்தில் வேறெதாவது கூறுவார்கள். "அவர்களுடைய கிரியைகள் அவர்களுடைய வார்த்தைகளைக் காட்டிலும் உரக்கப் பேசுகின்றன'' என்னும் பழமொழி உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் என்ன கூறினாலும், “உங்கள் வாழ்க்கை மிகவும் உரக்கப் பேசுவதால்,” நீங்கள் வாயினால் கூறும் சாட்சிகளை மற்றவர்களால் கேட்க முடிகிறதில்லை. இன்று காலை நான் கூறினது போல். நீங்கள் வாழும் அவ்வளவு உயரத்திற்கு குதியுங்கள். பாருங்கள்? நீங்கள் உண்மையைக் கூறிவிடுவது நல்லது. ஏனெனில் உங்கள் வார்த்தையே.... அது என்னவாயிருப் பினும், நீங்கள் யாரென்பதை உங்கள் செயல்கள் நிரூபிக்கின்றன. அதற்கு மாறாக நீங்கள் எதையாகிலும் கூறினால், அது மாய்மாலமாகி விடுகிறது. இயேசு. "மாய்மாலக்காரரே, நீங்கள் எப்படி நல்லவைகளைப் பேச முடியும்? உங்கள் இருதயத்தின் நினைவை உங்கள் வாய் பேசும்” என்றார். பாருங்கள், அவர்கள் வித்தியாசமான ஒன்றை பேசிக் கொண்டிருந்தார்கள்.  150. என்ன நேர்ந்தது? விவாகத்தின் போது... வேதத்தில் வேறொரு பாகம் உள்ளது. விவாகத்தின் போது, "கீழ்ப்படிவேன்” என்னும் பொருத்தனை செய்யப்படுகின்றது - வீட்டில் தரித்திருக்கிறவர் களும், கற்புள்ளவர்களும், நற்காரியங்களைச் செய்கிறவர்களும் (தீத்து 2:5) அவள் உங்களைப் பார்த்து புன் முறுவல் செய்துவிட்டு, வேறொருவரின் அலுவலகத்திற்கு சென்று வேலை பார்த்து விட்டு திரும்பி வந்து, “என் கணவனே... என்றால்! ஓ, எனக்கு அதில் நம்பிக்கையில்லை. இன்று காவல் துறையிலும் பெண்கள் பணிபுரிகின்றனர். என்ன ஒரு அவமானம்! அது விபச்சாரத்திற்கு (Debauchery) ஒரு அடையாளமாயுள்ளது. அநேக ஆண்களுக்கு வேலையில்லாதிருக் கும் இக்காலத்தில் (பெண்கள் வீட்டில் தரித்திருக்கிவர்களாயும், கற்புள்ளவர்களாயும் இருக்க வேண்டும் என்று உரைத்திருக்க), அவர்கள் பெண்களை வேலைக்குச் சேர்த்துக் கொண்டு வெளியே அனுப்புகின்றனர். அவளோ அவளுடைய எஜமானனின் கணக்கு புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறாள். அவளை நீங்கள் பார்க்க வேண்டும்! நான் தெய்வ பயமுள்ள, நல்ல பெண்களைப் பற்றி கூறவில்லை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! இது ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டு எல்லாவிடங்களுக்கும் செல்கிறது. ஒரு நல்ல பெண்ணை நாம் காண்போமானால், ஒவ்வொரு நல்ல பெண்ணுக்கும் இப்படிப்பட்ட 1500 பெண்கள் இருக்கின்றனர். அவர்கள் எதற்கும் செவிசாய்க்க மறுப்பார்கள். ''உங்கள் வேதாகமத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கே நீங்கள் போதித்துக் கொள்ளுங்கள், நாங்கள் கேட்க மாட்டோம்” என்கின்றனர்.  151. கீழ்ப்ப டிதல், ஓ, அவள் இப்படி கூறுகிறாள்: “உங்கள் வேதாகமக் கதைகளை வேறு யரிடமாவது கூறுங்கள். உங்கள் தேவனை வேறு யாருக்காகிலும் அறிவியுங்கள், என்னைத் தனியே விட்டு விடுங்கள், எதைக் குறித்து நீங்கள் சத்தமிடுகிறீர்கள்? இவைகளைக் கூறும்படி நான் உங்களிடம் கேட்கவில்லையே!” அது உண்மைதான். ஆனால் உன்னிடம் கூறும்படி தேவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். பாருங்கள்? அவ்வளவுதான்.  152. எனவே அவர்கள் அவ்விதம் சீர்கேட்டை அடைகின்றனர், அந்த நாளில் அவர்கள் செய்தது போல, இந்த நாளிலும் இவர்கள் செய்கின்றனர். அது சிறிதேனும் மாறவில்லை. அது மாறப் போவது மில்லை . 153. சிறுவர் புரியும் குற்றம் (Juvenile Delinquency) சிறுவர்களைப் பாதிக்கிறது. ஒரு பாகம் பெண்களையும் ஆண்களையும் சிறை ஏற்றுக் கொள்கிறது. எல்லாவற்றையும் நரகம் ஏற்றுக் கொள்கிறது. அது முற்றிலும் உண்மை . அக்கினி எல்லாவற்றையும் விழுங்கிவிடும். இந்த பிரசங்கம் அவர்கள் பின்னால் சென்றுவிடும். அவர்கள் அதற்கு செவிகொடுக்க மாட்டார்கள். வேதம் இவ்வாறு கூறி யுள்ளது என்று அவர்களுக்கு எடுத்துரைத்தால், "உங்கள் வேதாகமத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் குதூகலமாக இருக்கப் போகிறோம்” என்கின்றனர்.  154. சகோதரிகளாகிய உங்களில் சிலர் - இங்குள்ளவர்கள் அல்ல - இவ்விதம் கூறுவதை என்னால் கேட்கமுடிகிறது. "நான் என் கணவ ருக்குக் கீழ்ப்படிவதா? அவரை எனக்குக் கீழ்ப்படிய வைப்பேன்." அங்கு தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். "வீட்டைக் காக்கிறவர் களாயும் கற்புள்ளவர்களாயும் இருப்பதா? வேதம் என்ன கூறினாலும் கவலையில்லை. என்னைத்தனியே விட்டு விடுங்கள்" என் கிறீர்கள். சகோதரியே கவனி! அது இருளின் காலங்களில் எழுந்த சத்தமல்ல, அது இன்றைய சத்தம். ஜலப்பிரளயத்துக்கு முன்னாலிருந்த காலத்தில் மாத்திரம் அப்படி நடக்கவில்லை. இன்றைக்கும் அவ்வாறே நடந்து வருகிறது.  155. “நான் நவீன பெண்மணி, நான் அமெரிக்காவில் குடியிருக் கிறேன்” என்று அவர்கள் கூறுகின்றனர். நீ பன்றி வளர்க்கும் பட்டியில் வாழ்ந்தாலும், அமெரிக்காவில் வாழ்ந்தாலும், தேவனுக்கு எவ்வித வித்தியாசமுமில்லை. உன் இருதயத்தில் நீ எப்படியிருக்கிறாயோ அதுதான் நீ யாரென்பதைக் காண்பிக்கிறது. சகோதரியே, நீ உன்னை நவீனப் பெண்மணி என்று எண்ணிக் கொள்ளாதே. ஜலப்பிரளயத்துக்கு முன்னாலிருந்த நோவாவின் காலத்திலும் உன்னைப் போன்ற பெண்கள் இருந்தனர். நீ இக்காலத்தில் செய்கிறதையே அவர்கள் அக்காலத்தில் செய்தனர். எனவே நீ நவீனமானவள் என்று எண்ணிக் கொள்ளாதே. அப்படித்தானே! பாருங்கள், ஜலப்பிரளயத்துக்கு முன்னாலிருந்த காலத்திலேயே அவர்கள் அப்படித்தான் நடந்து கொண்டனர். இன்றைக்கும் அவ்விதமாகவே மறுபடியும் இருளின் காலமாயுள்ளது.  156. இவ்விதம் உன் மனைவி நடந்து கொள்ள அனுமதிக்கும் ஆண்மகனாகிய நீ, இனி ஒருபோதும் தேவகுமாரனல்ல, நீ சோதோமில் விழுந்து விட்டாய். உன் மனைவி உன் மேல் ஆதிக்கம் செலுத்த நீ விட்டுக் கொடுத்து விட்டாய். ஓ. என்னே! இதை சொல்லாமா வேண்டாமா என்று எனக்குத் தெரிய வில்லை. இதை சொல்லாமல் விட்டு விடுவது நல்லது... சரி, இது மிகவும் பயங்கரம்.  157. நாம் இந்த காலத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். சிகப்பு விளக்கு எரிகிறதை நீங்கள் காண்கிறீர்கள் அல்லவா? கர்த்தரின் எக்காளம் தொனிக்கும் அப்பொழுது இனி காலம் செல்லாது காலை நித்தியமாகவும் பிரகாசமாகவும் உதிக்கும் அப்பொழுது அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஒன்றுகூடி (பூமியின் தூளிலிருந்து) ஆகாயத்திற்கப்பாலுள்ள தங்கள் வீட்டை அடைவார்கள். (ஓ, அது எப்படிப்பட்ட நாளாயிருக்கும்! சரி. ஓ, ஆமாம்.) 158. அவர்கள் சோதோமின் நிலைக்குச் சென்றுவிட்டனர். கவலைப் படவேண்டாம். அதையெல்லாம் சுத்திகரிப்பதற்கு - முழு உலகையும் சுத்திகரிப்பதற்கு - அணுகுண்டு ஒன்று காத்துக் கொண் டிருக்கிறது, அது செய்யும், பின்பு, நாம் ஆறாம் முத்திரையின் கீழ் பார்த்த வண்ணம், இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, மீட்கப்பட்டு கிறிஸ்தவர்களாயுள்ள ஒரு கூட்டம் ஜனங்களுக்காக அது புதுபிக்கப்படும். அவர்கள் தங்கள் கவலைகளையும், உலகத்தின் நாகரீகத்தையும் களைந்தவர்களாய், இயேசு கிறிஸ்துவினிடம் வந்து, அவரையே நோக்கிப் பார்த்து, அவருடைய எளிய திட்டத்தில் பங்கு கொண்டு, அவரை விசுவாசித்து, நித்திய ஜீவனைப் பெற்றவர்களாயிருப்பார்கள். உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று கூறிக்கொண்டு, அதே சமயத்தில் வேதாகமத்திலுள்ள வார்த்தையுடன் இணங்காமற் போனால், நீங்கள் பெற்றுள்ளது தேவனால் அளிக்கப்பட்ட நித்திய ஜீவன் அல்ல. நீங்கள் மரணத்தினால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறீர்கள், ஜீவனைப் பெற்ற வர்கள் அல்ல. அது உண்மை . 159. ஓ, தேவனுக்குப் பயந்து அவருடைய வார்த்தையைக் கைக் கொள்ளுங்கள். அதுவே தேவனுடைய முழு கற்பனையாயுள்ளது. சிகப்பு விளக்குகள் எங்கும் எரிந்து கொண்டிருக்கின்றன. நேரம் அருகாமையில் வந்துவிட்டது. நோவாவின் நாட்களில் நடந்தது போல... பாருங்கள், அவர்கள் நியாயமான ஒன்றை தாறாமாறாக் கினார்கள். அவர்கள் பசித்தார்கள், குடித்தார்கள், கட்டினார்கள். அவைகள் அனைத்தையும் அவர்கள் தாறுமாறாக்கினார்கள். நாம் வீடு கட்டவேண்டுமென்று இயேசு விரும்புகிறார். நாம் புசிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அது உண்மை , ஆனால் என்ன நடந்ததென்று பாருங்கள், குடித்தல் : நாம் தண்ணீர் குடிக்கவேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் சாராயம் குடிக்கத் தொடங்கி, அவர்களு டைய ஸ்திரீகளுக்கும் கொடுத்தனர். பாருங்கள்? 160. நோவாவின் காலத்தில் ஜனத்தொகை பெருகினது போல் இன்றும் உள்ளதல்லவா? பெண்களின் அழகு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதைக் குறித்தென்ன? பாருங்கள்? சிகப்பு விளக்கு. இக்காலத்து பெண்கள் துணிகரமுள்ளவர் களாயும், இறுமாப்புள்ளவர்களாயும் இருப்பதைக் குறித்தென்ன? அவர்களிடம் நாம் ஒன்றுமே கூறமுடியாது. நீங்கள் தேவனுடைய வார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்தாலும், அவர்கள் தொடர்ந்து தங்கள் செயலில் ஈடுபடுவார்கள். பாருங்கள்? என்ன நடக்கும்? நோவாவின் காலத்தில் என்ன நடந்ததோ, அதுவே இப்பொழுதும் நடக்கும். ஒருநாள் கிருபையின் வாசல் அடைபடும். வேதம் கூறுகிறபடி, பரிசுத்த ஸ்தலம் புகையினால் மூடப்படும். அப்படியானால் மத்தியஸ்தர் அங்கிருந்து புறப்பட்டு விட்டாரென்று அர்த்தம். ஆட்டுக்குட்டியானவர் அங்கிருக்கும் வரைக்கும் - இன்று காலை நான் உங்களிடம் கூறின விதமாக, அல்லது வேறிடத்தில் பிரசங்கம் பண்ணின விதமாக நமக்கு மத்தியஸ்தம் செய்வதற்காக ஆட்டுக்குட்டியானவர் அங்கிருக்கும் வரைக்கும் கிருபை உண்டாயிருக்கும். ஆனால் ரயில் வண்டி வெளிப்புறத்தில் நிற்பதை நாம் காணும்போது, தேவனுடைய வருகையைக் குறித்த சிகப்பு வெளிச்சத்தை நாம் காணும்போது, அவர் அங்கிருந்து புறப்படாமலிருப்பார் என்பது என்ன நிச்சயம்?  161. இக்கடைசி நாட்களில் அவர் செய்யப் போவதாக வாக்களித்துள்ள வெவ்வேறு காரியங்களைக் குறித்து நாம் எவ்வளவோ பேசமுடியும். அவை நமக்கு முன்னால் நிறைவேறு வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அதுவுமல்லாமல், வேறொரு சிகப்பு விளக்கு வெளிச்சம் வீசுவதை இன்றிரவு நாம் காண்கிறோம் - பெண்களின் நடத்தையும் அவர்கள் செய்யும் காரியங்களும், எல்லாமே அவருடைய வருகையின் அடையாளங்களாயுள்ளன. எல்லா மைல் கல்லும், திசைக்காட்டும் கருவியும், காந்த ஊசியும் அவருடைய வருகையையே சுட்டிக் காண்பிக்கின்றன. 162. நாம் முடிவு காலத்திலிருக்கிறோம். ஆண்டவருடைய வருகையைத் தவிர, வேறெதுவும் நிகழப்போவதாக எனக்குத் தெரியவில்லை. கிறிஸ்துவுக்குப் புறம்பாயுள்ள என் அருமை நண்பனே, இதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்? நீ கவலையின்றி இளைப்பாறிக் கொண்டிருக்கிறாயா?... நண்பனே ஒரு சாதாரண கேள்வியை உன்னிடம் உண்மையாகக் கேட்க விரும்புகிறேன். நீ பெற்றிருக்கும் ஒரு சிறு உணர்ச்சியின் பேரில் சார்ந்திருக்கிறாயா? ஒரு சமயம் நீ மகிழ்ச்சியால் பொங்கி, பெந்தெகொஸ்தேயினர், நசரீன்கள், யாத்திரீக பரிசுத்தர் இவர்கள் செய்ததுபோல், நீயும் நடனமாடியிருக்கலாம். மகிழ்ச்சியால் பொங்கி நடனமாடினால் அது போதும் என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இதை செய்த பின்பு, நீ தலைமயிரைக் கத்தரித்து, குட்டை கால் சட்டையை அணிகிறாயா? அது தவறென்று பரிசுத்த ஆவியானவர் வேதத்தில் கூறியிருக்கும் போது, அப்படிச் செய்வதற்கு உன்னை அனுமதிப்பாரா என்ன?  163. நீங்கள், "நான் ஒரு சபையைச் சேர்ந்தவன், நான் பெந்தெ கொஸ்தேயினன், நான் மெதோடிஸ்டு (அல்லது வேறோரு சபையைச் சேர்ந்தவன்), என் தாயார் ஆயுள் அங்கத்தினர், நானும் ஆயுள் அங்கத்தினன்'' என்று கூறலாம். ஆனால் உங்கள் மேல் தங்கியுள்ள ஆவி, செய்யக்கூடாதென்று வேதம் கண்டனம் செய்யும் அதே செயல்களை செய்யும்படி உங்களைத் தூண்டுகிறது. நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, நான் அந்நிய பாஷை பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரியாதா? பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளம் அதுவே” என்று கூறலாம். ஆனால் உங்கள் ஜீவியம்.... நீங்கள் தலைமயிரைக் கத்தரித்து, செய்யக்கூடாதென்று வேதம் கூறியுள்ள செயல்களை நீங்கள் செய்வீர்களானால், இரவும் பகலும் நீங்கள் அந்நிய பாஷை பேசினாலும், தேவன் அதனுடன் ஈடுபட மாட்டார். ஒரு மரம் அதன் கனிகளினால் அறியப்படும்.  164. எனக்கு வயதாகிக் கொண்டு போகிறதை நானறிகிறேன். ஒவ்வொரு நாளும் புதிதாக என் தேகத்தில் வலி தோன்றுகிறது. நாமெல்லாரும் அதே விதமாகத்தான் இருக்கிறோம். நான் உண்மையைக் கூறிவிடுவது நல்லது. "ஆண்டவரே, எனக்கு இவ்விதம் ஏற்பட அனுமதியாதேயும்” என்று நான் நினைப்பதுண்டு. மிகவும் பரிதாபமான காரியம் என்னவென்றால், இயேசுவை ஏற்றுக் கொள்ளாமல், ஒரு ஸ்தாபனத்தின் அங்கத்தினனாக இருந்து கொண்டு, சாத்தானைவிட மோசமான நிலையையடைந்து, "ஓ, அதை நான் விசுவாசிக்கமாட்டேன்'' என்று கூறுவதாகும். அது சாத்தான் அவனுக்கு சூட்டும் மிகப் பயங்கரமான கிரீடமாகும். அறுபது அல்லது எழுபது வயது நிரம்பிய கிழவி ஒருத்தி, தன் கைகளில் கொழுப்பு தொங்கிக் கொண்டு, முகம் முழுவதும் சுருக்கம் விழுந்திருக்க, அவள் தன் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, முகத்தில் ஐந்தாறு வர்ணங்கள் பூசிக்கொண்டு, குட்டை கால் சட்டையை அணிந்து தெருவில் நடந்து செல்வதைக் காணும்போது சாத்தான் அவளுக்கு கிரீடம் சூட்டியுள்ளான் என்று நினைப்பதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?  165. ஓ, தேவனே, குறை கூறாதபடிக்கு இருக்க கிருபையைத் தாரும். ஆண்டவரே, என் ஜீவன் எனக்குத் தேவை, என் ஜனங்களின் ஜீவனும் எனக்கு அவசியமாயுள்ளது. ஆண்டவரே, அதை அருள்வீராக. நாங்கள் எவ்வளவு துன்பப்பட்டாலும், என்ன நேர்ந்தாலும், அநேகர் எனக்கு விரோதமாக எழும்பினாலும், எங்கள் ஜீவனை நீர் முடி சூட்டுவீராக. ஒன்று மாத்திரம் எனக்குத் தெரியும். எனக்கு வயதாகுந்தோறும், என்னைப் பின் தொடரும் நண்பர்கள் குறைந்து கொண்டே வருவார்கள். நான் பாதையில் சென்று கொண்டிருக்கும்போது, அவர்களின் எண்ணிக்கை குறுகிக் கொண்டே செல்லும். சில நாட்களுக்குப் பின்பு, யாருமே என்னிடம் வந்து ஆலோசனை கேட்கமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். நான் வாலிபனாயிருந்த போது என்னை அறிந்தவர்கள், நான் உயிர் வாழ நேரிட்டால் என்னை விட்டு சென்று விடுவார்கள். எனக்கு வயதாகுந்தோறும் என் நண்பர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும்.  166. என்றாவது ஒரு நாளில் நான் மரிக்க வேண்டும். என்னை அசிரத்தையுள்ள கிழவனாகவும், என் மனைவியை தொந்தரவு செய்து கொண்டிருக்கும் கிழவியாகவும் சாத்தான் எங்களுக்கு கிரீடம் சூடும்படி தேவன் அனுமதிக்கமாட்டாரென்று நம்புகிறேன். அப்படியே உங்களையும் உங்கள் மனைவியையும் அந்த விதமாக அவன் கிரீடம் சூட அவர் அனுமதிக்கக்கூடாது சகோதரனே, நமது வாழ்க்கை ஆவியின் கனிகளாகிய அன்பு, சந்தோஷம், நீடிய பொறுமை, நற்குணம், பொறுமை, சத்தியம், பரிசுத்த ஆவியின் பேரிலுள்ள விசுவாசம் என்பவைகளினால் முடி சூடப்படவேண்டு மென்று ஜெபிக்கிறேன். 167. என் வாழ்க்கை கடந்து போகிறது... முப்பத்தைந்து ஆண்டு கட்கு முன்பு ஒரு சிறு பையனாக நான் பிரசங்க பீடத்தின் மேல் நின்றேன். ஆனால் இன்றிரவோ என் தலைமயிர் நரைத்துப் போய், வழுக்கை தலையுடன், தோள்கள் தொங்கியவனாய் இருக்கிறேன். என் பெலன் குன்றிப்போனது. என் வாழ்க்கை குறுகிக் கொண்டே போகிறது. நான் வாழ்க்கை படகில் ஆற்றில் சென்று கொண்டிருக் கும் போது, என் நண்பர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். இப்பாடல்களை நான் ரசித்தது போல ரசிக்க முடியாத நிலைக்கு சற்று கழிந்த பின்பு வந்து விடுவேன் என்று எண்ணுகிறேன். ஒருக்கால் என் பிள்ளைகள் என் பேரப்பிள்ளைகளிடம், "தாத்தாவை தொந்தரவு செய்யாதீர்கள்” என்று கூற நேரிடும் - நான் அவ்வளவு காலம் உயிர் வாழ்ந்தால்.  168. பிறகு நான் நாற்காலியை விட்டு எழுந்திருக்க முடியாத படிக்கு அவ்வளவு வயோதிபனாகி விடுவேன். அப்பொழுது ஒருநாள் மூடுபனி (fog) என் அறைக்குள் வரும். என்னிடம் வரும் படி நான் மரணத்திற்கு சைகை காட்டுவேன். அது என் கைபிடித்து என் எஜமானிடம் கொண்டு செல்லுமே தவிர வேறொன்றையும் செய்யாது. நான் அதற்கு அடிமையல்ல, அதுதான் என் அடிமை. கிறிஸ்து எனக்காக மரணத்தை வென்றார். எனவே அது செய்யக் கூடிய ஒன்றே ஒன்று என் எஜமானிடம் அழைத்து செல்லுதலாம். பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும்...  169. குழந்தையைப் பெற்றெடுக்க ஒரு தாயாருக்கு சமயம் நெருங் கும்போது, அவள் எவ்வளவு கொடூரமான சுபாவத்தையுடைய வளாயிருந்த போதிலும், குழந்தையைப் பெறுவதற்கு சற்று முன்பு அவள் மிருதுத் தன்மையைப் பெறுகிறாள். ஏன்? அந்த கர்ப்பத்தில் அந்த சிறு தசைகள் நெளிந்து குதித்துக் கொண்டிருக் கும்போது, அதற்காக பரலோகத்தின் சரீரம் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது. அது தாயின் கர்ப்பத்திலிருந்து வெளி வந்தவுடன், மருத்துவர் அல்லது நர்ஸ் யாராகிலும் அதைக் கையிலெடுத்து, அதற்கு அதிர்ச்சியுண்டாக்கவோ, அடிக்கவோ அல்லது குலுக்கவோ செய்ய வேண்டியதாயுள்ளது. அப்பொழுது அது ஜீவனின் சுவாசத்தைப் பெற்றுக் கொள்கிறது. அப்பொழுது தேவ தூதருக்குரிய ஆவியாகிய ஜீவனின் சுவாசம் அதற்குள் வருகிறது. அது ஜீவாத்துமாவாகிறது. நாம் கிறிஸ்துவை நமது இருதயத்தில் கொண்டிருக்கும்போது, அவர் நமது இருதயத்தில் தத்ரூபமாக ஆகும் போது, அது சிறு குழந்தையாயுள்ளது.  170. பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும்... முடிக்கும் தருணத்தில் இதை கூற விரும்புகிறேன். யோவான் 14ல் இயேசு கூறியுள்ளார். "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவ னிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமா யிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக கூடாரங்கள் உண்டு. ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன் (பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும், நித்திய வீடு ஒன்றுண்டு) - ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன். நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும் படிக்கு" என்றார் அவர். நாம் அவருடன் இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.  171. இந்த சிறு பிள்ளை அழும்போது, மறுபிறப்பு ஏற்கனவே என்னில் உருவாகி விட்டதால், இந்த மனித ஜீவன் முடிவுற்ற பின்பு, என்னை அதிர்ச்சியுறச் செய்ய ஒன்று அவசியமாயுள்ளது. அது தான் மரணம். மரணம் என்னைத் தாக்கும் போது, அது எனக்கு அதிர்ச்சியையளிக்கிறது. அது மறுபக்கத்திலுள்ள அந்த புதிய ராஜ்யத்தில் நாம் மறுபடியும் பிறக்கும்படி செய்கிறது. அங்கு வியாதியோ, துன்பமோ, வயோதிபமோ எதுவுமில்லை. தேவன் நமக்கு துணைபுரிவாராக.  172. நண்பனே, அப்படிப்பட்ட ஒன்றை நீ எவ்வாறு புறக்கணிக்க முடியும்? இயேசு கிறிஸ்துவுக்குப் புறம்பே இவ்வுலகில் வேறு நம்பிக்கை எதுவுமில்லை. சிகப்பு விளக்குகள் எரிந்து கொண்டிருக் கின்றன. நாடுகள் உடைகின்றன, இஸ்ரவேல் விழித்தெழும்புகிறாள் இவை வேதாகமம் முன்னுரைத்த அடையாளங்களாம் (பெண்கள் தலைமயிரைக் கத்தரித்தல், குட்டை கால்சட்டை அணிதல், சிகப்பு விளக்கு எரிகின்றது, பாருங்கள்?) - புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன, திகில் சூழ்ந்துள்ளது. சிதறப்பட்டோரே, உங்கள் மந்தைக்குத் திரும்புங்கள். மீட்பின் நாள் சமீபமாயுள்ளது. மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்துள்ளன. பரிசுத்த ஆவியால் நிறைந்து உங்கள் தீவட்டிகளை சுத்தப்படுத்தி மேல்நோக்குங்கள், உங்கள் இரட்சிப்பு சமீபமாயுள்ளது.  173. அவரை நான் நேசிக்கிறேன். நீ அவரை நேசிக்க வேண்டு மென்று விரும்புகிறேன். சற்று நேரம் ஜெபம் செய்து கூட்டத்தை முடிக்க தலைவணங்கியிருக்கும் இந்நேரத்தில்... சிகப்பு விளக்குகள் எரிகின்றன. சிக்னல் போடப்பட்டு விட்டது. கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது. அவர் தேசத்தினிடம் பேசுகின்றார். அவர் மக்களிடம் பேசுகின்றார். அவர் அடையாளங்கள், அற்புதங்கள் மூலம் பேசுகின்றார். நாம் சோதோமைக் குறித்து ஆராய்ந்து, அது அக்கினியால் அழிக்கப்படும் முன்பு, தூதன் ஆபிரகாமிடம் வந்து எந்தவிதமான அடையாளத்தைக் காண்பித்தான் என்று பார்த்தோம்.  174. "லோத்தின் நாட்களில் அவர்கள் கட்டினார்கள், விற்றார்கள்" என்றார். இன்றைக்கும் என்ன நடக்கிறதென்று பாருங்கள். நோவாவின் காலத்தில் பெண்கள் சௌந்தரியமுள்ளவர்களாய் இருந்தனர், தேவகுமாரர் அதில் மயங்கினர். மானிட மாமிசம் பெண்களின் ரூபத்தில் தொழுது கொள்ளப்படுதல், இவை யாவும் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறதென்று இன்றிரவு நாம் பார்த்தோம். விளக்குகள் எரிகின்றன. கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது. நண்பனே, நீ இன்னும் சபை அங்கத்தினனாக மாத்திரம் இருக்கிறாயா? இன்றிரவு நீ உயிர் வாழ்வாய் என்பது என்ன நிச்சயம்? சகோ. வே இன்று காலை இங்கு நின்றுகொண்டு யாருடனோ கைகுலுக்கிக் கொண்டிருந்த அந்த நொடிப் பொழுதில் மரித்து கீழே விழுந்தார். தேவன் தயவாய் அவருக்கு ஒரு தருணத்தை அளித்தது போல் உனக்களிக்காமல் இருக்கலாம். உன் இருதயம் எந்த நேரத்தில் கடைசியாக துடிக்கும் என்பதை நீ அறிய மாட்டாய். சற்று யோசித்துப் பார்.  175. கர்த்தருடைய வருகையின் அடையாளம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. நான் இன்றிரவு உங்களிடம் கூறினது பலரால் விரும்பப்படாமலிருக்கலாம். ஆனால் அது உண்மை , அது தேவன் கூறினதாவது. 176. பெண்களுக்கு வீட்டில் தங்க விருப்பமில்லை. அவர்களுக்கு குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள பிரியமில்லை. அவர்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள யாரையாகிலும் அமர்த்தி விட்டு, விருந்துகளுக்கு சென்று விடுகின்றனர். சிறுவர்கள் குற்றம் புரிகின்றனர். இவை யாவும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தலை மயிர் கத்தரித்தல், குட்டை கால்சட்டை அணிதல், அழகுப்படுத்தும் சாதனங்களை உபயோகித்தல். பெண்களின் அழகு நாளடைவில் அதிகரித்துக் கொண்டே போகிறது. இயேசு கூறினது போன்று, தேவகுமாரர் பிசாசின் கண்ணிகளில் விழுகின்றனர். அது அவ்வாறே நிகழவேண்டும். அவர் கூறினவிதமாகவே இன்று நிறைவேறிக் கொண்டு வருகிறது. அவர், "இவைகள் சம்பவிக்கும் போது, இந்த சந்ததி (ஒரு சந்ததிக்கு நாற்பது ஆண்டுகள்) ஒழிந்து போகாது” என்றார். அதை யோசித்துப் பாருங்கள்.  177. நீங்கள் இன்னும் சபை அங்கத்தினராக மாத்திரம் இருந்து வருகிறீர்களா? .... ஆண்களே, பெண்களே, இன்றிரவு உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள், உங்கள் தவறுகளை உணருங்கள், கிறிஸ்து இன்றிரவு இதை உங்களுக்குப் பிரசங்கித்திருப்பாரானால், உங்கள் கதி என்ன என்பதை யோசித்துப் பாருங்கள், "அவர் இதை பிரசங்கித்திருந்தால் நான் மனந்திரும்பி யிருப்பேன்” என்று நீங்கள் கூறலாம். இது அவருடைய வார்த்தையே. ஆகையால் இப்பொழுதே மனந்திரும்புங்கள். 178. நீங்கள் தேவனற்றவர்களாயிருந்தால்.... "ஓ, நான் ஒரு சபை அங்கத்தினன். நான் அந்நிய பாஷை பேசியிருக்கிறேன்” எனலாம். அதையெல்லாம் ஒருபுறம் வைத்துவிடு. உன்னை ஆராய்ந்து பார். உன் வாழ்க்கையை தேவனுடைய வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார். "சகோ. பிரன்ஹாமே, வேதம் என்ன கூறினாலும் எனக்கு கவலையில்லை. நீர் கூறுவது தவறு” என்று சொல்பவர்களில் நீயும் ஒருவனா? நான் தவறு என்று நீங்கள் நினைத்தால், நான் தவறல்ல, தேவனுடைய வார்த்தை தவறாயிருக்க வேண்டும். அப்படியானால் நீ இன்னும் தேவனை அறிந்துகொள்ளவில்லையென்று அர்த்த மாகிறது. இயேசு இந்த மணி நேரத்தில் வருவாரானால், நீ அவருடன் செல்ல ஆயத்தமாயிருக்கிறாய் என்னும் நிச்சயத்தை உடையவனாயிராமல் இருக்கிறாய். மரணம் இவ்வளவு அருகாமை யிலுள்ளது என்று நீ காணும்போது, நீ ஏன் உதறித்தள்ளுகிறாய்?  179. இங்கு தலைவணங்கியுள்ளவர் யாராகிலும் ஜெபத்தில் தங்களை நினைவுகூர வேண்டுமென்று விரும்பினால், உங்கள் கைகளை யுயர்த்தி, "சகோதரனே, எனக்காக ஜெபம் செய்யுங்கள்” என்று சொல்வீர்களா? சகோதரியே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, சகோதரியே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஓ, கட்டிடம் முழுவதிலும் கைகள் உயர்த்தப்பட்டுள்ளன.  180. இப்பொழுது நாம் கணக்கெடுத்துப் பார்ப்போம். சகோதரிகளே, எல்லா நன்னம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் இதை சற்று யோசித்து பாருங்கள்; “நான் உண்மையில் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறேனா? என் வாஞ்சை என்ன?” என்று சிந்தித்துப் பாருங்கள். “சகோ. பிரன்ஹாமே இப்படிப்பட்ட காரியங்களை நான் செய்கிறேன் என்பது உண்மை. ஆனாலும் நான் சந்தோஷமாயிருக்கிறேன்” என்று நீங்கள் கூறலாம். அஞ்ஞானி களும்கூட உங்களைப் போலவே சந்தோஷமாயிருக்கின்றனர் என்று உங்களுக்குத் தெரியுமா? மது அருந்துபவன் கூட, போதையில் சந்தோஷமாயிருக்கிறானே! தேவனுடைய வார்த்தைக்கு முரணா யுள்ள செயல்களில் ஈடுபட்டு சந்தோஷம் அடைந்தால், அது பிசாசு என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். “நான் சபை அங்கத்தினனா யிருப்பதில் திருப்தி அடைந்திருக்கிறேன்” என்று நீ சொல்லலாம். தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கப்படுவதை நீ கேட்டு, அது உன்னுடைய கருத்துடன் ஒத்துப் போகாமலிருந்தால், நீ தவறான காரியங்களினால் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறாய் என்று அர்த்தமா கிறது. உன் உணர்ச்சி எதுவாயிருப்பினும்... அவர்கள் கூச்சலிடு வதையும், மேலும் கீழும் குதிப்பதையும், மண்டை ஓட்டிலிருந்து இரத்தத்தைக் குடித்து பிசாசைக் கூப்பிட்டு சந்தோஷமாயிருப் பதையும் நான் கண்டிருக்கிறேன். அது உண்மை! அஞ்ஞான மார்க்கமும் கூட மன உணர்ச்சியை உண்டாக்குகிறது, ஆனால் கிறிஸ்துவைக் குறித்த அனுபவமோ, இருதயத்தில் ஒரு மாறுதலை யுண்டாக்கி, ஒரு மனிதனைப் புது சிருஷ்டியாக்குகிறது. அதை ஆழ்ந்து சிந்தியுங்கள்! 181. உங்களை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் முன்னால் நிலைக் கண்ணாடி இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள், உங்கள் உருவத்தை அதில் காண்கிறீர்கள், “நான் உண்மையாகவும் உத்தமாகவும் இருந்து வந்திருக்கிறேனா? உண்மையாகவே நான் அவரை என் இருதயத்தில் சேவித்து வந்திருக்கிறேனா? நான் அவரைச் சேவிக்கத் தீர்மானித்து விட்டேன்” என்று கூறுங்கள். 182. தலைமயிரைக் கத்தரித்து, குட்டை கால் சட்டை அணிந்துள்ள பெண்களே, நீங்கள் செய்யும் காரியங்களை சற்று யோசித்துப் பாருங்கள். இவ்விதம் செய்ய உங்கள் மனைவியை அனுமதிக்கும் ஆண்களே... "நான் தேவகுமாரன் தானா, அல்லது சோதோமியனா?” என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பெண்களாகிய நீங்களும், "நான் உண்மையில் நவீன பெண்மணியா? அல்லது இக்கடைசி நாட்களில் மீண்டும் தோன்று மென்று இயேசு முன்னுரைத்த அந்த ஜலப்பிரளயத்தின் நாட்களுக்கு முன்பிருந்த பெண்களின் வகுப்பைச் சார்ந்தவளா?” என்று எண்ணிப் பாருங்கள். உங்களையே நீங்கள் ஆராய்ந்து எண்ணிப் பாருங்கள். 183. நீங்கள் யாரென்று உங்கள் உருவமே அறிவிக்கிறது. நீங்கள் தேவனுடைய பார்வையில் சரியாயில்லையென்றால், உண்மையை யுணர்ந்து, உங்கள் கரங்களையுயர்த்தி, “கிறிஸ்துவே, நான் சகோ.பிரன்ஹாமிடமோ அல்லது வேறு யாரிடமோ என் கையை யுயர்த்தவில்லை; உம்மிடம் மாத்திரமே உயர்த்துகிறேன், நான் தவறு செய்திருக்கிறேன். என்னை மன்னியும். எனக்காக ஜெபம் செய்வதற்காக சகோ. பிரன்ஹாம் வாக்கு கொடுத்திருக்கிறார். நான் இப்பொழுது கையையுயர்த்தி “இயேசுவே, என் மீது இரக்கமா யிரும். கிறிஸ்துவின் நிமித்தம் என்னை இரட்சியும். நான் இழக்கப்பட விரும்பவில்லை. இந்த ஜீவனை நீர் தான் எனக்குத் தந்தீர். இன்றிரவு இந்த பொன்னான தருணத்தை இழந்துவிட நான் விரும்பவில்லை. கர்த்தருடைய வருகையை அறிவிக்கும் சிகப்பு விளக்குகள் எல்லா பக்கங்களிலும் எரிந்து கொண்டிருப்பதை என் கண்களால் காண்கிறேன் - அவர் இந்த அடையாளங்களைக் காண்பிப்பார் என்றும், அவர் பிணியாளிகளை சுகப்படுத்துவார் என்றும், மரித்தோரை உயிரோடெழுப்புவார் என்றும், பிசாசுகளைத் துரத்துவாரென்றும், சிறுபான்மையினோர் மாத்திரமே இவ்வுலகில் அதை ஏற்றுக் கொள்வார்களென்றும், உலகம் அவர்களைக் கேலி செய்து அவதூறான பெயர்களால் அழைக்கும் என்று உணருகிறேன்" என்று கூறுங்கள். 184. அவர்கள் நம்மை அவதூறான பெயர்களால் தான் அழைக்க வேண்டும். சத்தியத்தை அவர்கள் அவதூறான பெயரால் தான் அழைக்க வேண்டும். மனுஷகுமாரனுக்கு விரோதமாக பேசப் படும் வார்த்தைகள் மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவி யானவர் வந்து, “மனுஷகுமாரன் செய்ததையே செய்யும் போது, அவருக்கு விரோதமாய் பேசப்படும் வார்த்தைகள் இவ்வுலகில் மன்னிக்கப்படாது'' என்று இயேசு கூறியுள்ளார். பாருங்கள், அவர்கள் அதற்கு விரோதமாய் பேசத்தான் வேண்டும். ஜனங்கள் கேலி செய்வதற்காக இப்படிப்பட்ட ஒரு செய்தி வரவேண்டும். அப்பொழுதுதான் தேவனுடைய நீதி இவ்வுலகை ஆக்கினைக்குட் படுத்தி அதை அழிக்க முடியும்.  185. கிருபை இருக்கும்போதே - இயேசுகிறிஸ்து இடைவெளியில் நின்று கொண்டு வாசல் திறந்திருக்கும் போதே - நண்பனே, அவரை ஏற்றுக் கொள்ள மாட்டாயா?  186. இப்பொழுது வழக்கம் போல நாம் பீட அழைப்புக்கு வந்திருக்கிறோம். பீட அழைப்பு கொடுப்பது சரிதான். அதற்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் வேதம், “விசுவாசித்தவர் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்” என்று கூறுகிறது. உங்கள் முழு இருதயத்தோடும், நீங்கள் அமர்ந்திருக்கும் அந்த இடத்திலிருந்து கொண்டே - இயேசு உங்களுடன் பேசி, நீங்கள் கையுயர்த்தின அந்த இடத்திலிருந்து கொண்டே - உங்கள் ஜீவியத்தை இயேசுகிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்பீர்களானால்....  187. இன்று காலை எனக்கு முன்னால் மரித்து கிடந்திருந்த இந்த மனிதனை உயிரோடெழுப்பின அதே தேவன்; நான் கூறுவது உண்மையென்று இந்த மனிதன் இங்கு உறுதிப்படுத்துகிறார்... தேவனேயல்லாமல் யார் மரித்தோரை உயிரோடெழுப்ப முடியும்? அது உண்மை . எனவே, அது படிப்பறியாத உங்கள் போதகரல்ல, உங்களை நேசிக்கும் கிறிஸ்துவே. அவர் தம்மை இன்றிரவு உங்க ளுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். "நீங்கள் சத்தியத்தை கேட்டீர்கள், சத்தியம் வெளிப்படுவதை நீங்கள் கண்டீர்கள். அது அனைத்தும் என் வார்த்தையிலிருந்தே. என் வார்த்தை மரித்தோரை உயிரோடெழுப்பினதைக் கண்டீர்கள். என் வார்த்தை இவை யனைத்தையும் முன்னறிவித்ததை நீங்கள் கண்டீர்கள். இத்தனை ஆண்டு காலமாக ஒருமுறை கூட பிசகாமல் அவை நிறைவேறி னதை நீங்கள் கண்டு வந்திருக்கிறீர்கள்."  188. சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் நீங்கள் இயேசுவைக் குறித்து என்ன செய்யப்போகிறீர்கள்? நீங்கள் ஏன் உலகமாகிய வேர்க்கடலைப் பையைத் தூர எறிந்து விடக் கூடாது? 'உண்மையான கதை' (True Story) என்னும் பத்திரிக்கையை - நாள்தோறும் உங்கள் ஆத்துமாவை நீங்கள் போஷிக்கும் அந்த குப்பையை - நீங்கள் ஏன் எறிந்து விடக்கூடாது? மூலையில் உட்கார்ந்து தொலைகாட்சியைப் பார்க்கும் அந்த பழக்கத்தை நீங்கள் ஏன் விட்டு விடக்கூடாது? நீங்கள் சபைக்கு செல்வதற்கு அது தடங்கலாயிருந்தால், அந்த தொலைகாட்சிப் பெட்டியை நீங்கள் ஏன் அணைத்து விடக்கூடாது? உங்களைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாரமான யாவற்றையும் நீங்கள் ஏன் தள்ளிவிடக் கூடாது? உங்கள் இருதயத்தை கிறிஸ்துவினிடம் உயர்த்தி, "கிறிஸ்துவே, நான் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். உம்முடைய வருகையை என்னால் காண முடிகிறது. தேவனுடைய வார்த்தையாகிய பயணப் பெட்டியை (Suitcase) என் கையில் எடுத்துக்கொள்கிறேன். நித்திய ஜீவனுக்கேற்றவை அதில் நிறைய அடங்கியுள்ளன. இன்று முதல் அதன்படி நான் வாழுவேன்” என்று கூறுவீர்களா? நாம் ஜெபிக்கும் போது அப்படி செய்வீர்களா?  189. எங்கள் பரலோகப் பிதாவே, நான் கடூரமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவைகளைச் சொல்லவில்லை. இந்த செய்தி ஒரு குறிப்பிட்ட நேரத்தை சுட்டிக் காட்டுகிறதேயன்றி, ஒரு தனிப்பட்ட நபரையல்ல - ஒரு குறிப்பிட்ட நேரத்தை . இச்செய்தியை பிரசங்கிக்க வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் என்னை நெருக்கினார். அநேக முறை இந்த பிரசங்க பீடத்திலிருந்து, இயேசு உரைத்துள்ள லோத்தின் நாட்களை - 'சோதோமின் நாட்களை'- குறித்தும், காலத்தின் அடையாளத்தைக் குறித்தும், ஆண்டவருடைய வருகையைக் குறித்தும் வெவ்வேறு சமயங்களில் நான் பிரசங்கித்ததுண்டு... இன்றைய பெண்களுக்கு விரோதமாக இவ்வளவு கடின் வார்த்தைகளைப் பேசின பின்பு, நான் ஏன் இவ்வாறு பேசினேன் என்று ஜனங்களுக்கு விளக்கம் கூற வேண்டுமென்று ஆவியானவர் என்னை ஏவுகிறார். இவ்விதம் நான் செய்யக் காரணம், ஆவியானவரால் அருளப்பட்ட உம்முடைய வார்த்தை என் இருதயத்தை அசைத்தது. எனவே என்னால் பேசாமலிருக்க முடியவில்லை.  190. பிதாவே, தேவனுடைய கடூரமான, மனதை ஊடுருவிச் செல்லும் வார்த்தையைக்கேட்டு, இக்கட்டிடத்தில் ஐம்பது முதல் எழுபத்தைந்து கரங்கள் உயர்த்தப்பட்டன, ரயில் வண்டியின் ஊதல் ஊதுகின்றது என்பதை அறிந்து கொள்ள, அது அவர்களை அதிர்ச்சியூட்டும் நிலைக்கும் கொண்டு வந்துள்ளது. பரிசுத்தவான்கள் அனைவரும் ஒன்று கூடுகின்றனர். தேசங்கள் சின்னாபின்னமாகின்றன. அவருடைய வருகையை அறிவிக்கும் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இன்றிரவு நான் பெண்களின் செயல்களைக் குறித்து பேசின அனைத்தும், வேதம் கூறினதன் நிறைவேறுதலாக அமைந்துள்ளது.  191. இயேசு கிறிஸ்துவின் என்றும் தவறாத சத்தம், நோவாவின் காலத்தை இன்று நாம் வாழும் காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் அழகாகிக் கொண்டு வருவதையும் தேவகுமாரர் அவர்களைப் பெண் கொள்வதையும் நாம் காணும்போது, இந்த சந்ததி கிறிஸ்துவின் வருகையைக் காணுமென்று அறிந்து கொள்கிறோம். சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருப்பதால், அவருடைய வருகை சமீப மாயுள்ளது என்று அறிந்துகொள்கிறோம்.  192. பரலோகப் பிதாவே, கைகளையுயர்த்தின ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். இந்த தாழ்மையான, உத்தமமான ஜெபத்தை நான் ஏறெடுக்கிறேன். என் ஜெபத்தை நீர் கேட்பீரென்று எனக்குத் தெரியும். ஒரு தாழ்மையான ஜெபத்தை நீர் கேட்டு, தன் மனைவியின் மடியில் மரித்தவராய் விழுந்து போன சகோ. வேயின் மேல் இன்று காலை நீர் இரக்கங்கொண்டு, அந்த ஜெபத்தின் விளைவால் அவருடைய இருதயம் மீண்டும் துடிக்க நீர் கிருபை செய்தீர்... ஆண்டவரே, அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்திருப்பது என்பது, சரீர மரணத்தைக் காட்டிலும் மிகவும் அபாயகரமானது என்று ஜனங்கள் இன்றிரவு அறிந்து கொள்வார்களாக. அக்கிரமங்களையும் பாவங்களையும் கொண்டவர்களாய் அவர்கள் திரையைக் கடந்து செல்வார்களானால், யாருமே அவர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது. கைகளையுயர்த்தின ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் .. இன்றிரவு அருளும், ஆண்டவரே. இந்த ஜெபத்தை நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஏறெடுக்கிறேன். அவர்களுடைய வாழ்க் கையில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டு, தேவனுக்கு விரோதமாக அவர்கள் இனி ஒரு போதும் பாவம் செய்வதில்லையென்றும், இந்நேரம் முதற்கொண்டு அவர்கள் தேவனுடைய நித்தியமான, ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையில் நிலைநின்று, அவருடைய பரிசுத்த ஆவியானவரால் போஷிக்கப்பட்டு, அவர்களுடைய வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு நாளும் அவர்கள் ஜீவனுள்ள பாதையில் நடத்தப்படுவார்கள் என்னும் உறுதியைக் கொண்ட வர்களாயிருக்க அருள்புரியும்.  193. எங்கள் பரலோகப் பிதாவே, ஒருக்கால் அவர்களை நான் மறுபடியும் காணாமல் போய்விடலாம். ஒருக்கால் இப்பூமியில் அவர்களுடைய மாமிச கரங்களை நான் மீண்டும் குலுக்காமல் போய்விடலாம். ஆனால் தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்திற்கு நீர் உத்தரவு அருள வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். “என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பின வரை விசுவாசிக்கிறவக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட் பட்டிருக்கிறான்'' என்று உம்முடைய வேதத்தில் நீரே கூறி யிருக்கிறீர். என்னுடைய எளிய முறையில் இன்றிரவு நான் தேவனு டைய சத்தியத்தை அளித்தேன். அநேகர் தேவனுடைய வார்த்தையைக் கேட்டார்கள். அவர்கள் இரட்சிக்கப் படுவார்க ளென்றும், அவர்கள் அழிந்து போவதில்லை யென்றும், யாரும் உம்முடைய கைகளிலிருந்து அவர்களைப் பறித்து கொள்ள முடியாதென்றும், அவர்களைக் கடைசி நாளில் உயிரோடெழுப்புவீர் என்றும் அவர்களுடைய தலையிலுள்ள ஒரு மயிராவது அழிந்து போவதில்லையென்றும் நீர் வாக்கருளி யிருக்கிறீர்.  194. ஆண்டவரே, உம்முடைய ஊழியன் என்னும் நிலையிலும், அவர்களுடைய சகோதரன் என்னும் நிலையிலும், இந்த ஜெபத்தை நான் ஏறெடுத்து, அவர்களைத் தேவனுடைய கரங்களில் சமர்ப்பிக்கிறேன். அவர்களுக்கு எந்த தீங்கும் நேரிடாமலிருப்ப தாக, அவர்களை சாத்தான் தேவனுடைய கரங்களிலிருந்து பறித்துக் கொள்ளாதிருப்பானாக. அவர்கள் உம்முடைய பரிசுகள். கூடுமானால் அவர்களுக்கு நீர் நீண்ட ஆயுளை அளித்து, கர்த்தருடைய வருகையை அவர்கள் காண கிருபை செய்யும். அவர்கள் இன்றிரவு இங்கிருந்து புறப்பட்டு சென்று, மற்றவர்களிடம் உம்மைக் குறித்து சொல்லி, அவர்களுடைய ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி, அவர்களை உம்முடைய இரட்சிப்பின் அறிவுக்குள் கொண்டு வருவார்களாக. பிதாவே, இதை அருளும். இவையாவும் உமது ஆதிக்கத்தில் உள்ளன. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.  195. நாம் சற்று நேரம் தலைவணங்கியிருக்கும் இந்நேரத்தில், இங்குள்ள யாராகிலும், நாம் ஜெபம் செய்து கொண்டிருந்தபோது அதிசயமான ஏதோ ஒன்று உங்கள் இருதயத்தில் நேர்ந்ததென்றும், இப்பொழுது முதல் கிறிஸ்துவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை நடத்துவேனென்றும், அவருடைய வருகை சமீபமாயுள்ளதை உணருவதாகவும், பிரகாசிக்கும் சிகப்பு விளக்கைக் குறித்து நான் பேசின யாவும் உண்மையென்றும், அது தேவனுடைய வார்த்தையென்றும் உணர்ந்து, இன்றிரவு முதல் நீங்கள் கிறிஸ்துவின் அருகாமைக்குள் கொண்டு வரும் மேலான வாழ்க்கையை நடத்துவீர்களென்று உறுதி பூண்டால்; ஏனெனில் இன்றிரவு நீங்கள் ஏறெடுத்த ஜெபமும், செய்த அறிக்கையும் - நீங்கள் தலை வணங்கி, உங்கள் கைகளையுயர்த்தி, "அதை நான் விசுவாசிக்கிறேன். இன்று முதல் நான் வித்தியாசமான வாழ்க்கை நடத்துவேன்” என்று கூறுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பா ராக! அது மிகவும் அருமையானது. சற்று முன்பு கையுயர்த்தின அனைவரும் மறுபடியும் கையுயர்த்தி, அதை ஏற்றுக் கொண்டதாக உறுதி கூறினர். 196. உங்கள் பாவமன்னிப்புக்கென்று நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் இதுவரை ஞானஸ்நானம் பெறவில்லை யென்றால் - நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் இயேசுகிறிஸ்துவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மணவாட்டி என்பவள் ஒருத்தி மாத்திரமே, அவள் கிறிஸ்துவின் மணவாட்டி, அவள் கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக் கொள்கிறாள்.  197.. நீங்கள் இதுவரை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம் பெறாமலி ருந்தால், அவருடைய ஊழியன் என்னும் நிலையில் இதை கூற விரும்புகிறேன்... நான் உண்மையைக் கூறுகிறேன் என்று தேவன் அடையாளங்களாலும் அற்புதங் களாலும் நிரூபித்திருப்பாரானால், பரி.பவுல் அப்போஸ்தலர் 19ல் கட்டளையிட்டபடி நானும் கட்டளையிடுகிறேன். பவுல் ஒரு கூட்டம் பாப்டிஸ்டுகளைச் சந்தித்தான். அவர்கள் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். அவன், “நீங்கள் விசுவாசித்த போது (பிறகு - Since) பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். அவர்கள், “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப் படவே இல்லை” என்றார்கள். அவன், "அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள், “நாங்கள் ஏற்கனவே யோவான் ஸ்நானன் மூலம் யோர்தானில் ஞானஸ்நானம் பெற்று விட்டோம் - இயேசு கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த அதே மனிதனின் மூலம்” என்றனர். 198. ஆனால் பவுலோ, “இக்காலத்துக்கு அது உபயோகமில்லை” என்று சொல்லி, மறுபடியும் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறும்படி கட்டளையிட்டான் - அப்.19:5. “இதைத் தவிர வேறொரு சுவசேஷத்தை வானத்திலிருந்து வருகிற ஒரு தூதன் பிரசங்கித்தாலும், அவன் சபிக்கப்பட்டவனா யிருக்கக்கடவன்” என்று பவுல் கூறினான் - கலா. 1:8. அதை உறுதிப்படுத்த மீண்டும், அதை கூறுகிறான். "முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன். "நீங்கள் ஏற்றுக் கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை வானத்தி லிருந்து வருகிற தூதன் (அல்லது போதகர், பேராயர், போப்; அது யாராயிருந்தாலும் சரி) பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனா யிருக்கக்கடவன்.'' நீங்கள் இதுவரை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறாமலிருந்தால், குளத்தில் தண்ணீர் உள்ள போதே, அங்கிகள் காத்திருக்கும்போதே, அவருடைய நாமத்தைக் கூப்பிட்டு, அந்த நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி உங்களுக்குக் கட்டளையிடுகிறேன், அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.  199. எங்கள் பரலோகப் பிதாவே, இனிமேல் அது உம்மைப் பொறுத்தது. என்னால் ஜனங்களைத் தூண்ட மாத்திரமே செய்ய முடியும். ஆனால் அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்வது என்பது என்னால் முடியாது. ஒரு மனிதனுடைய சித்தத்துக்கு விரோதமாய் நீர் கிரியை செய்வதில்லை. ஒரு மனிதன் அல்லது ஸ்திரீ நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்டிருந்தால், தேவனுடைய வெளிச்சம் அந்த வித்தின் மேல்பட்ட மாத்திரத்தில் அது உயிர் பெறும். பிதாவே, இன்றிரவு எங்கள் மத்தியில் அப்படிப்பட்ட ஜீவன் உண்டாயிருந்து அதன்மேல் உம்முடைய வெளிச்சத்தை நீர் பிரகாசிக்கச் செய்து, அவர்கள் சத்தியத்தை அறிந்து கொண்டிருந் தால், அவர்கள் தாமே தாழ்மையாகவும், இனிமையாகவும் குளத் தண்டை நடந்து சென்று உமது அன்பின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளட்டும்.  200. வேதத்தில் காணப்படும் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்து வின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்தனர். அவ்வகையில் ஞானஸ்நானம் பெறாதவர் மறுபடியும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருந்தது. இராஜ் யத்தின் திறவுகோலை உடையவனாயிருந்த அந்த மகத்தான அப்போஸ்தலன் பெந்தெகொஸ்தே நாளன்று, “நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள்” என்று கூறினான். பிதாவே, இன்றிரவு அது முழுமையாக நிறைவேறும்படி அருள் செய்வீராக.  201. இவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன், நான் கூறின இந்த சில வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும் உம்முடைய சமூகத்தில் பிரீதியாயிருந்து, உம்முடைய பிள்ளைகளுக்கு நீர் உத்தரவு அருளி, அவர்களுக்கு நித்திய ஜீவனைத் தந்தருளும், இரட்சிக்கப்படக் கூடிய அனைவரையும் நீர் இரட்சித்து, வியாதி யஸ்தரை சுகப்படுத்தும். இவர்களை நாங்கள் உம்மிடம் சமர்ப் பிக்கும் போது, தேவனுடைய கிருபை அவர்கள் மேல் தங்குவதாக. இயேசுவின் நாமத்தில்.  202. இப்பொழுது நாம் தலைவணங்கியிருக்கும்போது, பியானோ வாசிக்கும் சகோதரி இங்கு வரும்படியாக கேட்டுக் கொள்ளப் போகிறேன். இன்னும் ஐந்து நிமிடம் பொறுத்திருங்கள். யாராகிலும் ஞானஸ்நானம் பெற விரும்பினால் - அறிக்கையிட்டு விசுவாசித்தால்... இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் - உணர்ச்சி வசப்பட்டல்ல, உண்மையாக விசுவாசித்து, நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள் என்று அறிக்கையிட ஆயத்தமாயிருந்து, உங்கள் தகுதிகளின் பேரில் நீங்கள் சார்ந்திராமல், அவர் செய்ததன் பேரில் சார்ந்திருந்து, அவருடைய நாமத்தை தண்ணீர் ஞானஸ்நானத்தில் தரித்துக் கொண்டு, பரிசுத்த ஆவியின் மூலம் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினராக விரும்பினால், பெண்களின் அறை என் வலது புறத்திலும், ஆண்களின் அறை என் இடது புறத்திலும் உள்ளது. அங்கு ஞானஸ்நான அங்கிகள் ஆயத்தமாயுள்ளன.  203. நமது சகோதரி, “என் இரட்சகர் அழைப்பதை என்னால் கேட்க முடிகிறது” என்னும் பாடலை வாசிக்கும் போது, நாம் தலை வணங்கியிருப்போம். பாடலைத் தொடங்குபவர் அதை தொடங்கிக் கொடுத்தால்... நாம் தலைவணங்கியிருப்போம். ஆராதனை இப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவனின் கரத்தில் உள்ளது. ஞானஸ்நானம் பெற யாராகிலும் விரும்பினால், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற யாராகிலும் விரும்பினால், அந்த அறைக்குள் சென்று ஜெபம் செய்ய விரும்பினால், உங்களுக்கு ஆலோசனை தர அங்கு ஆலோசகர் உள்ளனர். இந்த வார்த்தைகள் வெறுமையாய் போகாமல், இவைகளின் நோக்கத்தை நிறைவேற்று வதாக நாம் தலை வணங்கினவர்களாக இந்தப் பாடலைப் பாடுவோம். என் இரட்சகர் அழைப்பதை என்னால் கேட்கமுடிகிறது (பாவியாகிய ஒவ்வொருவரும் இப்பொழுது ஜெபம் செய்யுங்கள்) என் இரட்சகர் அழைப்பதை என்னால் கேட்க முடிகிறது. (இன்று காலை மரித்துப்போன மனிதனை அவர் உயிரோடெழுப்பின போது, அவர் சத்தத்தை நீ கேட்டாயா?) என் இரட்சகர் அழைப்பதை (அவர் வார்த்தையிலிருந்து கொண்டு, தமது வெளிச்சத்தை பிரகாசித்த போது, அவருடைய சத்தத்தை உன்னால் கேட்க முடிந்ததா?) நான் அவருடன் செல்வேன், வழி நெடுக செல்வேன் (அவருடன் வழி நெடுக செல்ல நீ விரும்புகிறாயா? அவர் நடத்தும் இடத்திற்கு (என் சகோதரனே, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக! என் இடது பாகத்திலுள்ள மனிதர்களே! என் வலது பாகத்திலுள்ள ஸ்திரீகளே!) அவர் நடத்தும் இடத்திற்கு அவர் பின் செல்வேன் அவர் நடத்தும் இடத்திற்கு (“விசுவாசித்தவர்கள் ஞானஸ்நானம் பெற்றனர்” என்று வேதம் கூறுகின்றது). நான் அவருடன் செல்வேன், வழி நெடுக செல்வேன் நான் தோட்டத்தின் வழியாய் அவருடன் செல்வேன். நான் தோட்டத்தின் வழியாய் அவருடன் செல்வேன் நான் தோட்டத்தின் வழியாய் (பரிசுத்த ஆவியைப் பெற விரும்பி வலது புறத்திலுள்ள அறைக்குள் செல்லும் ஸ்திரீகளுக்கு ஆலோசனை கூற சகோதரிகள் செல்வீர்களா?) ... வழி நெடுக செல்வேன். அவர் நடத்தும் இடத்திற்கு (“அவர் நடத்தும் இடத்திற்கு அவர் பின்செல்வேன்” என்று நீ உண்மையாகக் கூற முடிகிறதா? நீ அப்படி செய்வாயா? உன்னுடன் பேசும் அந்த சிறு சத்தத்தைக் குறித்தென்ன? அவர் நடத்தும் இடத்திற்கு நீ செல்வாயா? சிகப்பு விளக்கைக் கவனி. அந்த வெளிச்சம் வீசுகிறதை நீ காண்கிறாயா? நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். நான் அவருடன் செல்வேன், வழி நெடுக செல்வேன் என் இரட்சகர் அழைப்பதை (அவர் எப்படி பேசுகிறார்? அவருடைய வார்த்தையின் மூலமாக உன் இருதயத்தில். இப்பொழுது நீ வருவாயா? இது உனக்கு அளிக்கப்படும் அழைப்பு. நாம் மறுபடியும் ஒன்று கூடுவதற்கு முன்பு அது நிகழ்ந்தால்? நீ எச்சரிக்கப்படுகிறாய்.) என் இரட்சகர் அழைப்பதை என்னால் கேட்க முடிகிறது. உன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றி வா” என்று அவர் நடத்தும் இடத்திற்கு (ஆலோசனை கூற சில சகோதரர்கள் என் இடது புறத்திலுள்ள அறைக்குச் செல்லுங்கள். ஞானஸ்நானத்திற்காக சகோதரர் ஆயத்தப் படுகின்றீர்களா? இங்குள்ள போதகர் சகோதரரில் சிலர் இங்கு வந்து உதவி செய்யுங்கள். எங்களுடன் அந்த அறைக்குள் செல்லுங்கள். அவர் நடத்தும் இடத்திற்கு (நீங்கள் உண்மையாக கூறுகின்றீர்களா?) நான் அவருடன் செல்வேன். வழி நெடுக செல்வேன்.  204. நீங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீர் ஞானஸ்நானம் பெறாமலிருந்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் பட்டப் பெயர்களினால் ஞானஸ்நானம் பெற்றிருந்தால், வேதத்தில் எவருமே பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் பட்டப்பெயர்களினால் ஞானஸ்நானம் பெறவில்லை. சபை சரித்திரத்தில், முதல் முன்னூறு ஆண்டு காலத்தில், யாருமே அந்த விதத்தில் ஞானஸ்நானம் பெறவில்லை. ரோமாபுரியிலுள்ள நிசாயா என்னுமிடத்தில், நிசாயா ஆலோசனை சங்கம் கூடி, ரோமன் கத்தோலிக்க மார்க்கம் நிறுவப்பட்ட வரையிலும், எல்லோருமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மாத்திரமே ஞானஸ்நானம் பெற்று வந்தனர். அதன் பின்புதான் அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் பட்டப் பெயர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்குப் பதிலாக உபயோகிக்கத் தொடங்கினர்.  205. எந்த சரித்திரக்காரனாகிலும், அல்லது போதகர் யாராகிலும், அல்லது வானொலியில் இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அல்லது இந்த ஒலி நாடாவைக் கேட்பவர்கள் யாராகிலும், ரோமன் கத்தோலிக்க சபை நிசாயாவில் நிறுவப்படுவதற்கு முன்பு எவராகிலும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயல்லாமல் வேறு வகையில் ஞானஸ்நானம் பெற்றதாக ஆதாரம் காண்பிக்க முடிந்தால், அதை எனக்குக் காண்பிக்கக் கடமைப்பட்டவராயிருக் கின்றனர். அப்பொழுது நான் அவர்களிடம் மன்னிப்பு கோருவேன். அப்படி இல்லவே இல்லை. இயேசு கிறிஸ்துவின் நாமத் தினால் ஞானஸ்நானம் பெறாதவர், அவர்கள் மகிமைக்குள் பிரவேசிக்கும் முன்பு, மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும்படி கட்டளை யிடப்பட்டனர். இனிமேல் அது உங்களைப் பொறுத்த விஷயம்,  206. இன்று பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஜனங்கள் ஞானஸ்நானம் கொடுக்கிறது போல், வேதத்தில் யாருமே ஞானஸ்நானம் பெறவில்லை. அது ரோமன் கத்தோலிக்க கோட்பாடு. அது மார்டின் லூத்தர், ஜான் வெஸ்லி இவர்களின் வழியாக வந்து, இப்பொழுதும் நீடித்து வருகிறது. கடைசி நாட்கள் வரை அது அப்படித்தான் இருக்குமென்று வேதம் முன்னறிவித்துள்ளது என்றும், கடைசி நாட்களில் வாசல் திறக்கப் படுமென்றும், நாம் ஏழு சபை காலங்களைக் குறித்து சிந்தித்தபோது பார்த்தோம். 207. எனவே அது உங்களைப் பொறுத்த விஷயம். நான் செய்தியைக் கொண்டு வரும் ஒரு செய்தியாளன். மறுபடியுமாக நாம் அதை விசுவாசிப்போம். இப்பொழுது வாசல் திறந்திருக்கிறது. ஞானஸ்நான அறை நிரம்பியுள்ளது... அங்கிகளும் ஆயத்தமா யுள்ளன. இன்னும் சில நிமிடங்களில் நாங்கள் ஞானஸ்நானம் கொடுக்கத் தொடங்குவோம்.  208. இங்குள்ள யாராகிலும் ஞானஸ்தானம் பெறாமலிருந்தால், இந்தப் பாடலைப் பாடும்போது, நீங்கள் வரமாட்டீர்களா?